Rowdy Pictures சார்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வழங்கும் “கூழாங்கல்” எனும் Pebbles படம “சிறந்த சர்வதேச திரைப்படம்” எனும் பிரில் 2022 Spirit Awards விழாவில் பரிந்துரையாகியுள்ளது !
சென்னை 16 டிசம்பர் 2021 Rowdy Pictures சார்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வழங்கும் “கூழாங்கல்” எனும் Pebbles படம “சிறந்த சர்வதேச திரைப்படம்” எனும் பிரில் 2022 Spirit Awards விழாவில் பரிந்துரையாகியுள்ளது !
Pebbles அல்லது கூழாங்கல் திரைப்படம் உலகம் முழுவதும் பல பாராட்டுக்களையும் விருதுகளையும் வென்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்து வருகிறது.
அவற்றில் உச்சமாக ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது, இதனை தாண்டி இப்போது இந்த குழு கொண்டாட்டத்தில் ஈடுபட மற்றொரு காரணமும் உள்ளது.
ஆம், 2022 Spirit Awards உலக திரை விழாவில் ‘சிறந்த சர்வதேச திரைப்பட வகையின் கீழ் இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இப்படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் மற்றும் நடுவர்களின் மத்தியில் இப்படம் பலத்த பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
தமிழ்த் திரையுலகம் சீரான திரைப்பட வெளியீடுகளுடன் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், Rowdy Pictures சார்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள “கூழாங்கல்” திரைப்படம் நமது தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் படைப்பாக மாறியுள்ளது.
இயக்குநர் P.S. வினோத்ராஜ் எழுதி இயக்கியுள்ள, “கூழாங்கல்” படத்தில் செல்லப்பாண்டி மற்றும் கருத்தடையான் தந்தை மற்றும் மகனாக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு விக்னேஷ் குமுளை-ஜெய பார்த்திபன் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள், கணேஷ் சிவா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.