மகாகவிதை’க்கு ரூ 18 லட்சம் விருது: கவிஞர் வைரமுத்து மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார்!
‘மகாகவிதை’க்கு ரூ 18 லட்சம் விருது: கவிஞர் வைரமுத்து மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார்!தான்ஶ்ரீ டாக்டர் எஸ் .ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் முன்னிலையில் கோலாலம்பூரில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது மற்றும் பரிசுத் தொகை கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டது.
பஞ்சபூதங்களை பற்றி விரிவாக பேசும் ‘மகாகவிதை’ நூலை படித்து மகிழ்ந்த மலேசிய பல்கலைக்கழக தமிழ் அறிஞர்கள் ஐந்து பேர் நூல் குறித்து சிறப்புரை வழங்கினார்கள்.
நீர் குறித்து இஸ்லாமிய கல்விக் குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ இஃபாலும், காற்று குறித்து மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை பேராசிரியர் முனைவர் இராஜேந்திரனும், தீ குறித்து சுலுத்தான் இதுரீசு கல்வியல் பல்கலைக்கழகம் தலைவர், மலேசியத் தமிழ்ப் புலவர் சங்கத்தை சேர்ந்த முனைவர் மனோன்மண தேவி அண்ணாமலையும், பூமி பற்றி மேனாள் காவல்துறை ஆணையர் புலவனின் புவி காக்கும் வேட்கை மதிப்புமிகு டத்தோ ஶ்ரீ தெய்வீகன் ஆறுமுகமும், ஆகாயம் குறித்து மலேசியத் தமிழ்நெறிக் கழகம் தேசியத் தலைவர் தமிழ்ப்பெருந்தகை இரா திருமாவளவனும் விரிவாக பேசி கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்பை வெகுவாக பாராட்டினர்.
இவ்விழாவில் தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
விருதினைப் பெற்றுக் கொண்டு ஏற்புரை ஆற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, மலேசிய தமிழ் இலக்கிய காப்பகம் மற்றும் தமிழ் பேராயத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியவர்களுக்கும் பங்கேற்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்காக சமீபத்தில் மலேசியா வந்தடைந்த கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு ‘டத்தோ’ ஶ்ரீ எம் சரவணன் தலைமையில் விமான நிலையம் முதல் தங்கி இருக்கும் ஹோட்டல் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related posts:
கவிப்பேரரசு #வைரமுத்து சமீபத்தில் எழுதி சாதனை படைத்த ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ வழங்குகிறது !!
கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்குப் ‘பெருந்தமிழ் விருது’ மலேசியத் தமிழ் இலக்கியக் காப்பகம் – தமிழ்ப்பேராயம் இணைந்து வழங்குகின்றன!!
கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் விழா, ஆரூர் தமிழ்நாடனுக்கு விருது வழங்கப்பட்டது.!
என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன் கவிஞர் வைரமுத்து அறிவிப்பு.
நாட்படு தேறல் – தலைப்புப் பாடல் கவிஞர் வைரமுத்து வெளியிட்டார்.
ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து வைரமுத்துக்கு ஆதரவாக பொங்கி எழுந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா .
கம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்!
மலேசியாவில் கால்பதிக்கும் ஆஹா தமிழ்!!
சல்லியர்கள் திரைப்படத்தின் டீஸரை வெளியிட்ட கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து.
தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் -கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்,

