தடைகளைக் கடந்து ‘நீ  சுடத்தான் வந்தியா ‘ படம் இம்மாதம் டிசம்பர் 31 முதல் உலகமெங்கும் திரைக்கு வருகிறது !

சென்னை 24 டிசம்பர் 2021 தடைகளைக் கடந்து ‘நீ  சுடத்தான் வந்தியா ‘ படம் இம்மாதம் டிசம்பர் 31 முதல் உலகமெங்கும் திரைக்கு வருகிறது !

டிக் டாக் இலக்கியாயுடன் நடித்த  திரில்லர் அனுபவம்: புதுமுக நடிகர் அருண்குமார்

டிக் டாக் புகழ் நடிகை இலக்கியா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘நீ சுடத்தான் வந்தியா’.

இப்படத்தை கே.துரைராஜ் இயக்கி இருக்கிறார் .ஆல்பின் மீடியா தயாரித்துள்ளது.

இப்படத்தில் கவர்ச்சிநடிகை இலக்கியாவுக்கு ஜோடியாக புதுமுக நடிகர் அருண்குமார் நடித்துள்ளார்.

கவர்ச்சி நடிகையுடன் நடித்த அனுபவம் எப்படி என்பதைப் பற்றி புதுமுக நடிகர் அருண்குமார் பேசும்போது,

” சினிமாவைப் பார்க்கும் போது சுலபமாக தெரியும். நடிகர்கள் நடிப்பதெல்லாம் இலகுவாகத் தோன்றும் .ஆனால் நடித்துப் பார்த்தால்தான் நடிப்பு எவ்வளவு சிரமமானது என்று புரியும். நான் ‘நீ  சுடத்தான் வந்தியா’ படத்தில் நடித்த போது அதை உணர்ந்தேன்.

எனக்கு சினிமா மீது  காதல் உண்டு. நடிப்பின் மீதும் ஆர்வம் உண்டு. இருந்தாலும் ஒரு தயக்கம் இருந்தது. அதற்கு ஒரு பயிற்சி தேவை என்று நினைத்தேன்.அதனால் நான் கூத்துப்பட்டறையில் மாஸ்டர் பொன்முடி அவர்களிடம் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு என்னைத் தயார் செய்து கொண்டார்.