‘ஈகோ ராமன்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ரோபோ சங்கர், சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா, கவிதா ரமேஷ், சப்பானி முரளி, சேரன்ராஜ், லதா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கணேசன் நாச்சிமுத்து.

ஒளிப்பதிவாளர் :- ஜினோ பாபு
ஃபோலே – ரெஞ்சு ராஜ் மேத்யூ.

படத்தொகுப்பாளர் :- பிரபீன்.

இசையமைப்பாளர் :- ரெய்மன் ராட்ரிக்ஸ்.

தயாரிப்பு நிறுவனம் :- அஸ்ருதா புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- சுதா.ஜி.

மக்கள் தொடர்பு :-  வெங்கட்.

ரேட்டிங் :-  3./5.

தந்தையை இழந்த கதாநாயகன் சிபி புவனச்சந்திரன் தனது தாயின் கனவை  நிறைவேற்றுவதற்காக  அரசு வேலைக்கு படித்து தேர்வு எழுதி வருகிறார்.

தன்னுடைய தாய் ஆசையாக வாங்கிக் கொடுத்த பைக்   EMI    கட்ட முடியாததால் அடிக்கடி  பணம் கேட்டு பைனான்சியர் தொந்தரவு செய்கிறார்.

அதே ஊரில் பள்ளி தலைமை ஆசிரியராக பணி பணிபுரிந்து வரும் ரோபோ சங்கர், நான் என்ற எண்ணம் மற்றும் தன்னை மற்றவர்களை விட உயர்ந்தவர் என்று நினைக்கும் ஏற்றத் தாழ்வு பார்த்துக் கொண்டு ஈகோ உடன் வாழ்ந்து வருகிறார்.

கதாநாயகன் சிபி புவனச்சந்திரன் கல்லூரி மாணவி கீர்த்தனா இருவரும் காதலித்து வருகிறார்கள்.

ரோபோ சங்கருக்கு பைக் என்றாலும் பைக் ஓட்டுவது என்றாலும் பைக் மீது அதிக அளவில்  பிணைப்புடன் இருக்க ஒரு நாள் பைக்கில் செல்லும் போது கதாநாயகன் சிபி புவனச்சந்திரன் செல்லமாக வளர்த்த நாய் துரத்திக் கொண்டே செல்ல விபத்து  ஏற்பட்டு பைக் உடைந்து விடுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ரோபோ சங்கர் கதாநாயகன் சிபி புவனச்சந்திரன் செல்லமாக வளர்த்த நாயை அடித்துக் கொண்டு விடுகிறார் தனது செல்ல நாய் இறந்த விஷயம் கதாநாயகன் சிபி புவனச்சந்திரன் தெரியவர தனது நாயை சென்றவரை கோபமாக தேடிச் செல்ல தனது நாயைக்  கொன்றது தனது பள்ளி  ஆசிரியர் ரோபோ சங்கர் என்ற தெரிந்தவுடன் தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு சகஜமாக பேசி சமாளிக்கிறார்.

ஆனால், ரோபோ சங்கர், கதாநாயகன் சிபி புவனச்சந்திரனை  கேவலமாக  பார்க்கிறார்.

மேலும் ஒரு கட்டத்தில் கதாநாயகன் சிபி புவனச்சந்திரன் பைக், ரோபோ சங்கர் கைக்கு மாறுகிறது.

இறுதியில் ரோபோ சங்கருக்கு கதாநாயகன் சிபி புவனச்சந்திரனின் பைக் எப்படி வந்தது?, ரோபோ சங்கரிடமிருந்து தன்னுடைய பைக்கை கதாநாயகன் சிபி புவனச்சந்திரன் மீட்டாரா?  மீட்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘ஈகோ ராமன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘ஈகோ ராமன்’ திரைப்படத்தில் கதாநாயகனாக சிபி புவனச்சந்திரன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சிபி புவனச்சந்திரன்,  தன்னுடைய தாயின் கனவை நிறைவேற்ற போராடும் ஒரு சாதாரண குடும்ப இளைஞர் கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொறுந்தியிருக்கிறார்.

மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் ரோபோ சங்கர், சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் ரோபோ சங்கர், உடல் மொழி, முகபாவனைகள் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராமன் கதாபாத்திரத்தில், ரோபோ சங்கர், தனது வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் வித்தியாசமான நடிப்பை  கொடுத்திருக்கிறார்.

குறிப்பாக மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் ரோபோ சங்கர், கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்க திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை வைத்துவிட்டார்..

மற்ற கதாபாத்திரங்களில் படித்திருக்கும் அனைவரும் மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

இந்த ‘ஈகோ ராமன்’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக கீர்த்தனா நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை கீர்த்தனா, எளிமையான தோற்றம், இயல்பான நடிப்பு  தனது காதலர் மீது காட்டும் அக்கறை,  அப்பாவின் மீது  இருக்கும் கோபம் என்று தன் உணர்வுகளை கண்கள் மூலமாகவே வெளிப்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

கதாநாயகன் சிபி புவனச்சந்திரன் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கவிதா ரமேஷ், மற்றும் சப்பானி முரளி, சேரன்ராஜ், லதா என மற்ற  அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் திரைப்படத்தில் வேலை குறைவு என்றாலும் அதை மிகவும் நிறைவாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜினோ பாபு ஒளிப்பதிவு மூலம்  கதாபாத்திரங்களின்  உணர்வுகளையும்  மிக நேர்த்தியாக எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருப்பதோடு,

இசையமைப்பாளர் ரெய்மன் ராட்ரிக்ஸ் இசையில் பாடல்கள் இனிமையாகவும், வரிகள் புரியும்படியும் உள்ள நிலையில். பின்னணி இசை   கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.

மிகவும் எளிமையான கதைக்களம், எளிமையான அருமையான திரைக்கதை கதாபாத்திர வடிவமைப்பு ஆகியவற்றின் மூலம் தான் சொல்ல நினைத்ததை அழுத்தமாகவும், தெளிவாகவும் சொல்லி
மற்றவர்களை விட உயர்ந்தவர் என்று நினைக்கும் பெருமை மனப்பாங்கு மற்றும் அகந்தை குணம் கொண்டவர்களுக்கு மிக அருமையாக அறிவுரை சொல்லியிருந்தாலும், அதை எந்தவிதமான வன்மமும்  இல்லாமல் அமைதியான மற்றும் நாகரீகமான முறையில் மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார்  இயக்குனர் கணேசன் நாச்சிமுத்து.

மொத்தத்தில், ‘ஈகோ ராமன்’ திரைப்படம் திரைப்பட ரசிகர்களை கண்டிப்பாக ஈர்க்கும்.

error: Content is protected !!