நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘கில்லர் சூப்’ இயக்குநர் அபிஷேக் சௌபே பற்றி நடிகர் நாசர்!
நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘கில்லர் சூப்’ இயக்குநர் அபிஷேக் சௌபே பற்றி நடிகர் நாசர்!சென்னை 16 ஜனவரி 2024 சினிமா குறித்தான விரிவான பார்வை மற்றும் தனது அனுபவத்திற்காகக் கொண்டாடப்படுவர் நாசர்.
நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘கில்லர் சூப்’ படம் அவரது நடிப்புத் திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இதில் நடிகர்களின் நடிப்புத் திறன் மட்டுமல்லாது, இயக்குநர் அபிஷேக் செளபேயின் இயக்கத் திறமையும் இதில் அழகாக வெளியாகியுள்ளது.
நடிகர் நாசர் தனது சமீபத்திய படமான ‘கில்லர் சூப்’ இயக்குநர் அபிஷேக் செளபே குறித்துப் பேசியுள்ளார்.
நடிப்புத் துறையில் மிகவும் மதிப்பிற்குரிய நடிகரான நாசர், அவரது சினிமா வாழ்வில் இயக்குநர் அபிஷேக் சௌபேயுடன் பணிபுரிந்ததை மிக முக்கியமானதாகக் கருதுகிறார்.
இதுகுறித்து அவர் பேசும்போது…
நான் இதுவரை 400க்கும் மேற்பட்ட இயக்குநர்களுடன் பணி புரிந்திருக்கிறேன்.
அதில் அபிஷேக் தனித்துவமானவர்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது…
இயக்குநர்- நடிகர் என்ற வழக்கமான உறவு முறையில் இருந்து அபிஷேக் முற்றிலும் மாறுபட்டவர்.
அவர் எப்போதும் ஒரு பாஸ் போல படப்பிடிப்புத் தளத்தில் நடந்து கொண்டது இல்லை.
படக்குழுவினர் அனைவரும் இது எங்களது படம் எனக் கருதும் அளவுக்கு ஒவ்வொருவருடனும் தன்மையாகவும் அன்பாகவும் நடந்து கொண்ண்டார்.
இந்தப் பண்பு, சினிமாவில் மிக அரிதானது.
இந்தப் பண்பு ஒரு வசதியான சூழ்நிலையை உருவாக்கி, கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை நம்பிக்கையுடன் வெளிக்கொண்டு வர வழிவகுக்கிறது” என்றார்.
அபிஷேக் செளபேயின் திறமையான இயக்கத்தில், நடிகர்களின் திறமையான நடிப்பில், க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த ‘கில்லர் சூப்’ நெட்ஃபிலிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது.
Related posts:
அபிஷேக் செளபே இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி உள்ள ’கில்லர் சூப்’ தொடர் பற்றி துபாளி !!
நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ’அஸ்வின்ஸ்’ அற்புதமான வரவேற்பைப் பெற்று வருகிறது!
நடிகர் நாசர் மீது அவரது சகோதரர்கள் மீண்டும் புகார்
மறைந்த முன்னாள் நடிகர் சங்க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் இறுதி மரியாதை செலுத்தினார்!!
நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைகிறது!
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட விஷால் மற்றும் கார்த்தி அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
Tribal Horse Entertainment சார்பில் நடிகர் கிருஷ்ணா வழங்கும் இயக்குநர் திரு இயக்கத்தில், நடிகை அஞ்சலி நடித்திருக்கும் “ஜான்சி” இணைய தொடர், Disney plus Hotstar தளத்தில் ப்ரத்யேகமாக வெளியாகிறது !
நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டி – நாசர் அறிவிப்பு
ஒரே ஒரு படம் நடித்து 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை கிடைத்தது: நடிகர் அபிஷேக் பேச்சு!
தமிழ் திரையுலகில் வெள்ளி விழா காணும் ‘மோகமுள்’ மற்றும் வெற்றிகரமான 25 ஆண்டுகள் நடிகர் இயக்குனர் அபிஷேக் சங்கர்’ .!

