கேம் சேஞ்சர் திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா, சுனில், நவீன் சந்திரா, அச்யுத் குமார், வெண்ணிலா கிஷோர், பிரம்மானந்தம், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஷங்கர்.
ஒளிப்பதிவாளர் :- திரு.
படத்தொகுப்பாளர் :- சமீர் மொஹமத், ரூபன்.
இசையமைப்பாளர் :- தமன் எஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- தில் ராஜு
ரேட்டிங்:- 2.75./5.
ஆந்திர மாநிலத்தில் முதல்வராக இருக்கும் ஸ்ரீகாந்துக்கு இரண்டு மகன்கள். பெரிய மகன் ஜெயராம் சின்ன மகன் எஸ் ஜே சூர்யா தனது தந்தைக்குப் பிறகு ஆந்திர மாநிலத்தில் முதல்வர் பதவி யாருக்கு? என்பதில் இருவருக்கும் இடையே மிகப்பெரிய போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், ஆந்திரா மாநிலத்திற்கு புதிதாக பதவி ஏற்கும் மாவட்ட கலெக்டர் கதாநாயகன் ராம்சரண், தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் மோசடியில் ஈடுபடுபவர்களை விழி பிதுங்க வைக்கிறார்.
அவருடைய நடவடிக்கைகளால் முதல்வரின் இளைய மகன் அமைச்சர் எஸ்.ஜே.சூர்யாவுக்கும், அவருக்கும் இடையே மிகப்பெரிய அளவில் மோதல் ஏற்படுகிறது.
இதற்கிடையே, உடல்நலக் குறைவால் ஆந்திரா மாநிலத்தில் முதல்வர் ஸ்ரீகாந்த உயிரிழக்க, அடுத்த முதல்வர் அவருடைய இளைய மகன் எஸ்.ஜே.சூர்யா பதவி ஏற்க தயாராவதோடு, முதல்வர் பதவி ஏற்று முதல் வேலையாக தன்னை அவமானப்படுத்திய கலெக்டர் கதாநாயகன் ராம்சரணை பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்ரீகாந்த் இறப்பதற்கு முன்பு தன்னுடைய அரசியல் வாரிசாக கதாநாயகன் ராம்சரணை அறிவிப்பதோடு, அவர் தான் தனக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்ற தனது கடைசி ஆசையோடு, அவர் தான் ஆந்திர மாநிலத்திற்கு அடுத்த முதல்வர், என்றும் அறிவித்த வீடியோ ஒன்று வெளியாகிறது.
இதனால், எஸ்.ஜே.சூர்யா முதல்வர் ஆவதில் சிக்கல் ஏற்பட, அதே சமயம் கதாநாயகன் ராம்சரணையும் முதல்வராக விடாமல் பலவிதமான முயற்சிகளில் எஸ்.ஜே.சூர்யா ஈடுபடுகிறார்.
இறுதியில், கதாநாயகன் ராம்சரண் ஆந்திரா மாநிலத்திற்கு முதல்வர் ஆனாரா?, முதல்வர் ஆகவில்லையா? கதாநாயகன் ராம் சரணை எதற்காக முதல்வர் ஸ்ரீகாந்த் தன்னுடைய அரசியல் வாரிசாக நியமித்தார்? என்பதுதான் இந்த ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த கேம் சேஞ்சர் திரைப்படத்தில் கதாநாயகனாக ராம்சரண் நடித்திருக்கிறார்
தந்தை கதாபாத்திரத்தில் மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களாகவும், மகன் கதாபாத்திரத்தில் அரசு அதிகாரிகளின் பலம் என்ன? என்பதை வெளிக்காட்டும்
இரண்டு கதாபாத்திரங்களில் அமர்க்களமாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் ராம்சரண் சில காட்சிகளில் கல்லூரி மாணவராக வந்து நடனம் மற்றும் காதல் காட்சிகள் மூலம் இளசுகளை ஈர்க்கிறார்.
இந்த கேம் சேஞ்சர் திரைப்படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி, நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் கியாரா அத்வானி, வழக்கமான இயக்குனர் ஷங்கர் இயக்கம் திரைப்படங்களில் வரும் கதாநாயகிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் கூட இல்லாமல் சில காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலுல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
அப்பா ராம்சரணுக்கு ஜோடியாக நடித்திருக்கும் அஞ்சலியின் கதாபாத்திரத்தில் வெளிப்படுத்திய நடிப்பு திரைக்கதைக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தனது வழக்கமான பாணியில் நடித்திருந்தாலும், அவரது நடிப்பு காட்சிகளை மிக அருமையாக பயணித்திருக்கிறார்.
முதல்வரின் மூத்த மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயராம், தான் வரும் அனைத்துக் காட்சிகளிலும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.
பிரமானந்தம் ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, சுனில், நவீன் சந்திரா அச்யுத் குமார், வெண்ணிலா கிஷோர், என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களின் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை கலர் புல்லாகவும்ம், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் தமன்.எஸ் இசையில் பாடல்கள் புதிதாக இல்லை என்றாலும் பின்னணிசையிலும் புதிதாக ஒன்றும் இல்லை என்பது தான் உண்மை.
சமூக பிரச்சனைகளை கமர்ஷியலாக சொல்வதோடு, கலகலப்பாகவும் தனது வழக்கமான பாணியில் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
மொத்தத்தில், ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் ஒருமுறை பார்க்கலாம்.











