அமேசான் ப்ரைம் வீடியோ சூப்பர்ஸ்டார் தனுஷின் சமீபத்திய பிளாக்பஸ்டர், Karnan டிஜிட்டல் பிரீமியரை மே 14 அன்று மேற்கொள்ளவுள்ளது

சென்னை 10 மே 2021

அமேசான் ப்ரைம் வீடியோ சூப்பர்ஸ்டார் தனுஷின் சமீபத்திய பிளாக்பஸ்டர், Karnan டிஜிட்டல் பிரீமியரை மே 14 அன்று மேற்கொள்ளவுள்ளது

V  கிரியேஷன்ஸின் கீழ் மாரி செல்வராஜ் எழுதி இயக்கிய மற்றும் கலைப்புலி S. தானு அவர்கள் தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷ், லால், யோகி பாபு, அழகம் பெருமாள், நடராஜன் சுப்பிரமணியம், ராஜிஷா விஜயன், கௌரி ஜி. கிஷன், மற்றும் லட்சுமி பிரியா சந்திரமௌலி ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்

இந்தியாவிலும் 240 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் இருக்கும் பிரைம் உறுப்பினர்களும் 2021 மே 14 முதல் ஆக்‌ஷன் டிராமா கர்ணனின் பிரத்யேக டிஜிட்டல் ப்ரீமியரை ஸ்ட்ரீம் செய்து மகிழலாம்

மும்பை, 10 மே 2021 – வெற்றிகரமான மாஸ்டர் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரைத் தொடர்ந்து, அமேசான் பிரைம் வீடியோ இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு தமிழ் ஆக்‌ஷன் டிராமா திரைப்படமான Karnanன் பிரத்யேக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் தனுஷின் Karnan மே 14 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் கிடைக்கப்பெறும் பிரபலமான தமிழ் பிளாக்பஸ்டர்கள் அடங்கிய வலுவான வரிசையில் சேரவுள்ளது.

சிறந்த நடிப்பு மற்றும் வலியுறுத்தும் கதைகூறலை வெளிப்படுத்தும் வகையில் தனுஷ் நடித்துள்ள Karnan ஒரு மனோதிடம் மிக்க கதாபாத்திரத்தைக் கொண்ட அதிரடி ஆக்‌ஷன்-டிராமா ஆகும். தனது கிராம மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு துணிச்சலான இளைஞரான கர்ணனின் வாழ்க்கையை இப்படம் மையமாகக் கொண்டுள்ளது. இந்த கதை அவர்களின் போராட்டங்கள், அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் சாதிவாதம் மற்றும் காவல்துறை அராஜகத்திற்கு எதிரான அவர்களது எழுச்சியை விவரிக்கிறது. இந்தியாவிலும் 240 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் அமேசான் பிரைம் வீடியோவில் ‘Karnan’  டிஜிட்டல் பிரீமியரை 2021 மே 14 முதல் பார்த்து மகிழலாம்.

அமேசான் பிரைம் வீடியோவில் Karnanன் டிஜிட்டல் பிரீமியர் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த, இந்தியாவின் அமேசான் பிரைம் வீடியோவின் இயக்குனரும் உள்ளடக்கத் தலைவருமான விஜய் சுப்பிரமணியம் அவர்கள், “அமேசான் பிரைம் வீடியோவில் எங்கள் கவனம் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான பார்க்கும் அனுபவத்தை வழங்குவதன் மீதே அமைந்துள்ளது. ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்தவும் வளப்படுத்தவும் உதவும் வழிகளை நாங்கள் தொடர்ந்து தேடுகிறோம். அதன் ஒரு முக்கியமான அம்சம், பார்வையாளர்களின் கவனத்தைக் கைபற்றத் தவறாத ஆழமாக கதைகளை வழங்குவதாகும். Master, Maara, Soorarai Pottru, Putham Pudhu Kaalai, Nishabdham போன்ற பல வெற்றிபெற்ற தமிழ் படங்களின் ப்ரீமியரைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள திரைப்பட ஆர்வலர்களுக்கான ஸ்ட்ரீமிங் சேவையில் கர்ணன் என்ற மற்றொரு புகழ்பெற்ற படத்தை கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினார்.

தனது படத்தின் டிஜிட்டல் பிரீமியர் அறிவிப்பு குறித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட, எழுத்தாளர் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள், “தனுஷின் அற்புதமான நடிப்பின் ஆற்றலுடன், ஒரு வலுவான கதைக்களம் கொண்ட இந்த படம் ரசிகர்களிடையே வெற்றிபெறக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை நான் நன்கு அறிவேன். அமேசான் பிரைம் வீடியோ அதன் பரந்த அளவிலான பார்வையாளர்களை எந்தப் படத்தையும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பார்க்க அனுமதிக்கிறது, இதுவே வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையின் சிறப்பம்சமாகும். மே 14 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் இந்த படம் டிஜிட்டல் ப்ரீமியரில் கிடைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.” என்று கூறினார்.

Link – https://www.instagram.com/p/COrrTeeo6L7/?igshid=qc120arkt1j4

XXX