‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ இணையத் தொடர் விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட் பாலமுரளி, ஜகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, சம்பத் ராம், சரத் ரவி, ஹலோ கந்தசாமி. மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சவீர் சுதாகர்.

ஒளிப்பதிவாளர் :- பி.எம்.  ராஜ்குமார்.

படத்தொகுப்பாளர் :- பவித்ரன் கே.

இசையமைப்பாளர் :- பரத் தனசேகர்.

தயாரிப்பு நிறுவனம் :- எஸ்எஸ் குரூப்.

தயாரிப்பாளர் :- எஸ்.சிங்காரவேலன்

மக்கள் தொடர்பு :- சதீஷ் ( AIM )

ரேட்டிங் :-  3./5.

மம்மட்டியான் ஸ்டார்ஸ், ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் குழுவை மையமாகக் கொண்டு நகர்கிறது.

கிராமத்தை சேர்ந்த கதாநாயகன் வைபவ் முருகேசன், மற்றும்  வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக் மூன்று பேரும்  சிறு வயது முதல் நெருங்கிய  நண்பர்கள் மட்டும் இன்றி, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் (எம்.எஸ்.டோனி)-ன் தீவிர ரசிகர்களாகவும் இருந்து வருகிறார்கள்.

கதாநாயகன் வைபவ் முருகேசன், மற்றும்  வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக் இவர்கள் மூன்று பேரும் கேப்டனாக இருந்து கொண்டு ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ என்ற கிரிக்கெட் அணியை  நடத்துவதோடு, பல்வேறு கிராமங்களில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.

இந்த நிலையில், தங்களது கிராமத்தில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் , ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ என்ற கிரிக்கெட் அணியும் பங்கேற்று விளையாடி வரும் நிலையில், கிரிக்கெட் வீரர் (எம்.எஸ்.டோனி)  விளையாடும் கடைசி கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க வேண்டும் என்று மூவரும் முடிவு செய்கிறார்கள்.

கிராமத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில்  தங்களது ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பரிசுத் தொகையாக வழங்கும் ரூபாய் .50,000 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு, அதன் மூலம் சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை பார்க்க செல்லலாம் என்று திட்டம் போட, ஊர் தலைவர் மொட்டை ராஜேந்திரன் திடீர் மரணத்தால் இறுதிப் போட்டி நடக்காமல் போகிறது.

கிரிக்கெட் போட்டி நடக்காமல் போனதால் கையில் பணம் இல்லாத காரணத்தால் எப்படி சென்னை சென்று கிரிக்கெட் பேட்டியை பார்க்க முடியும் என  வருத்தத்தில் இருக்கிறார்கள்

இந்த நிலையில், ஊர் தலைவர் மொட்டை ராஜேந்திரனின்  அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் கிரிக்கெட் அணிக்கு கொடுப்பதற்காக அலுவலகத்தில் வைத்திருந்த  பரிசுத் தொகையை திருடி, அந்தப் பணத்தில் சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கான அனுமதி டிக்கெட் வாங்குவதற்காக  அனுப்பிவிடுகிறார்கள்.

சென்னையில் நடக்கும் கிரிக்கெட் பேட்டியை காண்பதற்கு அனுமதி டிக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் மூன்று நண்பர்கள் மற்றும் கதாநாயகன் வைபவ் முருகேசனின் முன்னாள் காதலி கதாநாயகி லாவண்யா அன்பழகனும் இவர்களுடன் சென்னையில் நடக்கும் கிரிக்கெட் பேட்டியை காண்பதற்கு செல்கிறார்.

தங்களது தல கிரிக்கெட் வீரர் (எம்.எஸ்.டோனி) விளையாடும் கடைசி போட்டியை நேரில் கண்டுகளிக்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருப்பவர்கள், தங்களிடம் இருக்கும்  நான்கு டிக்கெட்டும்  போலியானது என்று தெரிந்ததும் பேரதிர்ச்சி அடைகிறார்கள்.

எப்படியாவது தல கிரிக்கெட் வீரர் (எம்.எஸ்.டோனி) விளையாடும் போட்டியை நேரில் பார்த்துவிட்டு தான் சென்னையில் இருந்து கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்கள்.

அடுத்த போட்டி நடப்பதற்குள் அதற்கான அனுமதி டிக்கெட் வாங்குவதற்கான பணத்தை தயார் செய்யும் முயற்சியில் இறங்க, அதனால் பல்வேறு பிரச்சனையில்  கதாநாயகன் வைபவ் முருகேசன், மற்றும்  வெங்கட பாலமுரளி ஜகபர் சாதிக் மற்றும் லாவண்யா அன்பழகனும் சிக்கிக் கொள்கிறார்கள்.

கதாநாயகன் வைபவ் முருகேசன், மற்றும்  வெங்கட பாலமுரளி ஜகபர் சாதிக் மற்றும் லாவண்யா அன்பழகன் சிக்கிக் கொண்ட பிரச்சனைகளில் இருந்து மீண்டு, அவர்கள் நினைத்தது போல், அவர்களது தல கிரிக்கெட் வீரர் (எம்.எஸ்.டோனி) விளையாடும் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்தார்களா ? கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்கவில்லையா? என்பதுதான் இந்த ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ இனையத்தொடரின் மீதிக்கதை.

இந்த ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ இனையத்தொடரில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக் ஆகியோர் உண்மையான நண்பர்கள் எப்படி பழகுவார்களோ அதை  போலவே இனையத்தொடர்  முழுவதும் வலம் வருகிறார்கள்.

முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக் நண்பர்கள் முவரும் உடல் மொழி, உரையாடல்கள், கோபம், சண்டை ஆகியவற்றை மிகவும் இயல்பான நடிப்பை, மூலம் அந்த கதாபாத்திரங்களாகவே ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டார்கள்.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வைபவ் முருகேசனின் முன்னாள் காதலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லாவண்யா அன்பழகன், தற்போதைய காலக்கட்டத்திலும் பெண்கள் தங்களது விருப்பப்படி வாழ முடியாமல், தனது இயல்பான நடிப்பின் மூலம்  கதாபத்திரமாகவே நடித்திருக்கிறார்.

இந்த இணைய தொலைவில் நடித்திருக்கும் நான் கடவுள் ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, சம்பத் ராம், சரத் ரவி, ஹலோ கந்தசாமி ஆகியோரின் திரை இருப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப் பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் பி.எம்.ராஜ்குமாரின் ஒளிப்பதிவு மூலம்  கலர்ஃபுல்லான காட்சிகளை  திரைப்படமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் பரத் தனசேகரின் பின்னணி இசை மூலம் இணையத் தொடருக்கு உயிரூட்டியிருக்கிறார்

கிரிக்கெட் விளையாட்டின் பல விசயங்களை விவரமாகவும், துள்ளியமாகவும் பேசியிருப்பதோடு,
மிக எளிமையான கதை என்றாலும், ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போது, அடுத்து என்ன நடக்கும்?, என்ற கேள்வியுடன்  இணையத்தெடரை மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் சவிர் சுதாகர்.

கிரிக்கெட் வீரர்களாக இருந்தாலும் சரி, சினிமா நட்சத்திரங்களாக இருந்தாலும் சரி, நட்சத்திரங்களை கொண்டாடும் இளைஞர்கள் அவர்களை பின் தொடராமல் இருக்க வேண்டும் என  அறிவுரையை ஜாலியாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சவிர் சுதாகர்.

மொத்தத்தில், ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

error: Content is protected !!