AK60 ஷூட்டிங் பற்றி போனி கபூர் அதிகாரபூர்வ அறிவிப்பு! தல ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ம் தேதி திரைக்கு வருகிறது. பிங்க் படத்தின் ரீமேக்கான இதை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் தல அஜித்தின் அடுத்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். AK60 என அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாத இறுதியில் துவங்கும் என அறிவித்துள்ளார் போனி கபூர்.

இயக்குனர் எச்.வினோத் தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.