‘இரட்டையர்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- அபிநயா, பேபி அனுமிதா, பேபி அனுஷிதா சுப்பிரமணிய சிவா, வெங்கட் சுபா, சங்கிதா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஜெகதீஷ் தம்பியா எஸ்.
ஒளிப்பதிவாளர் :- முகமது அமீன்.
படத்தொகுப்பாளர் :- ஈஸ்வர மூர்த்தி.
இசையமைப்பாளர் :- *ஜி.கே.வி.
தயாரிப்பு நிறுவனம் :- ஆசியா ஐகானிக் ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர்கள் :- ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன், வினோத்கண்ணன்*
மக்கள் தொடர்பு :- ஆர். மணி மதன்.
ரேட்டிங் :- 3.5./5.
கதாநாயகி அபிநயா அவருடைய கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் காரில் பயணிக்கிறார்கள்.
கார் விபத்துக்குள்ளாகி கதாநாயகி அபிநயா கணவரை இழந்து விடுகிறார்.
அந்த இரண்டு பெண் குழந்தைகள் விபத்தில் தந்தை இழக்க கதாநாயகி அபிநயா முகமும் கடுமையாக சேதமடைகிறது.
அதன் பிறகு கதாநாயகி அபிநயா விபத்துக்குப் பிறகு முகமாற்று அறுவை பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை செய்து கொண்டு வீட்டிற்கு திரும்பும் கதாநாயகி அபிநயா விநோதமான நடத்தைகள், அவரது இரட்டை பெண் குழந்தைகளுக்கு நமது அம்மா இல்லை என சந்தேகம் ஏற்படுகிறது.
கதாநாயகி அபிநயாவை, அவரது சொந்த குழந்தைகளே அம்மாவாக ஏற்றுக்கொள்ள மறுக்க தொடங்குகிறார்கள்.
உண்மையில் கதாநாயகி அபிநயாவை போல் வீட்டுக்குள் உள்ள இவர் யார்?”
இரண்டு குழந்தைகளுக்கும் இனிமையான அம்மா கிடைத்தார்களா? கிடைக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘இரட்டையர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘இரட்டையர்’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அபிநயா நடித்திருக்கிறார்.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநயா ஒரு பக்கம் கணவரை இழந்த சோகம், மறுபக்கம் குழந்தைகளின் தன்னை நிராகரிப்பு, இன்னொரு பக்கம் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் என நடிப்பை விட உண்மையான உணர்வுகளை கொடுத்து கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்.
பேபி அனுமிதா மற்றும் பேபி அனுஷிதா இருவரும் மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்து பெரிய நடிகர்களுக்கு இணையாக உணர்வுகளை வெளிப்படுத்தி கதையை தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை வாழ வைத்திருக்கிறார்கள்..
குறிப்பாக பேபி அனுமிதா மற்றும் பேபி அனுஷிதா இருவரும் சந்தேகத்துடனும் பயத்துடனும் கதாநாயகி அபிநயாவை அணுகும் காட்சிகள் கதையின் பதற்றத்தை அதிகரிக்கின்றன.
இயக்குனர் சுப்ரமணிய சிவா மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் நடித்திருக்கும் அனைவரும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் முகமது அமீன், மலைப்பகுதி பங்களாவை ஒரு கதாபாத்திரமாகவே மாற்றி மிகச் சிறப்பாக திரைப்படமாகியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜிகேவியின் பின்னணி இசை பல காட்சிகளில் கதையை விட அதிகமாக பேசுகிறது.
இந்தத் திரைப்படத்தை வெறும் த்ரில்லராக மட்டுமல்லாமல், குழந்தைகளின் மனநிலை, அடையாள குழப்பம், நம்பிக்கையின் சிதைவு மனித உறவுகளின் உளவியல் ஆய்வாகவும் போன்ற விஷயங்களை கொடுத்து சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெகதீஷ் தம்பையா.
மொத்தத்தில், இரட்டையர் திரைப்படம் ஒரு முகத்தின் பின்னால் இருக்கும் உண்மையைத் தேடும் உணர்வுப்பூர்வமான மர்மப் பயணம்.



