Thursday, January 21
Shadow

நடிகர் சிலம்பரசன் TR நடிக்கும் போடா போடி 2 திரைப்படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் & நடிகை வரலட்சுமி சரத்குமாரை கழட்டி விட்ட தயாரிப்பாளர்.

சென்னை : 21 டிசம்பர் 2020

நடிகர் சிலம்பரசன் டி ஆர் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2012ஆம் வெளிவந்த திரைப்படம் போடா போடி

நடிகர் சிலம்பரசன் டி ஆர் நடிகை வரலட்சுமி சரத்குமார் முதன்முறையாக ஜோடியாக நடித்த திரைப்படம் ‘போடா போடி’.

இந்த போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இந்த போடா போடி திரைப்படத்தின் மூலம்தான் தமிழ் திரைப்பட உலகில் இயக்குனராக விக்னேஷ் சிவன் அறிமுகமானார்.

தயாரிப்பாளர் பதம் குமார் என்பவர் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

2012-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், போடா போடி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் பதம் குமார் தெரிவித்துள்ளார்.

ஆனால் போடா போடி இரண்டாம் பாகத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவில்லையாம்.

இதிலும் சிலம்பரசன் டி ஆர் கதாநாயகனாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடி போட பாலிவுட் நடிகை ரித்திகா பால் நடிக்கிறார்.

இந்த திரைப்படம் முதல் பாகத்தை இணைக்கும் கதையாக இருந்தாலும் அதே பெயரில் உருவானாலும் இது ‘போடா போடி 2’ பாகத்தின் தொடர்ச்சி இல்லை என தயாரிப்பாளர் பதம் குமார் தெரிவித்துள்ளார்.

எனவே மற்ற நடிகர் நடிகைகள்
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்களை விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.

CLOSE
CLOSE