திரையில் சிரிப்பொலி… அதன் பின்னணியில் இயக்குநர் எழுத்தாளர் வேங்கட் ராகவனின் எழுத்தொலி!

திரையில் சிரிப்பொலி… அதன் பின்னணியில் இயக்குநர் எழுத்தாளர் வேங்கட் ராகவனின் எழுத்தொலி!

சென்னை 16 நவம்பர் 2026 இயக்குநர், எழுத்தாளர், வசனகர்த்தா, நடிகர் எனப் பன்முகத் திறமையுடன் தமிழ் திரைப்பட உலகில் பயணித்து கொண்டிருக்கும் இயக்குநர் வேங்கட் ராகவன், தனது எழுத்துப் பங்களிப்பால் தொடர்ந்து திரைப்பட ரசிகர்கள் கவனம் ஈர்த்து வருகிறார்.தமிழ்த் திரையுலகில் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு நடிகர்களின் நடிப்பும், இயக்குநரின் பார்வையும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு கதாபாத்திரங்களின் தன்மையையும் காட்சிகளின் சுவாரஸ்யத்தையும் உயிர்ப்பிக்கும் வசனங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.அத்தகைய எழுத்துப் பணியில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியிருப்பவர் இயக்குநர் வேங்கட் ராகவன.

திரைத்துரையில் கொடி கட்டி பறக்கும் அனைத்து நகைச்சுவை நடிகர்களுக்கும் தன்னுடைய பாணியில் வசனம் எழுதி அரங்கங்களை அதிர வைத்தவர் இந்த இயக்குநர் வேங்கட் ராகவன்.தமிழ்த் திரைப்பட உலகில் உள்ள சின்ன கலைவாணர் விவேக், வைகைப்புயல் வடிவேலு, சந்தானம், சூரி, யோகிபாபு, சதிஷ், மனோபாலா, விடிவி கணேஷ், முனிஷ்காந்த் என இன்னமும் நடிகர்கள் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

இயக்குநர் சுந்தர்.சியுடன் இணைந்து பல திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட வேங்கட் ராகவன், இணை இயக்குநராகவும் திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளராகவும் தனது திரைப்பயணத்தை வளர்த்துக்கொண்டவர்.‘கலகலப்பு 1’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ” மத கஜ ராஜா “, ‘அரண்மனை 1 ’, ‘ஆம்பள’, ‘அரண்மனை 2’ ” கலகலப்பு 2″ ” அரண்மனை 3″ “அரண்மனை 4″ ” கேங்கர்ஸ் ” உள்ளிட்ட வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் இவரது எழுத்து முக்கிய பங்காற்றியுள்ளது.

2016-ஆம் ஆண்டு நடிகர் இயக்குநர் சுந்தர்.சி நடிப்பில் வெளியான ‘முத்தின கத்திரிக்கா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தனது திறமையை வெளிப்படுத்தினார்.அரசியல் பின்னணியைக் கொண்ட கதையை நகைச்சுவையுடன் இணைத்து, குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் திரைப்படத்தை உருவாக்கியிருந்தார்.இதனைதொடர்ந்து சுவாரசியமான கதை களத்துடன் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘கடமையை செய்’ திரைப்படத்தையும் இயக்கி, தனது இயக்குநர் பயணத்தைத் தொடர்ந்தார்.இயக்குநராக மட்டுமின்றி, திரைக்கதை மற்றும் வசனப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வேங்கட் ராகவனின் பயணத்தில் தற்போது மற்றுமொரு கவனிக்கத்தக்க படைப்பாக அமைந்துள்ளது ‘மூக்குத்தி அம்மன் 2’.நடிகை நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை இயக்கியிருப்பவர் சுந்தர்.சி. முதல் பாகத்திலிருந்து மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் புராணப் பின்னணி, கற்பனை அம்சங்கள், பிரம்மாண்டமான காட்சியமைப்பு ஆகியவை இணைந்துள்ளன.நடிகை நயன்தாராவுடன் ஊர்வசி, யோகி பாபு, ரெஜினா கசாண்ட்ரா, இனியா, துனியா விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் திரைக்கதை மற்றும் வசனப் பணிகளில் சுந்தர்.சியுடன் இணைந்து வெங்கட் ராகவனும் பங்களித்துள்ளார்.குறிப்பாக, புராண அம்சங்களையும் சமகாலக் கதாபாத்திரங்களையும் இணைக்கும் ஒரு கற்பனை உலகத்தில், காட்சிகளின் தன்மைக்கும் கதாபாத்திரங்களின் வெளிப்பாட்டுக்கும் ஏற்ற எழுத்து முக்கியத்துவம் பெறுகிறது.நவம்பர் 6, 2026 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான ‘மூக்குத்தி அம்மன் 2’, இதுவரை 25 கோடியை தாண்டி வசூலித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறதுஇயக்குநராகத் தனக்கான இடத்தை உருவாக்கி, பல்வேறு திரைப்படங்களின் திரைக்கதை மற்றும் வசனப் பணிகளில் தொடர்ந்து பங்களித்து வரும் வேங்கட் ராகவனின் பயணம், தமிழ் சினிமாவில் எழுத்துக்கும் இயக்கத்துக்கும் இடையிலான அவரது பன்முக ஈடுபாட்டைப் பிரதிபலிக்கிறது.ஒரு திரைப்படத்தில் இயக்குநரின் பார்வை திரையில் விரியும் போது, அந்தப் பார்வைக்கு வார்த்தைகளால் வடிவம் கொடுக்கும் எழுத்தாளரின் பங்களிப்பும் அதே அளவு முக்கியமானது.அந்த வகையில், இயக்கம், எழுத்து, வசனம் , நடிப்பு எனப் பல தளங்களில் தனது பயணத்தைத் தொடரும் வேங்கட் ராகவனின் அடுத்தடுத்த படைப்புகள் மீதான எதிர்பார்ப்பும் கவனமும் தொடர்ந்து நிலவுகிறது.

CLOSE
CLOSE
error: Content is protected !!