உதயநிதி ஸ்டாலின் அருண்ராஜா காமராஜ் போனி கபூர் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த நேர் கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்திருந்தார் தயாரிப்பாளர் போனி கபூர்.

இந்தியில் சூப்பர் ஹிட்டான பிங்க் திரைப்படத்தை தான் தமிழில் மொழி மாற்றம் செய்திருந்தனர்.

தற்போது நடிகர் அஜித்குமார் நடிப்பில் வலிமை திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

கனா திரைந்படத்தின் மூலமாக தமிழ் திரைப்பட உலகில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் அருண்ராஜா காமராஜ். அதற்கு முன்பு அவர் நடிகர், பாடலாசிரியர் போன்ற பல விஷயங்களையும் செய்து வந்தார்.

சிவகார்த்திகேயன் தயாரித்த கனா திரைப்படம் மூலமாக அவர் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

அதன் பிறகு தனது இரண்டாவது திரைப்படம் பற்றி பல நாட்களாக அறிவிக்காமல் இருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.

இந்நிலையில் ஹிந்தியில் சூப்பர்ஹிட் ஆன ஆர்ட்டிகல் 15 படத்தின் தமிழ் மொழிமாற்றம் செய்ய இருக்கிறார்.
அருண்ராஜா காமராஜ்.
என தகவல் தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது மற்றொரு சூப்பர் ஹிட்டான ஹிந்தி திரைப்படத்தையும் தமிழுக்கு கொண்டு வருகிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.

இந்தியில் 2019 ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய சூப்பர் ஹிட்டான திரைப்படமான ஆர்ட்டிகிள் 15. அயுஷ்மன் குரானா நடித்திருந்த இந்த திரைப்படத்தில் ஏழைச்சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக கதை இருக்கும.

அந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிக்கு சாதி தடங்கல்கள் வருவதும், அதனை அவர்
முறியடிப்பதுமே திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கும்.

இந்த ஆர்ட்டிகிள் 15 திரைப்படம் தமிழில் மொழி மாற்றத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

தயாரிப்பாளர் போனி கபூர் இந்த திரைப்படத்தை தயாரிக்க இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் ரீமேக் தொடர்பான செய்தியை நாம் 2 மாதங்களுக்கு முன்பே வெளியிட்டு இருந்தோம்.

அதற்கான நமது இனையத்தில் உள்ள லிங்க் இதோ…

உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.