Monday, October 26
Shadow

இசையமைப்பாளர் அம்ரிஷ் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு பி.ஆர்.கே சினி காலண்டர் ராயல் பிரபாகர் அம்ரிஷை மரக்கன்றை நட வைத்தும் பிறந்தநாளை கொண்டாடினார்கள்.

சென்னை : 15 அக்டோபர் 2020

இசை அமைப்பாளர் அம்ரிஷ் பிறந்தநாளை முன்னிட்டு பி.ஆர்.கே சினி காலண்டர் ராயல் பிரபாகர் அம்ரிஷை மரக்கன்றை நட வைத்தும், அவருக்கு கோவில் பிரசாதம் கொடுத்தும் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பி.ஆர்.கே சினி பர்த்டே காலண்டர்’ ராயல் பிரபாகர் தமிழ் சினிமா வி.ஐ.பி.களிடையே பிரபலமானவர்.

  • கடந்த 14 வருடங்களாக தொடர்ந்து, சினிமாத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் சினிமா பத்திரிகையாளர்களின் பிறந்தநாளன்று அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி மகிழ்விப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக கோயிலுக்குச் சென்று பிறந்தநாள் காண்பவரின் பெயரில் அர்ச்சனை செய்வதையும் தொடர்கிறார்.

சிலர் இவரின் அன்பிற்காக அர்ச்சனையின் போது நேரில் வருவதும் உண்டு. சமீபத்தில் நடிகர் யோகிபாபு கூட அப்படி வந்திருந்து ராயல் பிரபாகரை மனதாரப் பாராட்டியிருந்தார்.

ராயல் பிரபாகர் தனது நற்பணியின் அடுத்தகட்டமாக, திரையுலகப் பிரபலங்கள், பத்திரிகையாளர்களின் பிறந்தநாளன்று அவர்களைச் சந்தித்து, மரக்கன்று வழங்கி அதை அவர்களின் வசிப்பிடத்தில் நடச்செய்கிற முயற்சியைத் தொடங்கியிருக்கிறார். இந்த நற்செயலை இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் கடந்த 13.10.2020 அன்று தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, 15.10.2020 அன்று பிறந்தநாள் காணும் இசையமைப்பாளரும், நடிகை ஜெயசித்ராவின் மகனுமாக அம்ரிஷ் அவர்களைச் சந்தித்து மரக்கன்று வழங்கி, நடச் செய்து வாழ்த்து தெரிவித்தார்.