திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா சூர்யா, கார்த்தி முதல் முன்னணி இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் பங்கேற்பு !

திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா சூர்யா, கார்த்தி முதல் முன்னணி இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் பங்கேற்பு !

சென்னை 30 ஆகஸ்ட் 2026 சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா சென்னையில் திரையுலக பிரபலங்கள் முன்னணியில் கோலாகலமாக நடைபெற்றது.இந்த பிறந்தநாள் விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்ததர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கலந்து கொண்டு சக்திவேலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.விழாவில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக், பார்த்திபன், சுந்தர் C, மாதம்பட்டி ரங்கராஜ், சாந்தனு, குணாநிதி, ஏகன், சுனில் ரெட்டி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இயக்குநர்கள் பசங்க பாண்டியராஜ், ஆதிக் ரவிச்சந்திரன், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்பராஜ், ராம், உறியடி விஜயகுமார், தியாகராஜன் குமாரராஜா ஆகியோரும் பங்கேற்று சக்திவேலனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.மேலும் நடிகைகள் சாக்க்ஷி அகர்வால், அதுல்யா ரவி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், ஞானவேல் ராஜா, ராஜ சேகர்பாண்டியன், கண்ணன் ரவி, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, தனஜெயன், அருண் விஷ்வா, அருளானந்து, அருண்குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு பிறந்தநாள் நாயகருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.திரையுலகைச் சேர்ந்த பல்வேறு முன்னணி பிரபலங்கள் ஒரே இடத்தில் திரண்டு வாழ்த்தியதால், சக்திவேலனின் பிறந்தநாள் விழா சிறப்பான கொண்டாட்டமாக அமைந்தது.

CLOSE
CLOSE
error: Content is protected !!