இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள் மறைவிற்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ ஆழ்ந்த இரங்கல் !!

இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள் மறைவிற்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ ஆழ்ந்த இரங்கல் !!

சென்னை 10 ஜூன் 2026 தமிழ் திரைப்பட உலகின் பெருமைமிகு படைப்பாளரும், இயக்குநர் இமயம் என எல்லோராலும் போற்றப்படும் வல்லமை மிக்கவருமான பாரதிராஜா அவர்களின் மறைவு செய்தி திரையுலகினரையும், ரசிகர்களையும் மிகுந்த அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

கிராமிய மண்வாசனையையும், மனித உணர்வுகளையும் தனது படைப்புகளின் மூலம் உலகம் முழுவதும் கொண்டு சென்ற பாரதிராஜா, தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக திகழ்ந்தார். பல தலைமுறை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரைப்பட ரசிகர்களின் மனதில் அழியாத தடம் பதித்துள்ள அவரது பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது.

அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். கலை உலகின் மகத்தான ஆளுமையை இழந்து வாடும் இந்த வேளையில், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் … மற்றும் ரசிகர்களுக்கு … 71 ஆண்டு பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் ‘ சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் ஆன்மா சாந்தியடைய 71 ஆண்டு பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்க  உறுப்பினர்கள் அனைவரும் இறைவனை பிரார்த்திக்கிறோம்.

நிர்வாகிகள் உறுப்பினர்கள் & செயற்குழு உறுப்பினர்கள் சினிமா பத்திரிகையாளர் சங்கம்.

error: Content is protected !!