பெடியா’ படத்தில் இருந்து பட்டையை கிளப்பும் ‘தும்கேஸ்வரி’ பாடலை வெளியிட்ட ஜியோ ஸ்டுடியோஸ்.!!

சென்னை 31 அக்டோபர் 2022 பெடியா’ படத்தில் இருந்து பட்டையை கிளப்பும் ‘தும்கேஸ்வரி’ பாடலை வெளியிட்ட ஜியோ ஸ்டுடியோஸ்.!!

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் அமர் கௌஷிக் இயக்கத்தில், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும் ‘பெடியா’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் முதல் பாடலான ‘தும்கேஸ்வரி’ தற்போது வெளியாகியுள்ளது.

கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்துள்ள இந்த பாடலில் வருண் தவான் – கீர்த்தி சனோன் கூட்டணி பட்டையை கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பாடலை பற்றி வருண் தவான் கூறுகையில், “இது போன்ற ஒரு உற்சாகமான பாடலுக்கு நடனமாடியதில் மகிழ்ச்சியாக உள்ளது. நடனமாடுவதற்காகவே உருவாக்கப்பட்ட பாடல் இது. பாடலின் இசையும் அதன் வரிகளும் ரசிகர்களை கண்டிப்பாக கவரும்,” என்றார்.

சிறப்புமிக்க இந்த பாடலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக ஷ்ரத்தா கபூர் நடனமாடியுள்ளார். சிகப்பு ஆடையில் வருணுடன் இவர் போட்டுள்ள ஆட்டம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.

இயக்குநர் அமர் கௌஷிக்கின் முந்தைய படமான ‘ஸ்திரீ’ யில் ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்பாடலில் மட்டும் தோன்றுகிறாரா அல்லது படத்திலும் வருகிறாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பாடலில் பல வண்ண உடை அணிந்து வரும் கீர்த்தி சனோன் அழகு பதுமையாக தோன்றுகிறார்.

அவரது அனுபவத்தை பற்றி கீர்த்தி கூறுகையில், ” ‘தும்கேஸ்வரி’ பாடலில் நான் மிகவும் உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் நடித்துள்ளேன். பல வருடங்களுக்கு பிறகு வருணுடன் இப்படத்தில் நடித்துள்ளதில் மகிழ்ச்சியாக உள்ளது. இது மிகவும் பிரமாண்டமான முறையில் உருவாகியுள்ள படம். இந்த அனுபவம் எப்போதும் என் நினைவில் இருக்கும்.”

இசையமைப்பாளர் சச்சின்-ஜிகார் கூறுகையில்,” ‘பெடியா’ படத்தில் உள்ள உற்சாக மனநிலையை இந்த ‘தும்கேஸ்வரி’ பாடல் பிரதிபலிக்கும். ரசிகர்களை நடனமாட வைக்கும் விதமாக இந்த பாடலின் இசை, வரிகள் மற்றும் காட்சியமைப்பு உருவாகியுள்ளன.”

சச்சின்-ஜிகார் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு அமிதாப் பட்டாச்சார்யா வரிகள் எழுதியுள்ளார்.

இப்பாடலை கார்த்திக் மற்றும் அனுஷா மணி பாடியுள்ளனர்.

‘தும்கேஸ்வரி’ பாடலை கேட்ட பிறகு இந்த ஆல்பத்தில் உள்ள மற்ற பாடல்களை கேட்பதற்கான ஆர்வம் ரசிகர்களிடம் அதிகமாகியுள்ளது.

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், வருண் தவான், கீர்த்தி சனோன், தீபக் தோப்ரியால் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ நடித்துள்ள ‘பெடியா’ நவம்பர் 25 அன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக வெளியாகவுள்ளது.