‘பாலன் – தி பாய்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- டொவினோ தாமஸ், ஆதிசேஷன், ஃபர்சானா பாலதிங்கல், சந்து சலீம்குமார், கே.ஆர், முகமது ஜினான், சினான், ஜீன் பால் லால், கிரிஷ் A.D,  பிரான்சிஸ் அலெக்ஸ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சிதம்பரம்.

ஒளிப்பதிவாளர் :- ஷைஜூ காலித்.

படத்தொகுப்பாளர் :- விவேக் ஹர்ஷன்.

இசையமைப்பாளர் :- சுஷின் ஷ்யாம்.

தயாரிப்பு நிறுவனம் :- கேவிஎன் புரொடக்ஷன்ஸ், தெஸ்பியன் ஃபிலிம்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- வெங்கட் கே. நாராயணா, ஷைலஜா தேசாய் ஃபென்.

மக்கள் தொடர்பு :- ஸ்ரீ வெங்கடேஷ்.

ரேட்டிங் :-  3.5./5.

கற்ப்பை சூறையாடப்பட்டு வஞ்சிக்கப்பட்ட கதையின் நாயகியான பர்சானா பலதிங்கள், அவனால் வயிற்றில் ஒரு குழந்தையை சுமந்த நிலையில் அவனைக் கொலை செய்துவிட்டு சிறைச்சாலைக்கு செல்கிறாள்.

சிறைக்குள் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்து பல ஆண்டுகள் கழித்து தன்னுடைய மகனுடன் சிறையிலிருந்து கதையின் நாயகியான பர்சானா பலதிங்கள் விடுதலையாகி வெளியே வருகிறார்.

சமுதாயத்தில் மீது நம்பிக்கை இல்லாமலும் யார் மீதும் நம்பிக்கை வைக்க முடியாமல் பல ஊர்களில் பலவிதமான  அடையாத்தோடு மாற்றிக் கொண்டு அலைகிறார்.

இந்த நிலையில் தனது மகன் கெட்டவனாக மாறிவிடக்கூடாது என்பதற்காக வஞ்சகனாகவோ, வாழக் கூடாது என்பதால்தான் தன்னுடைய அடையாளங்களை மாற்றிக் கொண்டு பயணப்படுகிறார்.

பல்வேறு அடையாளங்களுடன் பயணிக்கும் கதையின் நாயகியான பர்சானா பலதிங்கள் மாறி மாறி ஓடும் வாழ்க்கைப் பாதையில்  தனிமையில் வாழும் ஒரு வயதான மூதாட்டியை கவனித்துக்கொள்ளும் வேலை கிடைக்க, ஒரு கட்டத்தில் அங்கேயே தங்கி  தனது வாழ்க்கையைத் தொடர முடிவெடுத்து, தனது மகனையும் பள்ளியில் சேர்க்கிறார்.

பள்ளிக்கு சென்று தினந்தோறும் பள்ளி முடிந்து வரும் தனது மகனை எப்போதும் அழைத்து வரும் கதையின் நாயகியான பர்சானா பலதிங்கள்,  தன் மகனுக்கு ஒரு கட்டளை இடுகிறார்.

அம்மா வரும்வரை எவ்வளவு நேரம் ஆனாலும்  காத்திருக்க வேண்டும் என்பதுதான் அந்த கட்டளை.

அப்படி ஒருநாள் பள்ளி முடிந்து வந்து அவன் காத்திருக்க, தனது அம்மா கதையின் நாயகியான பர்சானா பலதிங்கள், தன்னை கூப்பிட்டு போங்க வராமல் இருக்க சிறுவனை காவல்துறையினர் மீட்டுக் கொண்டு காவல் நிலையத்திற்கு செல்கிறார்கள்.

இந்த நிலையில் கதையின் நாயகியான பர்சானா பலதிங்கள், மகனுடன் மீண்டும் இணைந்தார்களா?, இணையவில்லையா?,  என்பதுதான் இந்த ‘பாலன் – தி பாய்’  திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘பாலன்’  திரைப்படத்தின் கதையின் நாயகியாக பர்சானா பலதிங்கள், நடித்திருக்கிறார்.

உண்மையிலேயே சமுதாயத்தால் வஞ்சிக்கப்பட்ட பெண் கூட இந்த அளவிற்கு இருப்பார்களா என்ற அளவிற்கு உணர்வு பூர்வமாக அற்புதமான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

கதையின் நாயகியாக பர்சானா பலதிங்கள், மகன்  கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் ஆதிசேஷன் நடிப்பின் மூலம் ரசிகர்கள் நெஞ்சை கொள்ளை கொள்கிறான்.

வெவ்வேறு ஊர்களுக்கு சென்று தங்களுடைய  அடையாளங்களை மாற்றிக் கொள்ளும்போது தனது தாயிடம் “அடுத்த கதை என்னம்மா..?” என்று  அவன் கேட்பது அழகாகவும்  நெகிழ்ச்சியாகவும் உள்ளது

வளர்ந்த  சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜினள் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜீன் பால் லாலின் வில்லத்தனம் பயமுறுத்துகிறது.

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் டோவினோ தாமஸின், திரை இருப்பு மற்றும் வித்தியாசமான தோற்றம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

இந்த ‘பாலன் – தி பாய்’ திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஷைஜூ காலித் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையில் பாடல்கள் மிகவும் நேர்த்தியான திரைப்படம் என்பதை உறுதி செய்கிறது.

’மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சிதம்பரம் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம், துவக்கம் முதல் இறுதி வரை இறுக்கமான கதாபாத்திரங்கள் மற்றும் அமைதியான சூழல்களோடு பயணித்தாலும், யூகிக்க முடியாத திருப்பங்களோடு சுவாரஸ்யமான சிறந்த திரைப் படைப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிதம்பரம்.

மொத்தத்தில், ‘பாலன் – தி பாய்’ திரைப்படம் தாயும் மகனும் பாசத்தை காட்டுகிறது.

error: Content is protected !!