ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்து சீன மக்கள் கண் கலங்கினார்.

சென்னை 21 ஆகஸ்ட் 2022  ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்து சீன மக்கள் கண் கலங்கினார்.!

இயக்குனர் TJ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு நேரடியாக ஓடிடி (OTT) தளத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெய் பீம்.

இந்த ஜெய் பீம் அனைவரையும் கவர்ந்த திரைப்படம்.

விமர்சகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்ட இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்திருந்தார்.

இந்தத் திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து லிஜோமல் ஜோஷ், பிரகாஷ் ராஜ், மணிகண்டன், எம், ஏசு பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் உணர்வுப்பூர்வமான விஷயத்தை நடிகர் சூர்யா தொட்ட விதம் பலரது மனதை வென்றது.

சமீபத்திய செய்தி என்னவென்றால், இந்த திரைப்படம் மதிப்புமிக்க பெய்ஜிங் திரைப்பட விழாவில் (Beijing Film Festiva) ஒளிபரப்பின் போது பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் உணர்ச்சிவசப்பட்டனர்.

சீன மக்கள் கண்கலங்கி அழுகிறார்கள்.

திரைப்படம் சிறப்பாக இருக்கிறது என தங்களுடைய விமர்சனத்தையும் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

https://twitter.com/21ddharth/status/1560672052578697216?t=JlZQGYRPMBq2KhiiKyEcLQ&s=19

error: Content is protected !!