ஹார்ட்டின்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- சனந்த், மடோனா செபாஸ்டியன், எமயா டி, வாட்ஸ்அப் மணி, டெப்னிதா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கிஷோர் குமார்.
ஒளிப்பதிவாளர் :- முகேஸ்வரன் வி.
படத்தொகுப்பாளர் :- பரத் விக்ரமன்.
இசையமைப்பாளர் :- ராஜேஷ் முருகேசன்.
தயாரிப்பு நிறுவனம் :- டிரைடென்ட் ஆர்ட்ஸ், ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர் :- ஆர்.ரவீந்திரன்.
மக்கள் தொடர்பு :- நிகில் முருகன்.
ரேட்டிங் :- 3./5.
ஜெய்ப்பூரில் தன்னுடைய நண்பர்கள் இனைத்து உணவகம் ஒன்றில் பணியாற்றும் கதாநாயகன் சனந்த்தும், மற்றும் ஐடி துறையில் பணியாற்றும் தமிழ் பெண் இமயா நண்பர்களாக பழகுகிறார்கள்.
கதாநாயகன் சனந்த் மீது இமயாவிற்க்கு காதல் மலர ஆனால், அந்த காதலை கதாநாயகன் சனந்த் ஏற்க மறுக்கிறார்.
அதற்கான காரணமாக தன்னுடைய முன்னாள் காதலி கதாநாயகி மடோனா செபாஸ்டியன், முதல் காதல் பிரிவால் ஏற்பட்ட வலியை மீண்டும் தனக்கு அனுபவிக்கும் சக்தி இல்லை என கூறுகிறார்.
தன்னுடைய முன்னாள் காதலி கதாநாயகி மடோனா செபாஸ்டியன், தனது முன்னாள் காதல் பற்றி விபரத்தை அறிந்துக் கொண்ட பிறகும் அவர் மீது காதலோடு இருக்கும் இமயாவை கதாநாயகன் சனத்தும் காதலிக்க தொடங்குகிறார்.
இமயாவின் காதல் மூலம் மீண்டும் தனது தன்னுடைய முன்னாள் காதலி கதாநாயகி மடோனா செபாஸ்டியன், பழைய காதல் தோல்வியை மறந்து மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு திரும்பிய கதாநாயகன் சனந்த், விபத்து ஒன்று நடக்க இந்த விபத்தின் மூலம் பின் தலையில் பலமாக அடிபட்டு, தனது 6 வருட காலம் நினைவுகளை இழந்து கோமாவில் சென்று விடுகிறார்.
இதனால், கதாநாயகன் சனந்த் இமயாவுடன் உள்ள காதலை மறந்து விடுவதோடு, காதலை முறித்துகொண்டு தன்னை விட்டு பிரிந்து சென்ற முன்னாள் காதலி கதாநாயகி மடோனா செபாஸ்டியன், பிரிவு சம்பவத்தையும் மறந்து விடுபவர், பழைய நினைவுகளோடு மீண்டும் நினைவுக்கு வர தனது முன்னாள் காதலி கதாநாயகி மடோனா செபாஸ்டியனை சந்திக்க ஊட்டிக்கு செல்கிறார்.
மறந்த நினைவுகள் மீண்டும் திரும்ப வந்தவுடன், அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் கதாநாயகன் சனந்த் உடன் பயணிக்கும் இமயாவின் காதல் வெற்றி பெற்றதா?, வெற்றி பெறவில்லையா?,
அல்லது முதல் காதல் முறிவு பற்றி தெரியாமல் பிரிந்து சென்ற காதலி கதாநாயகி மடோனா செபாஸ்டியன்,
தேடிச் செல்லும் சனந்தின் காதல் வெற்றி பெற்றதா? வெற்றி பெறவில்லையா?, என்பதுதான் இந்த ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தில் கதாநாயகனாக சனந்த் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் சனந்த், காதல், மனநிலை மாற்றம் என்று சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தாலும் டூயட் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் இல்லாமல், ஒரு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
முதல் காதலி கதாநாயகி மடோனா செபாஸ்டியனை உருகி உருகி காதலிக்கும், கதாநாயகன் சனந்த், அவருடைய காதல் தோல்வியால் மிகவும் இறுக்கமான மனநிலையில் இருப்பதும், மற்றொரு கதாநாயகி இமயா காதலிக்கும் காதலுக்குப் பிறகு மிக மகிழ்ச்சியான மனநிலைக்கு மாறுவது என்று மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இந்த ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தில் மடோனா செபாஸ்டியன், கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் மடோனா செபாஸ்டியன், காதலருக்கு இணையாக தன்னால் காதலில் நேர்மையாக இருக்க முடியாத சூழ்நிலையை எண்ணி மனதளவில் வருந்தும் காட்சியிலும், தான் ஒதுக்கிய காதல் மீண்டும் தன்னை தேடி வரும்போது, தடுமாறும் காட்சியிலும் எதார்த்தமாக நடித்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.
புதுமுக நடிகை இமயா, புதுமுகம் என்ற அடையாளமே தெரியாதபடி மிகவும் , தன்னம்பிக்கையுடனும் கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
.
புதுமுக நடிகை இமயாவின், நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.
கதாநாயகனின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வாட்ஸ்-அப் மணி குணச்சித்திர கதாபாத்திரத்தில் நகைச்சுவையாகவும் சில காட்சிகளில் நடித்து சிரிக்கவும் வைக்கிறார்.
அவருடைய மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டெப்னிதா கொடுத்த வேலையை மிகவும் அருமையாக செய்திருக்கிறார்.
இந்த ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களை நடித்திருக்கும் அனைவரும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன்.வி, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டியில் உள்ள பச்சை பசேல் என்று இருக்கும் அழகுகளை காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்கள் பின்னணி இசை மிகவும் சிறப்பாக உள்ளது.
நினைவுகள் இழப்பு என்ற பின்னணியோடு காதல் கதையில் உருக வைப்பதற்கு பதிலாக, ஞாபக மறதி இழந்த கதாநாயகனின் காதல் கதைகளை திரைக்கதையை காமெடியாக சொல்லி ரசிக்க வைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கிஷோர் குமார்.
மொத்தத்தில், இந்த ‘ஹார்ட்டின்’ திரைப்படம் ரசிகர்கள் இதயத்தை தொடவில்லை.



