நான்கு நாட்களில் ரூ.50 கோடியைக் கடந்த ‘மீசைய முறுக்கு-2’ வசூல் வேட்டை! ஹிப்ஹாப் தமிழா ஆதி, சுந்தர்.சி-க்கு மாலை அணிவித்து வாழ்த்திய 5 ஸ்டார் செந்தில்!
நான்கு நாட்களில் ரூ.50 கோடியைக் கடந்த ‘மீசைய முறுக்கு-2’ வசூல் வேட்டை! ஹிப்ஹாப் தமிழா ஆதி, சுந்தர்.சி-க்கு மாலை அணிவித்து வாழ்த்திய 5 ஸ்டார் செந்தில்!
சென்னை 29 செப்டம்பர் 2026 கடந்த 25 ஆம் தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மீசைய முறுக்கு-2’ திரைப்படம், வெளியான நான்கே நாட்களில் ரூ.50 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், இயக்குநரும் கதாநாயகனும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கும், திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுந்தர்.சி-க்கும் விநியோகஸ்தர் 5 ஸ்டார் செந்தில் மாலை அணிவித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நடிகர் இயக்குநர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு-2’ திரைப்படம், இளைஞர்களைக் கவரும் வங நகைச்சுவை, காதல், நட்பு மற்றும் இசை எனப் பல அம்சங்களுடன் உருவாகியுள்ளது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், முதல் நாளிலிருந்தே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களின் ஆதரவுடன் பல திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்று வரும் இத்திரைப்படம், வெளியான நான்கு நாட்களிலேயே ரூ.50 கோடி மேல் வசூலைக் கடந்து தமிழ் திரைப்பட துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தத் திரைப்படத்தின் வெற்றியில் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் எனப் பல பொறுப்புகளை ஏற்றுள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.
அதேபோல், திரைப்படத்தைத் தயாரித்துள்ள இயக்குநர் சுந்தர்.சி-க்கும் இந்த வெற்றி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திரைப்படத்தின் வசூல் சாதனையையும் ரசிகர்களின் வரவேற்பையும் பாராட்டும் விதமாக, விநியோகஸ்தர் 5 ஸ்டார் செந்தில், ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் தயாரிப்பாளர் சுந்தர்.சி ஆகியோரை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு படக்குழுவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், ‘மீசைய முறுக்கு-2’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தையும் மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
வெளியான நான்கு நாட்களிலேயே ரூ.50 கோடி வசூலைக் கடந்துள்ள ‘மீசைய முறுக்கு-2’, தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகினர் மத்தியில் நிலவி வருகிறது.











