இயக்குனர்களை மதிக்காமல் மிகவும் அலட்சியமாக நடத்தினாராம் ஹரீஷ்கல்யாண்.

சென்னை : 21 டிசம்பர் 2020

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ஒரு திரைப்படம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த திரைப்படம் நடக்கவில்லை.

அதற்குக் காரணம், அந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகாது நேரடியாக இணையதளத்தில் வெளியாகவிருக்கும் படம் என்கிறார்கள்.

அதனால்தான் சந்தானம் நடிக்க மறுத்தார் என்று சொல்லப்படுகிறது.

இப்போது சந்தானத்துக்குப் பதிலாக ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

இதற்கிடையே, சந்தானம் இல்லையென்றானதும் அந்தக் கதையில் நடிகர் ஹரீஷ் கல்யாணை வைத்து இயக்கலாம் என்றெண்ணி அவரை அணுகினாராம் இயக்குநர் எம்.ராஜேஷ். ஆனால், இயக்குநர் எம்.ராஜேஷை மிகவும் அலட்சியமாக நடத்தினாராம் ஹரீஷ்கல்யாண்.

இப்போது என் சம்பளம் மற்றும் என்னுடைய இமேஜ் வேற லெவலில் இருக்கிறது.

ஒடிடியில் வெளியாகும் திரைப்படத்திலெல்லாம் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.

ஒடிடியில் வரும் திரைப்படங்கள் வேண்டாம் என்று சொல்வது அவருடைய உரிமை ஆனால் அதை சொல்கிற விதம் மிகவும் தவறாக இருக்கிறது என்று சொல்லி இயக்குநர் ராஜேஷ் மிகவும் வேதனை அடைந்ததாகச் சொல்லப்படுகிறது.

நடிகர் ஹரீஷ்கல்யாண் நடிப்பில் அண்மையில் வெளியான தாராளபிரபு படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தவுடன் ஹரிஷ்கல்யாணின் நடவடிக்கைகள் மாறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதனால் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் சில படங்களின் இயக்குநர்களிடம், என்னைப் பழைய மாதிரி நினைத்துக் கொள்ளாதீர்கள்.

என் ரேஞ்சே வேற அதற்குத் தகுந்தாற்போல் காட்சிகள் இருக்கவேண்டும் என்று கட்டாய படுத்துவதாக சொல்லப்படுகிறது.

இதனால் அவரை வைத்துப் படம் இயக்கும்இயக்குநர்கள் மிகவும் நொந்து போயிருக்கிறார்களாம்.

தமிழ் திரைப்பட உலகில் ஒரு திரைப்படம் ஒடி விட்டால் ஒரு கதாநாயகனும் உச்சாணிக் கொம்பில் ஏறி உட்கார்ந்து கொள்கிறார்கள்.

தமிழ் திரைப்பட உலகின் சாபக்கேடு.

error: Content is protected !!