இந்திய சினிமாவில் முதன் முறையாக 3D தொழில் நுட்பத்தில் கதாநாயகியை சூப்பர் ஹீரோவாக வைத்து உருவாகும் திரைப்படம் கிரவுன் (Crown)
India’s first woman superhero இந்திய சினிமாவில் முதன் முறையாக 3D தொழில் நுட்பத்தில் கதாநாயகியை சூப்பர் ஹீரோவாக வைத்து உருவாகும் திரைப்படம் கிரவுன் (Crown)இதில் கதாநாயகியாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அதிதி வர்ஸ் நடிக்கிறார்,
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஹாலிவுட், அரபிக், சைனா, சவுத் கொரியா போன்ற நாட்டைச் சேர்ந்த நடிகர்களும் இந்தி, தெலுங்கு, தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களும் நடிக்க உள்ளனர்.
படத்தை நரேன் பிரநிஸ் ராவ் என்பவர் இயக்குகிறார் இவர் மலேசியாவில் செட்டிலான தமிழன் ஆவார்.
ஜோகி சர்மா, பொன்சங்கர் மற்றும் கே.பி பிரபு ஆகிய மூவர்கள் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்கள்
.
இப்படத்திற்கு இசை மரியா ஜெரால்டு, சண்டைப் பயிற்சி திலீப் சுப்பராயன், கலை இயக்குனர் ரேம்போன் பால்ராஜ்
எடிட்டர் J. ஜெய ராஜேந்திர சோழன்.
இதில் ஒளிப்பதிவாளர் பொன்சங்கர், தமிழில் தமிழன் என்று சொல் மற்றும் லிவிங் டுகெதர் என்ற படங்களின் இயக்குனர் ஆவார்
அதேபோல் எடிட்டர் J.ஜெய ராஜேந்திரசோழன் மீண்டும் வா அருகில் வா எனும் படத்தின் இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல ஹாலிவுட் படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்ட தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு வி.ஜானகிராமன் மேற்பார்வையில் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆக்குமெண்டெட் ரிலிடி வேர்ச்சொல் புரோடக்சன் ஆகிய தொழில் நுட்பங்களைக் பின்னணியாகக் கொண்டு படத்தை 3டியில் இயக்குகிறார்
இப்படத்தை கியுபிரேம் மூவி சார்பில் டாக்டர் அரவிந்த். K மற்றும் ஒயிட் சாண்ட் புரோடக்சன்ஸ் சார்பில் அபய் குமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்
Related posts:
ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் பிரேக்கிங் நியூஸ் (Breaking News) ஆக்க்ஷன் திரைப்படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது..
இந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையுடன் வெளியாகும் கெட்டவன் பட இயக்குனரின் படைப்பு 10 லட்சம் ரூபாயில் உருவாக்கப்பட்ட டே நைட் திரைப்படம்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்!.!!
சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரை விளம்பரப் படுத்துவதற்காக முப்பரிமாண தொழில் நுட்பத்தில் நீர் நிலையில் காட்சிப்படுத்தி வியக்க வைத்த படக்குழுவினர்.!
இந்தியாவிலேயே முதன் முறையாக 2000முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் “ ஆண்கள் ஜாக்கிரதை “
ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் ‘பாம்பாட்டம்’ திரைப்படத்தில் 120 அடி நீள ராட்சத பாம்பு செய்யும் அட்டகாசம் இந்திய சினிமாவில் பார்க்காத ஆச்சரியம்.!!
இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம்!!!
இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக ரசிகர்கள் கையால் வெளியிட்ட பாடல் இணையதளத்தில் 11லட்சம் பார்வையாளர்களை கடந்து பரபரப்பாக 2 மில்லியனை நோக்கி நகர்கிறது!!
நடிகர் ஆர்.கே.சுரேஷ் முதன் முறையாக இரு வேடங்களில் நடிக்கும் திரைப்படம் கைலாசகிரி
முதன் முறையாக விஜய்சேதுபதியுடன் அவரது மகன் சூர்யாஇணைந்து நடித்துள்ள “ சிந்துபாத் “

