‘கருப்பு’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- சூர்யா, திரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, நட்டி நட்ராஜ்,  இந்தரன்ஸ்,  ஸ்வாசிகா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி, ஷிவதா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஆர்.ஜே.பாலாஜி.

ஒளிப்பதிவாளர் :- ஜிகே விஷ்ணு.

படத்தொகுப்பாளர் :- ஆர் கலைவாணன்.

இசையமைப்பாளர் :- சாய் அபியங்கர்.

தயாரிப்பு நிறுவனம் :- ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- எஸ்.ஆர். பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு.

மக்கள் தொடர்பு :-  சதீஷ் (S2 மீடியா).

ரேட்டிங் :-  3./5.

கேரளா  மாவட்டத்திலிருந்து தனது மகள் அனகா மாயா ரவி சிகிச்சைக்காக 60 பவுன் தங்க நகைகளுடன் ரயிலில் சென்னை வரும் இந்திரன்ஸ், பேசின் பிரிட்ஜ் பகுதியில் வழிப்பறி கும்பலிடம் சிக்கி தனது நகைகளை  இழந்து  விடுகிறார்கள்.

தன்னுடைய நகை வழி பறி கும்பலால் பறி கொடுத்து விட்டேன் என மகள் அனகா மாயா ரவி தந்தை இந்திரன்ஸ் காவல் நிலையத்தில் சென்று புகார் செய்கிறார்

காவல்துறையினரின் அதிரடி  நடவடிக்கையால் 45 பவுன் தங்க நகைகள் மட்டுமே காவல்துறையினரால்  மீட்கப்பட்டாலும், அதை நீதிமன்றம் மூலமாகதான் பெற முடியும் என  கூறப்படுகிறது.

இதனால், இந்த 60 பவுன் தங்க நகை திருட்டு வழக்கு நீதிமன்றத்திற்கு செல்கிறது.

அங்கு உள்ள கோர்ட்டுக்கு வரும் அனைத்து விதமான கேஸ்களையும் பணம், அதிகாரம், செல்வாக்கு என சட்டத்தையும் கோர்ட் வளாகத்தை ஆர்.ஜே. பாலாஜி   தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்.

இந்த இந்த 60 பவுன் தங்க நகை திருட்டு வழக்கை ஏமாற்றிக் கொண்டிருக்கும் வக்கீல் ஆர் ஜே பாலாஜியை இந்த வழக்கில் திடீரென வழக்கறிஞராக களமிறங்கும் கதாநாயகன் சூர்யா, இந்திரன்ஸ் குடும்பத்திற்காக போராட தொடங்குகிறார்.

கோர்ட்டில் இருந்து இந்திரன்ஸ்க்கு கதாநாயகன் சூர்யா வாங்கி கொடுத்தாரா? வாங்கி கொடுக்கவில்லையா? என்பதுதான் இந்த‘கருப்பு’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘கருப்பு’ திரைப்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சூர்யா வழக்கறிஞர் சரவணன் கதாபாத்திரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் எதிர்பார்த்த மாஸ் மற்றும்  அதிரடி சண்டை காட்சிகள்  இரண்டையும் இணைத்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

குறிப்பாக தாடி மற்றும் தோற்றம், மிடுக்கான உடல் மொழி, கோர்ட்  காட்சிகளில்  பேசும் வசனம் என அனைத்திலும் கம்பீரமாக இருக்கிறார்.

கதாநாயகன் சூர்யா கருப்பசாமி அவதாரத்தில் கையில் அரிவாளுடன் வரும் காட்சிகள்  தியேட்டரை அதிர  வைக்கும் வகையில்  அமைந்திருக்கிறது.

இந்த ‘கருப்பு’ திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்திருக்கிறார்

கதாநாயகியாக நடித்திருக்கும் திரிஷா, அளவான மற்றும் எளிமையான நடிப்பின் மூலம் கதைக்கு தேவையானதை மட்டும் கொடுத்திருக்கிறார்.

கதாநாயகன் சூர்யாவுடன் வரும் சென்டிமென்ட் மற்றும் கோர்ட் காட்சிகள் கதாநாயகி திரிஷா ரசிக்க வைக்கிறது.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, வக்கீலாக சில இடங்களில் முழு வில்லனாகவே மாறி  மிரட்டி இருக்கிறார்.

குறிப்பாக செல்ல வேண்டுமென்றால் நீதிமன்ற காட்சிகளில் அவரது உடல் மொழி மற்றும் டைமிங் காட்சிகள் ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறது.

நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்திருக்கும் நட்டி, நட்ராஜ் கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

கேரளாவிலிருந்து வரும் வயதான தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்திருக்கும் இந்திரன்ஸ், மிக உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தன்னுடைய மகளின் நிலையை எண்ணி தவிக்கும் காட்சிகள் திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களை கண்கலங்க வைக்கிறது.

இந்திரன்ஸ் மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனகா மாயா ரவி, மிகப்பெரிய அளவில் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வலியை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு, மூலம் நீதிமன்ற காட்சிகளையும், ஆன்மீக காட்சிகளையும் மிக அழகாக காட்சி படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் சாய் அபயங்காரின் இசையில் பாடல்கள் பின்னணி இசை மற்றும் கருப்பசாமி பாடல் இரண்டும் பெரிய அளவில் பலமாக அமைந்துள்ளது.

கதாநாயகன், சூர்யாவின் திரை இருப்பு, கோர்ட் டிராமா அனைத்து கருப்பசாமி காட்சிகள் ஆகியவை திரைப்படத்தை தாங்கிச் செல்கிறது.

முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் சில சினிமாத்தனம் மற்றும் லாஜிக் மீறல்கள் தெரிகிறது.

ஏழை மக்களுக்கு நீதி கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதையும் மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி.

ஒரு கோட்டில் நடக்கும் சட்டப் போராட்ட கதைக்குள் கருப்பசாமி என்ற தெய்வ நம்பிக்கையை  ஒன்றிணைத்து, அதை முழுக்க பக்தி திரைப்படமாகவோ அல்லது ஃபேண்டஸி திரைப்படமாகவோ மாற்றாமல் கமர்ஷியல் திரைப்படமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி,

மொத்தத்தில், ‘கருப்பு’ திரைப்படம் லஞ்சம் ஊழல் நிறைந்த நீதித்துறைக்கு சாட்டையடி  கொடுத்திருக்கிறார்.

error: Content is protected !!