16 வருடங்களுக்கு பின் நடிக்க வரும் ‘வண்ண வண்ண பூக்கள் நடிகை வினோதினி !
16 வருடங்களுக்கு பின் நடிக்க வரும் ‘வண்ண வண்ண பூக்கள் நடிகை வினோதினி !இயக்குநர் நடிகர் விசு மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை வினோதினி. சிறு வயதிலேயே “நாயகன்” படம் முதலாக பெரும் நடசத்திரங்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
தனது மலரும் நினைவுகள் குறித்தும் மீண்டும் நடிக்க இருப்பதை குறித்தும் நடிகை வினோதினி கூறியதாவது…மணிரத்னம் சாரை அந்தப்படத்திற்கு பிறகு நான் பார்த்ததே இல்லை. சுஹாசினி மேடத்தை பார்க்கும்போது இதைப்பற்றி பேசிக்கொண்டிருப்பேன்.
என் வாழ்க்கை முழுவதுமே சினிமாவை சுற்றித்தான் இருந்தது. 16 வயதிலேயே நாயகியாகிவிட்டேன். கஸ்தூரிராஜா சார் எங்கள் வீட்டுக்கு அருகில் தான் குடியிருந்தார்கள். அவரது ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தினார்.
தமிழை விட கன்னடத்தில் நிறைய படங்களில் நாயகியாக நடித்தேன். கன்னடத்தில் நிறைய வாய்ப்புகள் வந்ததால் தமிழில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை, நான் திரும்பி வரும்போது இங்கு நிறைய புது நடிகைகள் வந்துவிட்டனர் அதனால் குணச்சித்திர பாத்திரங்கள் தான் செய்தேன். தமிழ் திரையுலகம் பிடிக்கும் என்பதால் அதிலும் தொடர்ந்து நடித்தேன். அப்போதைய நடசத்திரங்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளேன் என இப்போது நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
திருமணத்திற்கு பிறகு ஒரு கட்டத்தில் அம்மா அப்பாவை, அத்தை மாமா மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளும் பொறுப்பும் சேர்ந்து வந்துவிட்டதால், சினிமாவிலிருந்து, ஒதுங்க வேண்டியதாகிவிட்டது. இது பெண்களின் வாழ்க்கையில் இயல்பான ஒன்றுதான்.
நான் இருந்த போது இருந்த சினிமா , இப்போது இல்லை, நிறைய மாறிவிட்டது.
Related posts:
ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க களமிறங்கும் பிரபல நடிகை
13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார் நடிகை விஜயசாந்தி
மீண்டும் திரைப்படங்களில் நடிக்க பிரபல நடிகை முடிவு
இயற்கை விவசாயத்தோடு வாழ்ந்து வருவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது – கிஷோர்
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்க இருக்கும் புதிய படத்தில் தடம் பட நடிகை ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
பேஸ்புக் மூலம் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகை நிம்மி ஓபன் டாக்*
கதைக்கு தேவையானால் நெகட்டிவ் ரோலில் நடிக்க தயார் விநோதய சித்தம் நடிகை ஷெரினா அதிரடி.
நடிக்கலாமா. வேண்டாமா. நண்பர்களிடம் அறிவுரை கேட்கும் பிரபல நடிகை
மோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு ‘பிக் பிரதர்’ மூலம் நிறைவேறியது – நடிகை மிர்னா
கார்த்தி-ஜோதிகா படத்தில் பழம்பெரும் நடிகை நடிக்க ஒப்பந்தம்

