தருமியின் கேள்வியும்… சிவனின் பதிலும்… தலைமுறைகள் கடந்தும் மறையாத அந்தத் திரை மாயம் மீண்டும் திரையரங்குகளில்! ‘திருவிளையாடல்’ நவம்பர் 27, 2026 தேதி ரீ-ரிலீஸ்!

தருமியின் கேள்வியும்… சிவனின் பதிலும்… தலைமுறைகள் கடந்தும் மறையாத அந்தத் திரை மாயம் மீண்டும் திரையரங்குகளில்! ‘திருவிளையாடல்’ நவம்பர் 27, 2026 தேதி ரீ-ரிலீஸ்!

சென்னை 10 நவம்பர் 2026 அருட்செல்வர் இயக்குநர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில், திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசையமைப்பில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1965ஆம் ஆண்டு வெளியான ‘திருவிளையாடல்’ திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முத்துராமன், டி.எஸ். பாலையா, நாகேஷ், ஏ.பி. நாகராஜன், சாவித்திரி, தேவிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தில், தருமியாக நடித்த நாகேஷுக்கும், சிவனாக நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் இடையே இடம்பெற்ற உரையாடல் காட்சி இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.

திரையுலகில் வெளியாகி 61 ஆண்டுகளைக் கடந்துள்ள ‘திருவிளையாடல்’ திரைப்படம், தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வரவுள்ளது.

இதற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான அக்டோபர் 1ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிவாஜி கணேசனின் பேரனும், சிவாஜி ராம்குமாரின் மகனுமான தர்ஷன், சிவாஜியின் சகோதரர் வி.சி. சண்முகத்தின் மகன் கிரி சண்முகம் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டனர். மேலும், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், இளவரசு, இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், கதாசிரியரும் இயக்குநருமான பூபதி ராஜா, முனைவர் மருது மோகன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.

லண்டன் மற்றும் ஜெர்மனியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள இப்படத்தை, ஸ்ரீ பால விநாயகர் பிக்சர்ஸ் சார்பில் ஜி. லதா வெளியிடுகிறார்.

இம்மாதம் நவம்பர் 27, 2026 தேதி உலகம் முழுவதும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சிவாஜி கணேசனின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் வெளியீட்டுப் பணிகளை, சிவாஜியின் தீவிர ரசிகரான பி.வி. முரளி ஒருங்கிணைத்து வருகிறார்.

கொஞ்சம் யூனிக்கா, மைன்ட் neutralizer தரவும். ஒரு மாதிரி காமனா இல்லாம, something யூனிக்கா அருமையான சிறப்பான தலைப்பு வேண்டும்

CLOSE
CLOSE
error: Content is protected !!