‘அங்கீகாரம்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- கே.ஜெ.ஆர், விஜி  வெங்கடேஷ், இசபெல்லா, வசுந்தரா, சிந்தூரி விஸ்வநாத், அஜித் கோஷி, ரமா, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், செல்வி, ஜானகி, ராம்ஜி, அருள் டி. சங்கர், கார்த்திக், அந்தோணி, ஷான், விமல்குமார், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஜே.பி. தென்பாதியான்.

ஒளிப்பதிவாளர் :- ஏ.விஸ்வநாத் | DF Tech.

படத்தொகுப்பாளர் :- தினேஷ் குமார்.

இசையமைப்பாளர் :- ஜிப்ரான் வைபோதா.

தயாரிப்பு நிறுவனம் :-ஸ்வஸ்திக் விஷன்ஸ்

தயாரிப்பாளர்கள் :-எஸ். கே. பிரசாந்த், அஜித் பாஸ்கர், அருண் முருகன்.

மக்கள் தொடர்பு :- யுவராஜ்.

ரேட்டிங் :-  4./5.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படம், அடித்தட்டு தடகள வீரர்களின் உரிமைப் போராட்டத்தையும், அவர்கள் சந்திக்கும் சமூக மற்றும் அமைப்பு ரீதியான சவால்களையும்  விளையாட்டு வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் அவர்கள் நீதிமன்றம் வரை செல்லும் அவலத்தை நிலையை  உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளார் இயக்குநர் ஜெ.பி. தென்பாதியான்.

தடகள விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத் துறையின் அவலங்களையும் மையமாகக் கொண்டு பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் விளையாட்டுத்துறையில் நடக்கும் அனைத்து விதமான பெண்களுக்கு பாலியல் ரீதியாக நடக்கும்  தொல்லைகளையும் அரசு ஒதுக்கும் தொகைகள்   அனைத்து பல கோடிகளையும்  சலுகைகளையும் விளையாட்டுத் துறையில் இருக்கும் அதிகாரிகள்  மற்றும் அரசியல்வாதிகள் எப்படி எல்லாம் திருடுகிறார்கள் என்பதை  தெளிவாகவும் மற்றும் பயமில்லாமலும் இந்த ‘அங்கீகாரம்’ திரைப்படத்தை  உருவாக்கியுள்ளார்கள்.

தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘அங்கீகாரம்’ திரைப்படம் ஜூன் 26, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சென்னை சேப்பாக்கம் குடிசை  பகுதிகளில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்க்கும் அம்மா ரமா  வழக்கறிஞராகப் பயிற்சி பெற்று வரும் மகள், இசபெல்லா அத்லெட் வீரரான மகன் கதாநாயகன் கேஜேஆர் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு  எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென பல கனவுகளுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் மட்டுமே தனது  குடும்பம் கஷ்ட சூழ்நிலையில் இருந்து மீள முடியும் என்ற எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கதாநாயகன் கேஜேஆர் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள விடாமல் அதிகாரமும், சாதிய அடக்குமுறை மற்றும் அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சிகளும், சமூக அநீதிகளும் காரணமாக கலந்துகொள்ள விடாமல் சூழ்ச்சி செய்கிறார்கள்.

அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சிகளும், எதிராக நீதிமன்றத்திற்கு சென்று காமன்வெல்த் போட்டியை நடத்தக் கூடாது என்று  கதாநாயகன் கேஜேஆர் வழக்கு தொடர்கிறார்.

காமன்வெல்த் போட்டியை நடத்தக் கூடாது என்று வழக்கு காரணமாக காமன்வெல்த் போட்டி நடந்ததா? நடக்கவில்லையா

நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கதாநாயகன் கேஜேஆர் வெற்றி பெற்றாரா? வெற்றி பெறவில்லையா?  என்பதுதான் இந்த ‘அங்கீகாரம் ‘ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த  அங்கீகாரம் ‘ திரைப்படத்தில் கதாநாயகனாக தயாரிப்பாளர் கே.ஜி.ஆர் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் கே.ஜி.ஆர் தனது முதல் திரைப்படத்திலேயே கவனிக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக உணர்ச்சிகரமான காட்சிகளில் அவரது நடிப்பின் அர்ப்பணிப்பு தெள்ள தெளிவாகத் தெரிகிறது.

கதாநாயகனாக நடித்திருக்கும் கே.ஜி.ஆர் நடிப்பு ஆக்ஷன் என அனைத்துக் காட்சிகளிலும்  அருமையாக நடித்திருக்கிறார்.

தமிழ் திரைப்பட உலகம் கதாநாயகன் நடிச்சிருக்கும் கே ஜி ஆர் அவர்களை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கும்.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் விஜி வெங்கடேஷ், சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, வசுந்தரா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட அனைத்து நடிகர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் கதைக்கு வலுசேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் விஸ்வநாத் ஒளிப்பதிவு மூலம் கிரவுண்ட் காட்சி முதல் க்ளைமாக்ஸ் காட்சிவரை மிகவும் கச்சிதமான காட்சி படுத்தி தனது சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதையிலுள்ள கனத்தை நமக்கு கடத்துகிறது.

ஒரு ஒடுக்கப்பட்ட பின்னணி கொண்ட இளைஞன் திறமை இருந்தும் தனக்கான அங்கீகாரத்தைப் பெற எவ்வளவு போராட வேண்டியுள்ளது என்பதை சமரசமின்றி இயக்கியிருக்கிறார்  இயக்குநர் தென்பதியன்.

மொத்தத்தில்’ இந்த ‘அங்கீகாரம்’ ஒரு திரைப்படமாக மட்டுமல்ல, சமூக அநீதிக்கு எதிராக எழுப்பப்பட்ட ஒரு வலுவான குரலாகவும் திகழ்கிறது.

error: Content is protected !!