“கடுக்கா” திரைப்பட விமர்சனம்

நடிகர் நடிகைகள்:- விஜய் கௌரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ், மதிகாந்த், மணி மணிமேகலை செம்பயக்கா, ஆராய் சுதா, மஞ்சு நாதன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- எஸ்.எஸ்.முருகராசு.
ஒளிப்பதிவாளர் :- சதீஸ் குமார் துரைக்கண்ணு.
படத்தொகுப்பாளர் :- எம். ஜான்சன் நோயல்.
இசையமைப்பாளர் :- கெவின் டி’கோஸ்டா.
தயாரிப்பு நிறுவனம் :- விஜய் கௌரிஷ் புரொடக்ஷன்ஸ், நியந்த் மீடியா அண்ட் டெக்னாலஜி மற்றும் மலர் மாரி மூவிஸ்.
தயாரிப்பாளர்கள் :- கௌரி சங்கர் ரவிச்சந்திரன், ஆனந்த் பொன்னுசாமி.
ரேட்டிங் :- 3./5.
கதாநாயகன் விஜய் கெளரிஷ், தன்னுடைய தாயின் உழைப்பில் வேலை வெட்டி ஏதுவுமே இல்லாமல், வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
அந்த கிராமத்திற்கு புதிதாக குடிவரும் கதாநாயகி ஸ்மேஹா, கண்டதும் காதல் கொள்கிறார் கதாநாயகன் விஜய் கெளரிஷ் தினம்தோறும் கதாநாயகி ஸ்மேஹா காலேஜ் செல்லும் வழியில் பின் தொடர்ந்து காதல் தொல்லை கொடுக்கிறார்.
இந்த நிலையில், கதாநாயகன் விஜய் கெளரிஷின் நண்பர் ஆதர்ஷும் ஸ்மேஹாவை காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறுகிறார்.
கதாநாயகன் விஜய் கெளரிஷின் காதலை ஏற்றுக் கொள்ளும் கதாநாயகி ஸ்மேஹா, இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆதர்ஷைவின் காதலையும் ஏற்றுக்கொள்கிறார்.
கதாநாயகன் விஜய் கெளரிஷ் மற்றும் நண்பர் ஆதர்ஷ நண்பர்கள் இருவரும் கதாநாயகி ஸ்மேஹாயை காதலிப்பது தெரியாமல் காதல் மயக்கத்தில் இருக்கும் போது, உண்மை தெரிய வருகிறது.
அதன் பின்னர் இந்த காதல் பிரச்சனைக்கு தீர்வுகாண கதாநாயகி ஸ்மேஹாவை இருவரும் தனித்தனியாக சந்தித்து காதலைப் பற்றி பேசும்போது, அப்பொழுதும் அந்த கதாநாயகி ஸ்மேஹா இருவரையும் முட்டாளுக்கும் விதமாக பதில் அளித்து, இருவரையும் காதல் மயக்கத்தில் தள்ளி விடுகிறாள்.
கதாநாயகி ஸ்மேஹா இருவரையும் காதலிப்பதாக பொய்யாக கூறுவதற்கு காரணம் என்ன?, உண்மையில் இருவரையும் காதலிக்கிறாரா? காதலிக்கவில்லையா ? என்பதுதான் இந்த ‘கடுக்கா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த கடுக்கா திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் கெளரிஷ் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் விஜய் கெளரிஷ் எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
காதலிக்க பெண் தேடி பேருந்து நிலையத்தில் நிற்பதையே வேலையாக பார்க்கும் கதாநாயகன் விஜய் கெளரிஷ், அப்பாவியான முகத்தை வைத்துக்கொண்டு, மிகவும் இயல்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
இந்த கடுக்கா திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக ஆதர்ஷ் நடித்துள்ளார்.
மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதர்ஷ் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இந்த கடுக்கா திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்மேஹா நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்மேஹா, நமது பக்கத்து வீட்டு பெண் போல் எளிமையான இந்த கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இவர்கள் முவரும் புதுமுகங்கள் என்றாலும், அவர்கள் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரங்களை திரைப்பட ரசிகர்கள் மனதில் மிகவும் ஆழமாக பதிய வைக்கும் அளவுக்கு நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்திருக்கும் மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் மிகவும் இயல்பாக நடித்து கதைக்களத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சதிஷ் குமார் துரைகண்ணு, ஒளிப்பதிவு மூலம் கதைக்களத்தையும் மிக எளிமையாக எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் கெவின் டி,கோஸ்டா இசையில் பாடல்கள் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது.
கிராமத்தில் உள்ள இளைஞர்களின் எதார்த்தமான வாழ்வியலை நகைச்சுவையாக சொன்னாலும், அதில் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை மிகவும் அழுத்தமாக பதிவு செய்து மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.முருகரசு.
மொத்தத்தில், ‘கடுக்கா’ திரைப்படம் கிராமத்து மண்வாசனை.











