நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று (31 அக்டோபர் 2024) உலகமெங்கும் வெளியாகிறது !!
நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று (31 அக்டோபர் 2024) உலகமெங்கும் வெளியாகிறது !!திரைப்படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்திய ராணுவ வீரர்களின் தீரம் மிக்க வீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி இருக்கிறார்.
காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் இந்தப் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்திய இராணுவ மேஜர் வரதராஜனாக நடிக்கும் கதாநாயகன் சிவகார்த்திகேயன் உணர்ச்சிகரமான நடிப்பையும், அதிரடி ஆக்சனையும் வெளிப்படுத்தியிருப்பதால் அமரன் திரைப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
கதாநாயகி சாய் பல்லவி தனது ஆழமான நடிப்பினால் படத்துக்குச் சிறப்பானப் பங்களிப்பை அளித்துள்ளார்.
கதாநாயகன் சிவகார்த்திகேயன் படத்துக்கு முதன்முறையாக இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ். சண்டைக்காட்சிகளை அன்பறிவு மாஸ்டர்கள் மற்றும் ஸ்டெஃபான் ரிக்டர் இணைந்து வடிவமைத்துள்ளனர்.
இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் சி.எச். சாய்.
புரொடக்ஷன் டிசைனர் ராஜீவன், கலை இயக்குனர் சேகர், எடிட்டர் ஆர். கலைவாணன் மற்றும் துணைத் தயாரிப்பாளர் காட் ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட் ஆகியோர் படத்துக்குப் பலம் சேர்த்துள்ளனர்.
தன்னலமற்ற நமது இந்திய இராணுவ வீரர்களின் வீரத்தைக் கண்டு வியக்கவும், தியாகத்தைப் போற்றவும் தயாராகுங்கள்.
ஜெய் ஹிந்த்!
Related posts:
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று (31 அக்டோபர் 2024) உலகமெங்கும் வெளியாகிறது !
SK21 திரைப்படத்தின் பெயரை, நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் அன்று டீசரின் வழியாக .அறிவித்துள்ளார்கள்.!!
பிரின்ஸ் துருவா சர்ஜாவின் “மார்ட்டின்” திரைப்படம் உலகமெங்கும் 11 அக்டோபர் 2024 வெளியாகிறது !!
நடிகர் அருண் விஜய் நடிக்கும், “பார்டர்” திரைப்படம் உலகமெங்கும் 2022 அக்டோபர் 5 வெளியாகிறது !!!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான்’ திரைப்படம் இந்த 2023 வருட தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.!!
ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் சிங்கப்பூர் சலூன் 2024 ஜனவரி 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது !!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் “டாக்டர்” திரைப்படம் உலகமெங்கும் அக்டோபர் 9 ஆம் தேதி வெளிவருகிறது.
நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் “வேழம்” திரைப்படம் ஜூன் 24 2022 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது !!
தீபாவளி அன்று வெளியாகும் என்னுடைய முதல் திரைப்படம் “பிரின்ஸ்” சிவகார்த்திகேயன்!!
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘தி ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி அன்று தெலுங்கிலும், தமிழிலும் வெளியாகிறது !!

