‘மக்கள் தலைவா’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ரவி மரியா, அக்ஷரா விஜய், ராதாரவி, பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், கஞ்சா கருப்பு, இயக்குனர் பேரரசு, அக்னி எஸ் வருண், பயில்வன் ரங்கநாதன், இயக்குனர் சி ரங்கநாதன், கவிதாலயா சரவணன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ராம் தேவ்.
ஒளிப்பதிவாளர் :- கார்த்திக் எஸ். நாயர்.
படத்தொகுப்பாளர் :- துர்காஷ். எஸ்.
இசையமைப்பாளர் :- துளசி ராமன்.
தயாரிப்பு நிறுவனம் :- கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- கவிதாலயா சரவணன், . வெங்கடேசன்- R சந்திரசேகரன் – T ராம்குமார்.
மக்கள் தொடர்பு :- வேலு.
ரேட்டிங் :- 2./5.
கதையின் நாயகன் ரவி மரியா (தமிழ்க் குடிமகன்) வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றிக்கொண்டு மக்கள் பிரச்சினைகளை தீர்வு காண வேண்டும் என்று பலவிதமான போராட்டங்களை நடத்தி அதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களிடம் மிகப்பெரிய தொகையைப் பெற்றுக் கொண்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
மக்கள் பிரச்சினைகளை தீர்க்க போராடிக் கொண்டிருக்கும் கதையின் நாயகன் ரவி மரியா (தமிழ்க் குடிமகன்) வைத்து தொழிலதிபர் ராதாரவி (பச்சமுத்து பழனிமாணிக்கம்) ஒரு அரசியல் சதுரங்கத்தை ஆட முடிவு எடுக்கிறார்.
தொழிலதிபர் ராதாரவி (பச்சமுத்து பழனிமாணிக்கம்) கூறுவதை முதலில் யோசித்தாலும் அதன் பிறகு ஒத்துக்கொண்டு முதலில் திரைப்படத் துறையில் நடிகனாக அதன் பின்னர் உள்ளே வெளியே,’ என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலுக்கு வரும் கதையின் நாயகன் ரவி மரியா (தமிழ்க் குடிமகன்) மக்களுக்கு அதிரடியான திட்டங்களை அறிவித்து தேர்தலில் போட்டியிடுகிறார்.
மக்களுக்கு தேர்தலில் போட்டியிடும் கதையின் நாயகன் ரவி மரியா (தமிழ்க் குடிமகன்) மிகப்பெரிய அளவில் பக்கபலமாக தொழிலதிபர் ராதாரவி (பச்சமுத்து பழனிமாணிக்கம்) அவரது ‘உள்ளே வெளியே,’ கட்சியில் இணைகிறார்.
உள்ளே வெளியே’ என்ற கட்சியை ஆரம்பித்து வானவில் நிறத்துடன் கட்சி கொடியுடன் களம் இறங்கி தேர்தலுக்கு முன்னதாக கதையின் நாயகன் ரவி மரியா (தமிழ்க் குடிமகன்) மிகப்பெரிய விபத்தில் சிக்கி, சுயநினைவு இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கதையின் நாயகன் ரவி மரியா (தமிழ்க் குடிமகன்) பிரச்சாரத்தின் போது எங்கள் கட்சியை வெற்றி பெற்றால் முதல்வராக மக்களில் ஒருவரைத்.நீங்களும் ஆகலாம் சி எம் என்ற வாக்குறுதியை முன்வைக்கிறார்கள்.
இந்த நடந்த தேர்தலில் யார் முதல்வர் ஆனார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கதையின் நாயகன் ரவி மரியா
(தமிழ்க் குடிமகன்) நலமுடன் இருக்கிறாரா? நலமுடன் இல்லையா? என்பதுதான் இந்த ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக ரவி மரியா நடித்திருக்கிறார்.
பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரவி மரியா முதல் முதலாக கதையின் நாயகன் நடித்திருக்கும் அவருடைய வழக்கமான நடிப்பை எப்படி நடிப்பாரோ அப்படியே நடிப்பை கொடுத்திருக்கிறார்.
தொழிலதிபர் பச்சமுத்து பழனிமாணிக்கம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராதாரவி தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்.
அரசியல்வாதிகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
கதாநாயகியாக நடித்திருக்கும் அக்ஷரா விஜய், ஒரு குத்தாட்டம் போட்டு விட்டு சென்று விடுகிறார்.
அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், இவர்கள் நடிப்பு நிஜமான அரசியலை காட்டுகிறது.
இந்த ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் நடித்திருக்கும் மற்ற கஞ்சா கருப்பு, இயக்குனர் பேரரசு, அக்னி எஸ் வருண், பயில்வன் ரங்கநாதன், இயக்குனர் சி ரங்கநாதன், கவிதாலயா சரவணன், அனைத்து கதை பத்துகளும் மிக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் கலர்புல்லாக காட்சிப்படுத்தி இருக்கிறார்
இசையமைப்பாளர் துளசி ராமன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
முழுக்க முழுக்க அரசியல் மற்றும் நையாண்டி நிறைந்த முழு நீளப் பொழுதுபோக்குத் திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தாலும், கதை திரைக்கதை மற்றும் சில காட்சிகளின் வேகம் பார்வையாளர்களை முழுமையாக ஈர்க்கவில்லை என்பதுதான் உண்மை.
அன்றைய அண்ணா காமராஜர் எம்ஜிஆர் அரசியலில் இருந்து இன்றைய விஜய் அரசியல் வரை நிறைய நிகழ்வுகளை நினைவுபடுத்தும் விதமாக சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராம்தேவ்.
மொத்தத்தில், இந்த ‘மக்கள் தலைவா’ திரைப்படம் இன்னும் கொஞ்சம் கதை திரைக்கதையில் மெனக்கெட்டு இருந்தால் சிறந்த அரசியல் நக்கல் திரைப்படமாக அமைந்திருக்கும்.



