இயக்குனர் S.P.ஜனநாதன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன் டி. ராஜேந்தர்
சென்னை 14 மார்ச் 2021
*இயற்கை* க்கு மாறுபடாமல் நல்ல கருத்துக்களை தரும் *ஈ* தல் குணம் மருவி கெடாமல் சொல்ல வந்த கருத்துக்களை *பேராண்மை* யோடு வெளியிட்டு பொதுவுடமை கருத்துக்களை பரப்புவதில் என் போக்கு தனி போக்கு பொது மக்களின் சொத்து ஆகிவிடாது *புறம்போக்கு* என இலட்சியத்தோடு படங்களை இயக்கி கொண்டிருந்த இயக்குனர் S.P.ஜனநாதன் அவர்கள் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த *லாபம்*
அவரது மறைவு என்பது காலனே இது யார் இட்ட *சாபம்*?
இயக்குனர் S.P.ஜனநாதன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இப்படிக்கு,
டி. ராஜேந்தர் M.A,
தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர்,
தலைவர்,
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்.
கௌரவ ஆலோசகர்,
தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம்.










