திரைப்படத்துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரூபாய் 10 லட்சம நன்கொடை வழங்கினார்.

பல நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் எட்டியுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் தீவிரமாக கண்காணித்து முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 19ம் தேதி முதல் திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் திரைப்படத் தொழிலாளர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களாக இருக்கும் பல்லாயிரம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்படுவதாகவும் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி தெரிவித்திருந்தார்.

மேலும் திரைப்பட உலகில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர்கள் நடிகைகள் இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் ஒன்றையும் எடுத்து வைத்திருந்தார் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்கே செல்வமணி.

இந்த திரைப்பட துறை வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள 15000 திரைப்பட தொழிலாளர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால் அவர்கள் கஞ்சி சோறு சாப்பிட்டு உயிர் வாழ இயலும் என்று சம்மேளனத்தின் தலைவர் ஆர்கே செல்வமணி தெரிவித்திருந்தார்.

திரைப்படத் துறையை சார்ந்த
15000 உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால் ஒரு மூட்டை சுமாரான அரிசி என்றாலும் ரூபாய் 1250 என கணக்கு வைத்தால் கூட ரூபாய் 2 கோடி வருகிறது.

உங்களோடு பணிபுரிந்து உங்களுக்கு தோள் கொடுத்து உங்களோடு வாழ்ந்து வந்த உங்கள் திரைப்படத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு உணவு அளிப்பீர் நிதி அளிப்பீர் என கேட்டுக்கொண்டிருந்தார் அனுப்பிய அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி.

இந்த நிலையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட உடன் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடனடியாக தமிழ் திரைப்படம் தொழிலாளர்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்

இதைப்போல் திரைப்பட தொழிலாளர்கள் கஷ்டத்தை அறிந்த மற்ற நடிகர்கள் நடிகைகள் உலக நாயகன் கமலஹாசன் தளபதி விஜய் அஜித்குமார் மற்ற நடிகர்கள் நடிகைகள் இதை அறிந்து தொழிலாளர் சம்மேளனத்திற்க்கு உடனடியாக நிதி அளிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம.

பெப்சி திரைப்பட தொழிலாளர்கள் படும் அவஸ்தை கண்டு உடனடியாக போர்க்கால அடிப்படையில் ரூபாய் 10 லட்சம் வழங்கிய நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களுக்கு திரைப்பட தொழிலாளர்கள சம்மேளனத்தின் தலைவர் ஆர்கே செல்வமணி கோடான கோடி நன்றி தெரிவித்தார்.

நீங்கள் நிதி அளிக்க வேண்டிய வங்கியின் கணக்கு எண்

NAME : FEFSI TRUST
A/C NUMBER : 910010000486931
IFSC : UTIB0000620
BRANCH : KILPAUK