சினிமாவை உயிருக்கு உயிராக நேசிப்பவர்களை சினிமா கைவிடாது  ‘மிக்ஸிங் காதல்’ திரைப்பட விழாவில் இயக்குநர் என்.பி.இஸ்மாயில் பேச்சு !!

சினிமாவை உயிருக்கு உயிராக நேசிப்பவர்களை சினிமா கைவிடாது  ‘மிக்ஸிங் காதல்’ திரைப்பட விழாவில் இயக்குநர் என்.பி.இஸ்மாயில் பேச்சு !!

சென்னை 15 பிப்ரவரி 2025 பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ ஐயப்பா மூவிஸ் நிறுவனங்கள் சார்பில் பொள்ளாச்சி எஸ்.மகாலிங்கம், டி.கண்ணன் மற்றும் ஆயிஷா அக்மல் இணைந்து தயாரிக்கும் படம் ‘மிக்ஸிங் காதல்’.

இயக்குநர் என்.பி.இஸ்மாயில் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் ஷிண்டே நாயகனாக நடித்திருக்கிறார்.

சம்யுக்தா வின்யா நாயகியாக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ஸ்ரேயா பாவ்னா, பிரியங்கா, திவ்யா, அம்பானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

சாதிக் கபீர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ராஜேஷ் மோகன் மற்றும் கோனேஸ்வரன் இசையமைத்துள்ளனர்.

கவித படத்தொகுப்பு செய்ய, கலை இயக்குநராக ஏ.கார்த்திக் பணியாற்றியிருக்கிறார்.

இஸ்மாயில் மற்றும் கோனேஸ் பாடல்கள் எழுதியுள்ளனர்.

மக்கள் தொடர்பாளராக கார்த்திக் பணியாற்றியிருக்கிறார்.

விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘மிக்ஸிங் காதல்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், இசையமைப்பாளர் தினா, தயாரிப்பாளர்கள் சங்க இணைச் செயலாளர் செளந்தர பாண்டியன், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் மற்றும் பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி, இயக்குநர் ரஷீத், மூத்த பத்திரிகையாளர் உமாதி உள்ளிட்ட ஏராளமானவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.

மிக்ஸிங் காதல் படத்தின் இசைத்தட்டை வெளியிட்ட பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வம்ணி பேசுகையில்,…

இயக்குநர் இஸ்மாயில் எனக்கு நெருங்கிய நண்பர்,

அவர் என்னை அழைத்த போது, நீண்ட நாட்களுக்குப் பிறகு படம் பண்ணியிருக்கே, நிச்சயம் நான் வருவதாக சொன்னேன்.

இன்று காதலர் தினம், அதனால் என் மனைவியை டின்னர்க்கு அழைத்துச் செல்வதாக கூறினேன், அவரும் இதற்காக ஊரில் இருந்து வந்திருக்கிறார்.

அதனால், காலதாமதம் பண்ணி மிக்ஸிங் காதல் மூலம் என் காதலை கெடுத்துவிடாதே, என்று சொன்னேன்.

அவரும் உங்களை உடனடியாக அனுப்பி வைத்துவிடுகிறேன், என்றார்.

ஆனால், இங்கு வந்தால் 7.30 மணி நிகழ்ச்சி தொடங்கவில்லை, இதுபோன்ற சூழ்நிலை சில நேரங்களில் ஏற்படத்தான் செய்யும், நாம் அதை பொறுத்துக் கொள்ள வேண்டும்.

நானும் இஸ்மாயிலுக்காக பொறுத்துக் கொண்டேன். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை பார்த்தேன், மிக சிறப்பாக இருந்தது.

ஒளிப்பதிவு, இசை, பாடல் வரிகள் அனைத்துமே ஈர்க்க கூடியதாக இருந்தது.

இஸ்மாயில் இந்த படத்தை மிக சிரமப்பட்டு எடுத்திருக்கிறார்.

தற்போதைய காலக்கட்டத்தில் திரையுலகம் கொரோனா காலக்கட்டம் போல் தான் சென்றுக் கொண்டிருக்கிறது.

இன்று சினிமாவின் தேவை சமூகத்திற்கு அதிகமாக தேவைப்படுகிறது.

அனைவரும் அனைத்து படங்களையும் பார்க்கிறார்கள், ஆனால் அவர் படங்களை எதில் பார்க்கிறார்கள் என்பது தான் தயாரிப்பாளர்களுக்கு தெரியவில்லை.

ஒரு திரைப்படத்தின் மூலம் பல வழிகளில் வருமானம் வருகிறது, ஆனால் அவை தயாரிப்பாளருக்கு கிடைக்காத ஒரு நிலை தான் இங்கிருக்கிறது.

ஆண்டுக்கு சுமார் 250-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிறது.

அதன் மூலம் திரைப்படத்துறையில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி வியாபாரம் நடைபெறுகிறது.

அதன் மூலம் ஜி.எஸ்.டியாக ரூ.540 கோடியும், லோக்கல்பாடி வரியாக ரூ.100 கோடி மற்றும் வருமான வரி என சினிமாத்துறை மூலம் அரசுக்கு சுமார் ரூ.1000 கோடி கிடைக்கிறது.

ஆனால், சினிமாத்துறைக்கான ஒரு முறையான கட்டமைப்பு இல்லை.

இன்று ஒரு திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது என்றால், அது என்ன ஷோவில் ஓடுகிறது, என்று சரியாக தெரிவதில்லை.

மல்டிபிளக்ஸில் ஓடிகொண்டிருக்கும் படத்தை குறிப்பிட்ட ஸ்கிரீனில் போட்டிருக்கிறார்கள், சென்று பார்க்கலாம் ஒரு நாள் 11 மணி காட்சியில் ஓடிக்கொண்டிருக்கிறது, மறுநாள் 3 மணி காட்சியாக மாற்றபப்டுகிறது.

எப்படி வேண்டுமானாலும், எந்த நேரத்தி வேண்டுமானாலும் திரையிடலாம் என்ற ஒரு சூழல் தான் நிலவுகிறது.

அதுவும் இதுபோன்ற சிறிய படங்களுக்கு தான் அது நிகழ்கிறது.

என் காலத்தில் திரைப்படம் எடுப்பது சிரமமான விசயமாக இருந்தது, ஆனால் படத்தை எடுத்து முடிவிட்டால் அது நிச்சயம் வெளியாகி விடும்.

தற்போதைய காலகட்டத்தில் ஒரு படத்தை எடுப்பது சுலபம் ஆனால் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் மிகவும் சிரமமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் படம் தயாரிப்பவர்கள் இரண்டு விசயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆங்கிலப் படம் போல் எடுக்கிறேன், என்று சொல்லிக் கொண்டு நம் கலாச்சாரத்தை தாண்டிய படங்களை எடுக்க கூடாது.

காரணம், ஆங்கிலலப் படங்கள் நமக்கு இப்போது சாதாரணமாக ஆகிவிட்டது.

ஓடிடி போன்றவற்றின் மூலம் எந்த ஒரு நாட்டின் படத்தையும் நாம் பார்த்துவிடுகிறோம்.

அதனால், ஆங்கிலப் படம் போல் எடுக்கிறேன், என்று முயற்சிக்காமல் நம் கலாச்சாரம், நம் வாழ்வியலை எதார்த்தமாக எடுத்தாலே அதை மக்கள் கொண்டாடுவார்கள், நம் மக்கள் மட்டும் இன்றி உலக மக்களும் அதுபோன்ற படங்களை தான் பார்க்க ஆவலோடு இருக்கிறார்கள்.

இன்று ஒரு தமிழ் படத்தை அர்ஜெண்டினா நாட்டில் பார்க்கிறார்கள், அதே போல் அர்ஜெண்டினா படத்தை நாமும் பார்க்க முடிகிறது.

எனவே, நம் கதைகளை குறைந்த முதலீட்டில் சொல்லக்கூடிய படங்களை எடுக்க வேண்டும், அதேபோல் அந்த படங்களை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்ற யுக்தியை சரியாக கையாள வேண்டும், இந்த இரண்டு விசயங்களை மனதில் வைத்து படம் தயாரித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

மிக்ஸிங் காதல் படத்தை பார்க்கும் போதே அதில் ரசிகர்களுக்கான அனைத்து விசயங்களும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இஸ்மாயில் எடுத்திருக்கிறார், என்பது தெரிகிறது.

படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த சிறிய படத்தின் நிகழ்ச்சிக்கு இவ்வளவு மீடியாக்கள் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கேமரா வைப்பதற்கே இடம் இல்லாத அளவுக்கு நிறைய கேமராக்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறது என்றால் இஸ்மாயில் ஏதோ ஒரு வகையில் ஊடகத்தினருடன் நட்பாக இருக்கிறார், என்று தெரிகிறது.

எனவே, இந்த படத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்து ஒத்துழைக்க வேண்டும், என்று மீடியாக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

படம் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என அனைவருக்கும் வாழ்த்துகள்.

படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் டி.கண்னன் பேசுகையில்,…

எங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் மாலை வணக்கம், நான் பொள்ளாச்சியை சேர்ந்தவன்.

என்னை முதன் முதலாக திரையுலகத்தில் தயாரிப்பாளராக அறிமுகப்படுத்திய இஸ்மாயில் அண்ணனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்ஸிங் காதல் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, சிறப்பு விருந்தினர்கள், ஊடகத்தினர் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன், நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் பொள்ளாச்சி மகாலிங்கம் பேசுகையில்…

இது எனக்கு முதல் மேடை, இந்த மேடை ஏற காரணமாக இருந்த இஸ்மாயில் அண்ணனுக்கு நன்றி.

இந்த மேடை ஏறுவதற்காக பல வருடங்கள் கஷ்ட்டபட்டிருக்கிறேன்.

இதுபோன்ற பல மேடைகளில் நான் ஏற வேண்டும், அதற்கு உங்களின் ஒத்துழைப்பு வேண்டும்.

பொள்ளாச்சி ஸ்ரீ ஐயப்பா டிரான்ஸ்போர்ட் மகாலிங்கமாக இருந்த என்னை, இன்று ஐயப்பா மூவிஸ் மகாலிங்கமாக இஸ்மாயில் அண்ணன் மாற்றியிருக்கிறார்.

எங்கள் படத்திற்கு ஆதரவளித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் கோனேஸ்வரன் பேசுகையில்,…

எங்கள் மிக்ஸிங் காதல் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.

இஸ்மாயில் அவர்களுக்காக நான் இதற்கு முன்பு ஐயாரெட்டு என்ற படம் பண்ணியிருக்கேன், இது எனக்கு இரண்டாவது படம்.

பாடல் எப்படி இருக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டேன், ஏற்கனவே ஐரெட்டில் விவசாயிகளுக்கான ஒரு பாடல் பண்ணோம், அதுபோல் பண்ன வேண்டுமா? என்று கேட்டேன்.

படம் ஒரு வித்தியாசமான படம், ஐரெட்டுல நல்ல சாப்பாடு போட்டுட்டோம், இந்த பத்தில் பாசுமதி அரிசி போட்டு, மட்டன் பிரியாணி செய்ய வேண்டும், என்று சொல்லிவிட்டார்.

இந்த படம் எப்படிப்பட்ட படமாக இருந்தாலும், நன்மை தான் வெல்லும் என்று இயக்குநர் இஸ்மாயில் சொல்வார்.

அப்படி நல்ல மனம் படைத்தவர், அவர் மனம் போல் இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும்.

அதேபோல் தயாரிப்பாளர்கள் பெரிய படங்கள் மீது தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அப்படி இல்லாமல் இதுபோன்ற சிறிய படங்கள் மீது அவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும், அப்போது தான் என்னைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால், சிறிய படங்களின் மீது கவனம் செலுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

மிக்ஸிங் காதல் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் ராஜேஷ் மோகன் பேசுகையில்,…

நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.

படம் நல்லபடியாக வந்திருக்கிறது, அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.” என்றார்.

நடிகை பிரியங்கா பேசுகையில்,…

அனைவருக்கும் வணக்கம், என் பெயர் பிரியங்கா, பெங்களூரைச் சேர்ந்த பெண்.

இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் இஸ்மாயில் சாருக்கு நன்றி.

அனைவருக்கு நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் தீனா பேசுகையில்,

இரண்டு இசையமைப்பாளர்கள் இந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள், அவர்களது பணி மிக சிறப்பாக இருந்தது.

அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

அவர்கள் இசைக் கலைஞர்கள் சங்கத்தில் இருக்கிறார்களா? என்று தெரியவில்லை, இல்லை என்றால் உடனே உறுப்பினர்களாக சேர்ந்துவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இயக்குநர் இஸ்மாயில் எனது நெருங்கிய நண்பர், அவருக்காக தான் வந்தேன்.

மிக சிறந்த மனிதர்.

இந்த நிகழ்ச்சியில் எந்தவித சத்தம் போடாமல், சலசலப்பும் இல்லாமல் மிக அமைதியாக உட்கார்ந்திருக்கிறாரே அது தான் இஸ்மாயில்.

இந்த படத்தில் அவருக்கு மிக சிறப்பான குழு கிடைத்திருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.

அதேபோல், இஸ்மாயிலின் மகள் மிகப்பெரிய தயாரிப்பாளராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

கணக்குள்ளவன் மீண்டான், கணக்கற்றவன் மாண்டான், என்று சொல்வார்கள்.

அதுபோல் தயாரிப்பு பணி என்பது சாதாரணமான விசயம் இல்லை, அதை சிறப்பாக செய்து பெரிய தயாரிப்பாளராக வர வேண்டும், இஸ்மாயில் மிகப்பெரிய இயக்குநராக வர வேண்டும்.

படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகள்.

படம் வெற்றி பெற வாழ்த்துகள், நன்றி.” என்றார்.

ஒளிப்பதிவாளர் சாதிக் கபீர் பேசுகையில்,…

மேடையில் இருக்கும் ஜாம்பவாங்களுக்கு நன்றி.

நான் மலையாளத்தில் நிறைய படங்கள் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.

தமிழில் இது தான் என் முதல் படம். என்னை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியிருக்கும் இஸ்மாயில் சாருக்கு நன்றி.

எங்கள் படக்குழு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

படக்குழு அனைவரும் நண்பர்கள் போலவும், ஒரு குடும்பம் போலவும் இருந்தார்கள்.

புதியவன் என்று என்னை பார்க்காமல் நன்றாக பழகினார்கள்.

செல்வமணி சார் பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது.

பல வருடங்களுக்கு முன்பு சென்னையில் தான் பணியாற்றினோம்,

அப்போது இங்கு மேடையில் பேசுவேன், என்று நினைக்கவில்லை.

அது இன்று நடந்திருப்பது மகிழ்ச்சி, நன்றி.” என்றார்.

நடிகை ஸ்ரேயா பாவ்னா பேசுகையில்,…

அனைவருக்கு வணக்கம்,

எனக்கு இந்த வாய்ப்பளித்த இஸ்மாயில் சாருக்கு நன்றி.

எங்கள் படத்தின் இசை வெளியீட்டுக்கு வந்திருக்கும் அனைத்து ஊடகத்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி.

நான் கன்னட படங்களில் நாயகியாக நடித்திருக்கிறேன்.

மிக்ஸிங் காதல் மூலம் தமிழில் அறிமுகமாகியிருக்கிறேன்.

நான் பல கன்னட படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் நடித்தது என சிறப்பான அனுபவமாக இருந்தது.

அனைவரும் ஒரு குடும்பமாக பணியாற்றினார்கள்.

படம் முழுவதும் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டது.

நான் ஒவ்வொரு நாள் படப்பிடிப்புக்கு செல்லும் போது படப்பிடிப்பு போல் இருக்காது, பிக்னிக் போகிறது போல் தான் இருக்கும். படக்குழுவினர் அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

என்னுடன் பணியாற்றிய அனைவரும் நன்றி.

இந்த படத்தை நாங்கள் அனைவரும் கஷ்ட்டப்பட்டு இஷ்ட்டப்பட்டு செய்திருக்கிறோம், நீங்கள் அனைவரும் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும்.

மிக்ஸிங் காதல் படத்தில் அனைத்தும் மிக்ஸாகி இருக்கு. உங்களுக்கு என்ன வேண்டுமோ அனைத்தும் படத்தில் இருக்கிறது.

இன்று சோசியல் மீடியாவில் பல விசயங்கள் நடக்கிறது, அது பற்றியும் படத்தில் மெசஜ் இருக்கிறது.

நிச்சயம் படம் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.” என்றார்.

கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசுகையில்,…

மிக்ஸிங் காதல் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் மிக அற்புதமாக இருந்தது.

இயக்குநர் இஸ்மாயிலுக்கு என் பாராட்டுகள்.

ஹீரோ நான்கு பெண்களுடன் புரண்டு இருக்கிறார், அவரை பார்க்கும் போது ஆண்கள் நிச்சயம் பொறாமைப்படுவார்கள்.

பிரமாண்டமாக பிரமாதமாக பண்ணியிருக்கிறார்கள்.

கேமரா மேன், எடிட்டர், இசையமைப்பாளர் என அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.

இஸ்மாயில் சிறந்த மனிதர்.

நான் என் குடும்ப நிகழ்ச்சிக்காக வேளசேரி செல்ல வேண்டும், ஆனால் அதை தவிர்த்துவிட்டு இஸ்மாயிலுக்காக இங்கு வந்திருக்கிறேன்.

காரணம், அவரது அன்பு. இந்த படத்தில் எனக்கு பிடிக்காத ஒரே விசயம் என்றால், ஆண்கள் தண்ணி அடித்தாலே எனக்கு பிடிக்காது, இந்த படத்தில் பெண்கள் தண்ணி அடிக்கிறாங்க.

அந்த ஒரு விசயம் பிடிக்கவில்லை என்றாலும், அற்ற விசயங்கள் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி அடையும், நன்றி.” என்றார்.

நடிகர் அம்பானி சங்கர் பேசுகையில்,…

மேடையில் இருக்கும் பெரியவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி.

எனக்கு வாய்ப்பளித்த இஸ்மாயில் சாருக்கு நன்றி.

பாவ்னா சொன்னது போல், படப்பிடிப்புக்கு போகும் போது பிக்னிக் போவது போல தான் இருகும்.

அதற்கு காரணம் இஸ்மாயில் அண்ணனின் நல்ல குனம்.

எதற்கும் கோபப்பட மாட்டார்,

ரொம்பவே ரிலாக்ஸாக இருப்பார்.

படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும், நன்றி.” என்றார்.

மூத்த பத்திரிகையாளர் உமாபதி பேசுகையில்,…

நண்பர் இஸ்மாயிலின் பத்தாவது படம்.

இப்போது தான் அவரது முந்தைய படத்தின் நிகழ்ச்சி நடந்தது போல் இருக்கிறது, அதற்குள் பத்தாவது படத்தில் வந்து நிற்கிறார்.

அவர் சிக்ஸர் சித்து போல் பாலுக்கு சிக்ஸர் அடிக்க கூடியவர்.

அண்ணன் இராம நாராயணனுக்கு பிறகு அதிக படங்கள் எடுத்தவர் என்ற பட்டியலில் இஸ்மாயில் இடம் பிடித்துவிடுவார், என்று நினைக்கிறேன்.

பெரிய படங்களில் அஜித், விஜய் போன்றவர்கள் நடிப்பார்கள், அது சூப்பர் ஹீரோ படங்கள் போல்.

ஆனால், இதுபோன்ற சிறிய படங்களில் தான் நம்ம பக்கத்து வீட்டு பையன், ஒரு அழகான பொண்ணு இருப்பது போல் இருப்பார்கள்.

இவர்கள் அனைவரும் நாம் அன்றாட பார்க்க கூடிய முகங்களாக இருப்பார்கள்.

இதுபோன்றவர்களை வைத்து மிக சிறப்பான, நம் மனதுக்கு நெருக்கமான படங்களை எடுப்பது தான் சிறப்பானதாக இருக்கும்.

அதேபோல் இஸ்மாயில் நிறைய கலைஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என அவர் மூலம் அறிமுகப்படுத்தியவர்கள் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மிக சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்.

இஸ்மாயில் அனைவரையும் சுதந்திரமாக பணியாற்ற விடுவார், அதேபோல் மற்றவர்களிடம் தனக்கு தேவையானதை மிக எளிதாக பெற்றுவிடுவார்.

அப்படி தான் இந்த படத்தை விரைவாக குறுகிய நாட்களில் முடித்திருக்கிறார்.

இதற்கு காரணம் படக்குழு தான். இவர்களில் யாராவது ஒருவர் ஒத்துழைக்காமல் போயிருந்தாலும் படம் முடிந்திருக்காது.

எனவே இஸ்மாயிலுக்கு ஒத்துழைத்த படக்குழுவினர்களுக்கு அவரது நண்பர் என்ற முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படம் வெற்றி பெற வாழ்த்துகள், நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மற்றும் பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி பேசுகையில்,…

“நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்கள், பத்திரிகையாளர்கள், அழைப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம். இஸ்மாயில் சார் பற்றி சொல்ல வேண்டும் என்றால், புன்னகை மன்னன் என்ற பெயருக்கு ஏற்றவர், அதனால் தான் அவரை பெண்கள் கிஸ்மாயில் என்று சொல்கிறார்கள்.

படத்தின் நாயகன் ஷிண்டோவுக்கு மஞ்சம் இருக்கும் என்று நினைக்கிறேன், அந்த அளவுக்கு நான்கு நடிகைகளுடன் புரண்டு இருக்கிறார்.

இந்த படத்தின் நடன இயக்குநர் டயானா சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்கள்.

செல்வமணி சாரின் வாழ்த்தால் கேமரா மேனுக்கு நோபள் பரிசு கிடைத்தது போல. சிறு முதலீட்டு படங்கள் வெற்றியடைந்தால் தான் சினிமா ஆரோக்கியமாக இருக்கும்.

பெரிய படங்கள் எனு நினைக்கும் படங்கள் ரிலீஸுக்கு பிறகு சிறிய படங்களாகிவிடுகிறது.

சிறிய படங்கள் என்று நினைக்கும் படங்கள், வெளியீட்டுக்கு பிறகு வசூல் மூலம் பெரிய படமாகி விடுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் என்ன செய்ய வேண்டும் என்றால், இந்த நிகழ்ச்ச்சி உள்ளிட்ட படம் பற்றிய தகவல்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், அப்போது தான் படம் பற்றி மக்களுக்கு தெரிய வரும்.

சிறிய படங்களுக்கு பத்திரிகையாளர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் செளந்தர பாண்டியன் பேசுகையில்,…

மிக்ஸிங் காதல் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் நன்றாக இருக்கிறது.

படத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும், இந்த படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.

இயக்குநர் ரஷீத் பேசுகையில்,…

“நாங்க ஒரு காதல் பண்ணிட்டே கஷ்ட்டப்பட்டோம், இங்கே மிக்ஸிங் காதல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

டிரைலர் பார்க்கும் போது தான் தலைப்புக்கான காரணம் தெரிகிறது.

பொதுவாக இஸ்மாயிலிடம் அனைவரும் கேட்பது, இவர் எப்படி தொடர்ந்து படம் பண்ணுகிறார் என்ற ஒரே கேள்வி மட்டும் தான்.

அதற்கு காரணம் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும், மன அழுத்தம் இருந்தாலும் சிரித்துக்கொண்டே அதை கடந்து போவார்.

அதை அவர் எப்படி தான் செய்கிறார்,

என்று தெரியவில்லை.

எனக்கு அந்த வித்தையை எனக்கு அவர் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த படத்தின் மூலம் எனக்கு இரண்டு நல்ல விசயங்கள் நடந்தது.

நான் தயாரிக்கும் புதிய படத்தில் இந்த படத்தின் இசையமைப்பாளர், பி.ஆர்.ஓ மற்றும் கதாநாயகிகளில் ஒருவரை பயன்படுத்துவேன். என் நண்பன் இஸ்மாயிலுக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி.

அவர் பெரிய இயக்குநராக வருவார்.

நடன இயக்குநர் டயானாவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

அடுத்தது உலக சர்வதேச தமிழ்ப்பட சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் உலகம் முழுவதும் தமிழ்ப் படங்களை கொண்டு செல்ல இருக்கிறோம்.

படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள், நன்றி.” என்றார்.

நடிகை திவ்யா பேசுகையில்,…

அனைவருக்கும் வணக்கம்,

இது என் முதல் தமிழ்ப் படம். எனக்கு வாய்ப்பளித்த இஸ்மாயில் சாருக்கு நன்றி.

தயாரிப்பாளர்கள், பிரன்ஸ்ட் பிக்சர்ஸ் அனைவருக்கும் நன்றி.

தயவு செய்து அனைவரும் இந்த படத்தை பாருங்கள், ஆதர்வு தாருங்கள். நன்றி.” என்றார்.

நடிகர் ஷிண்டோ பேசுகையில்,…

என்னை போன்ற புதிய முகத்தை நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குநர் இஸ்மாயில் சாருக்கு நன்றி.

தயாரிப்பாளர்கள் கண்ணன், மகாலிங்கம் ஆகியோருக்கும் நன்றி.

கேமரா மேன், நடன இயக்குநர் டயானா மேடம், என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.

நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ரிஷி ராஜ் பேசுகையில்,…

அனைவருக்கும் வணக்கம், இஸ்மாயிலின் பத்தாவது படம் வாழ்த்துகள்.

படத்தில் நாயகன், நாயகி என அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும், சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர்களின் பணி சிறப்பாக இருக்கிறது. ஒளிப்பதிவாளரின் பணியும் சிறப்பாக உள்ளது.

அனைவருக்கும் வாழ்த்துகள், நன்றி.” என்றார்.

நடன இயக்குநர் டயானா பேசுகையில்,…

நான் நடன இயக்குநராகி ஒரு வருடம் ஆகிறது,

இது தான் என் முதல் மேடை. இந்த படத்தில் இரண்டு பாடல்கள் பண்ணியிருக்கேன்.

நாயகன், நாயகி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் என அனைவரும் சிறப்பாகவும், வேகமாகவும் பணியாற்றினார்கள்.

அதனால் இரண்டு கால்ஷிட் பாடலை ஒரே கால்ஷிட்டில் முடித்தேன்.

ஊடகத்தினர் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும், நாங்கள் எவ்வளவு தான் பணியாற்றினாலும், நீங்கள் ஆதரவு கொடுத்தால் தான் எங்களால் முன்னேற முடியும், மக்களிடம் சென்றடைய முடியும், எனவே எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்,

நன்றி.” என்றார்.

இயக்குநர் என்.பி.இஸ்மாயில் பேசுகையில்,…

மேடையில் இருக்கும் ஆன்றோர்களுக்கும் சான்றோர்களுக்கும், மீடியா நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

என்னுடன் பணியாற்றிய என்று சொல்வதை விட, நாங்கள் அனைவரும் சேர்ந்து தான் செய்கிறோம்.

என் நிறுவனத்தின் பெயர் பிரண்ட்ஸ் பிக்சர்ஸ், எனவே என்னுடன் பணியாற்றும் அனைவரும் எனது நண்பர்கள் தான் அவர்கள் பணியாற்றுபவர்கள் என்று சொல்ல மாட்டேன்.

அனைவரும் சமமாக இருக்க வேண்டும், எல்லாமும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும், என்று நினைப்பவன். இன்றைய நிகழ்ச்சிக்கு அனைவரும் வந்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.

இந்த படத்தில் நடித்த நடிகைகள் அனைவரும் புதியவர்கள் என்று நினைக்க வேண்டாம், அவர்கள் அனைவரும் கன்னடத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்கள், தமிழில் தான் அவ்ர்கள் புதியவர்கள்.

படத்தை தயாரித்த கண்ணன் மற்றும் மகாலிங்கம் இவருக்கும் எதுவும் தெரியாது.

நான் கேட்டதை எல்லாம் கொடுத்தார்கள், என் மீது நம்பிக்கை வைத்து செய்தார்கள்.

சினிமா எப்போதும் நன்றாக தான் இருக்கிறது.

நாம் சரியான பட்ஜெட்டில், சரியான நேரத்தில் ஒரு படத்தை முடித்தால் நமக்கு நிச்சயம் லாபம் கொடுக்கும்.

என்னுடைய படங்கள் அனைத்தும் அப்படித்தான் இருக்கும், அதனால் தான் தொடர்ந்து படம் பண்ணிக் கொண்டு இருக்கிறேன்.

நம்மால் எவ்வளவு முடிமோ அதற்கு ஏற்றவாறு படம் பண்ண வேண்டும், அதை விட்டு விட்டு நம் தகுதிக்கு மேலான பட்ஜெட்டில் படம் பண்ணால் தான் நஷ்ட்டம் ஏற்படுகிறது.

மாதம் ஒரு கோடி கொடுப்பதாக சொல்லி சினிமாவை விட்டுவிட வேண்டும் என்று சொன்னால் நிச்சயம் நான் செய்ய மாட்டேன்.

சினிமாவை உயிராக நேசிப்பவர்களை சினிமா ஒருபோதும் கைவிடாது, என்பது தான் என் கருத்து.

என் படத்தின் கதாநாயகி சூப்பர் மாடல், ஆனால் எந்தவித பந்தாவும் இல்லாமல் நடித்தார். அனைவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்கள்.

எல்லாருமே கூட்டு முயற்சியாக இந்த படத்தை முடித்து உங்கள் முன்பு வைத்துவிட்டோம்.

இதை மக்களிடம் பறிமாறுபவர்கள் மீடியா நண்பர்கள் தான். அவர்கள் எனக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள், இந்த படத்திற்கும் அதை எதிர்பார்க்கிறேன்.

இந்த படத்தை கன்னடத்திலும் பண்ணியிருக்கோம்.

எனவே, இந்த படத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று கூறி வந்திருந்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.

பின்னணி பாடகி வினிதா பேசுகையில்,…

எனக்கு இந்த வாய்ப்பளித்த இஸ்மாயில் சார் மற்றும் ராஜேஷ் மோகனுக்கு நன்றி.

சிறப்பான காதல் பாடலை பாடுவதற்கான வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

இது தமிழில் எனக்கு இரண்டாவது பாடல்.” என்றவர் படத்தில் தான் பாடிய பாடலை பாடினார்.

நடிகை சம்யுக்தா வின்யா பேசுகையில்,…

நான் கன்னட நடிகை, 15 கன்னட படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன்.

அதில் 8 படங்கள் வெளியாகி விட்டது.

மாடலாக என் வாழ்க்கையை தொடங்கினேன், இன்று சூப்பர் மாடலாக முன்னேறியிருக்கிறேன்.

75-க்கும் மேற்பட்ட ஃபேஷன் ஷோக்களில் பணியாற்றியிருக்கிறேன்.

இது என்னுடைய முதல் தமிழ்ப் படம். என்னை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய இஸ்மாயில் சாருக்கு நன்றி.

எல்லா நடிகர்களுக்கும் தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும்,

என்று ஆசை இருக்கும். எனக்கு தமிழ் சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்று அதிகமாக ஆசைப்பட்டேன்.

இந்த படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. டிரைலர் மற்றும் பாடல்கள் சிறப்பாக இருக்கிறது.

படம் எப்போது வெளியாகும் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய ஆசை.

நான் இங்கு நிற்க வேண்டும் என்றால் மீடியாக்கள் எனக்கு ஒத்துழைக்க வேண்டும்.

தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பது தான் என் ஆசை. மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.