பெருந்தலைவர் காமராஜரை முதன்முதலில் தேர்தலில் நிற்க வைத்தது ஐய்யா முத்தராமலிங்க தேவர்தான் நடிகர் டத்தோ ராதாரவி.

சென்னை 01 நவம்பர் 2021 பெருந்தலைவர் காமராஜரை முதன்முதலில் தேர்தலில் நிற்க வைத்தது ஐய்யா முத்தராமலிங்க தேவர்தான் நடிகர் டத்தோ ராதாரவி.

ஜல்லிக்கட்டு மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.எம்,பாபு, எஸ்.எஸ். ஆர்.சத்யா, ஜி.ஜெயந்தினி பக்தியுடன் இப்படத்தை தயாரிக்க ஜே எம் பஷீர் நடிக்கும் தேசிய தலைவர் இசை வெளியீடு

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிறது

ஜல்லிக்கட்டு மூவிஸ் பக்தியுடன் வழங்கும் படம் தேசிய தலைவர்.

உலகையே தன் பக்கம் திருப்பிப் பார்க்க வைத்து எழைகளுக்குக்காகவும் தன் இனத்துக்காகவும் வாழ்வையும் தன்னையும், தனது  சொத்துக்களையும் அர்ப்பணித்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக தேசிய தலைவர் உருவாகிறது.

இதில் தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவராக ஜே.எம் பஷீர் நடிக்கிறார்.

மேஸ்டரோ இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார்.

ஊமை விழிகள் உள்ளிட்ட பலவேறு வெற்றிப்படங்களை இயக்கி அளித்த திரைப்படக் கல்லூரி மாணவர்  ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார்.

பாரதிராஜா, ராதாரவி, முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சினேகன் பாடல்கள் எழுதுகிறார்.

அகிலன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏ. எம் சவுத்ரி மூலக்கதை அமைத்திருகிறார்.

வெங்கட் எடிட்டிங் செய்கிறார்.

மணிமொழியன் ராமதுரை அரங்கம் அமைக்கிறார்.

மிரக்கல் மைக்கேல் ஸ்டண்ட் அமைக்கிறார்.

பி ஆர் ஒ டைமண்ட் பாபு.  கே.எஸ்.கே செல்வா.

தேசிய தலைவர் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு  தேவர் ஜெயந்தி தினமான அக்டோபர் 30ம் தேதி சென்னையில் உள்ள சிகரம் அரங்கில் நடந்தது.

இதில் படக் குழுவினர் கலந்துகொண்டு பேசினார்கள்.

டத்தோ ராதாரவி பேசியதாவது:

இப்படத்தில் நாயகனாக நடிக்கும் பஷீருக்கு என்னுடைய நன்றி கூறிக்கொள்கிறேன்.

எல்லாவற்றையும் கடந்து எல்லோரும் தேசிய தலைவர் படத்தில் இணைந்திருக்கிறோம்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையாஜா  இணைந்திருப்பது வரப்பிரசாதம் இப்படத்தில் இடம் பெரும் தேவரய்யா பாடல் வைரலாகி விட்டது.

சினேகன் அற்புதமாக எழுதி இருக்கிறார். என்னுடைய வீட்டில் தேவரய்யா படத்தை வைத்து கும்பிடுகிறேன்.

அதேபோல் என்னுடைய அப்பா அம்மா படம், பெருந்தலைவர் காமராஜர் படம் இருக்கும்.

பெருந்தலைவர் காமராஜரை முதன்முதலில் தேர்தலில் நிற்க வைத்தது ஐய்யா முத்தராமலிங்க தேவர்தான்.

அவரை கடத்திக் கொண்டு சென்றுவிட்டார்கள்.

உடனே தேவரய்யா  அவர்கள் இங்கு நான் பேசி முடிப்பதற்க்குள் அபேட்சகர் (வேட்பாளர் )வரவில்லை என்றால் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது என்று சிம்ப்ளாக சொன்னார்.

பிறகு அவர் பேசி  முடிப்பதற்குள் அவரை காரில் கொண்டு வந்துவிட்டுவிட்டார்கள்.

அப்படியோரு மனிதர் தேவரய்யா.
என் அப்பாவுக்கும் அவருக்குமே சின்ன கசப்பு ஏற்பட்டது பின்னர் அவர்கள் நல்ல நண்பர்களாகிவிட்டார்கள்.

முத்துராமலிங்க தேவர் அய்யா படத்தை நான் ஏன் கும்பிடுகிறேன் என்றால் அவர் ஒரு வீரம் விளைந்த மண்.

முத்துராமலிங்க தேவர் சாதாரணமாகத்தான் பேசுவார், மரியாதையாக பேசுவார்.

ரஜினிகாந்த்திடமே அவரது பேச்சை கொடுத்திருக்கிறேன்.

தேவரய்யா இனத்துக்கே பெரிய வீரமுண்டு.

தேசிய தலைவர் படத்தில் வக்கீலாக நடிக்கிறேன்.

தேவரய்யாவை விடுதலை செய்ய வாதாடும் வக்கீலாக நடிக்க வேண்டுமென்றார்கள் அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

நந்தனத்திலும் மதுரையில் இருக்கும் தேவரய்யா சிலையில் கம்பீரமாக இருக்கும்.

தயாரிப்பாளர் எம்.எம். பாபு பேசும்போது ,’ தேசிய தலைவர் படத்தை மக்களிடம் கொண்டு சென்று பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.என்றார்.

தயாரிப்பாளர்  எஸ்.எஸ்.ஆர்.சத்யா, பிஆர் டைமண்ட் பாபு அனைவரையும் வரவேற்றனர்.

முன்னதாக படத்தில் இடம்பெறும்  இசைஞானி இசையில் அற்புதமாக உருவான, ’தேவரை போல யாரும் பிறக்கவுமில்லை பிறக்க போறதுமில்லை’ என்ற  பாடல் திரையிடப்பட்டது, அதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

error: Content is protected !!