‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் வெளியிட்டு தேதி அப்டேட் கொடுத்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் !

‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் வெளியிட்டு தேதி அப்டேட் கொடுத்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் !

சென்னை 05 ஜனவரி 2026 நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்துள்ளார்.

இந்த ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தில் முதலில் நடிகர் சூர்யாவை நடிக்க வைத்து ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் 2010 ஆம் ஆண்டு ஆரம்பித்தார்.

ஆனால் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறிய
கதையில் உடன்பாடு இல்லாத காரணத்தால் இந்த ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தில்
இருந்து நடிகர் சூர்யா விலகினார்.

இந்த ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்திற்காக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறிய கதையை கேட்ட நடிகர் சியான் விக்ரம் கதை பிடித்துப் போகவே உடனடியாக இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.

அதன் பிறகு இந்த ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் 2017 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் துவங்கப்பட்டது.

இந்த திரைப்படத்திற்கு நிதி பிரச்சனை உட்பட பல பிரச்சனையின் காரணமாக திரைப்படத்தின் படப்பிடிப்பு அடிக்கடி தடைபட்டது.

பல தடைகள் வந்தாலும் அந்த தடைகளை எல்லாம் கடந்து ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளும் முடிந்து வெளியிட தயாராக உள்ள நிலையில் திரையரங்குகளில் வெளியிட பல தேதிகள் அறிவித்தும் இந்த திரைப்படம் பலமுறை வெளியாகாமல் தள்ளிக்கொண்டே போனது.

திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்த அந்த தேதியில் திரைப்படத்தை படக்குழுவினரால் வெளியிட முடியவில்லை.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் திரைப்பட வெளியீட்டிற்கான பிரச்சனைகள் அனைத்து தீர்ந்து விட்டதாகவும் விரைவில் இந்த திரைப்படத்தின் வெளியிட்டு தேதியை அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!