நடிகர் விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்திய திரைப்படமான  LIGER ( saala Crossbreed ) (glimpse) காட்சித்துணுக்கு  வெளியானது !

சென்னை 02 ஜனவரி 2021
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்திய திரைப்படமான  LIGER saala Crossbreed  (glimpse காட்சித் துணுக்கு  வெளியானது !

ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. இளம் நாயகன் விஜய் தேவரகொண்டா ரசிகர்களுக்கு இந்த புத்தாண்டு முன்னதாகவே பரிசளித்திருக்கிறது.

LIGER (Saala Crossbreed) படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காட்சித்துணுக்கு   (glimpse)  வெளியாகியுள்ளது. தனது ஹீரோக்களை ஸ்டைலான அட்டகாசமான அவதாரங்களில் வழங்குவதில் ராஜாவாக திகழும் திறமைமிகு இயக்குனர் பூரி ஜெகன்நாத், இந்த மிகப்பிரமாண்டமான இந்திய பன்மொழி திரைப்படத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டாவை இதுவரை கண்டிராத ஸ்டைலான மற்றும் அதிரடி அவதாரத்த்தில் காட்டியுள்ளார்.

ஒரு MMA வர்ணனையாளர் விஜய் தேவரகொண்டாவை LIGER என்று அறிமுகப்படுத்தியதில் இருந்து liger காட்சித்துணுக்கு தொடங்குகிறது. “இந்தியாவில் இருந்து சிறுவனை அறிமுகப்படுத்துகிறோம்… மும்பை தெருக்களின் சேரி நாயகன்… சாய் வாலா… லைகர்…”

விஜய் தேவரகொண்டா இந்த வீடியோவில் நம்முள் தாக்கத்தை தரும், இரு சிறு வசனங்களை உச்சரிக்கிறார். “நாங்கள் இந்தியர்கள்,” என்று அவர் கூறுகிறார், இது நாட்டின் மீதான அவரது அன்பைக் காட்டுகிறது. அவர் உண்மையில் இந்தியக் கொடியுடனான உடை அணிந்தே நுழைகிறார். மற்றொரு வசனத்தில் “வாட் லகா தேங்கே” என சொல்வது அவரது ஆக்ரோஷமான அணுகுமுறையை காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்தக்காட்சித்துணுக்கு  அதிரடியானா  ஸ்டண்ட் காட்சிகளால் நிரம்பியுள்ளது. உண்மையில், இதுவரை இல்லாத ஸ்டைலான அவதாரத்தில் தோன்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு முழு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்த காட்சித்துணுக்கு வெளியாகியுள்ளது. மிக தத்ரூபமான ஒப்பனையில், விஜய் ஒரு மிருகம் போல் கூர்மையான உடலமைப்புடன், போனிடெயில் சிகையுடன்,  முற்றிலும் புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இது வரை இல்லாத ஸ்டைலில் அனைவரையும் கவரும் தோற்றத்தில் மிளிர்கிறார்.

இந்த காட்சித்துணுக்கை காணும்போது, MMA (கலப்பு தற்காப்புக் கலைகள்) விளையாட்டில்,  மும்பை தெருக்களின் போக்கிரி  ஒருவன் கலந்துகொண்டு சாம்பியனாவதைப் பற்றிய படம் என்பது புலனாகிறது. இந்த,பயணம் அனைவரையும் மிகவும் ஊக்கமளிப்பதாகத் அமைந்திருக்கிறது.

குத்துச்ண்டை போட்டியில் விஜய்யின் குத்துக்களிலும் தீ பரவுகிறது. அனல் தெறிக்கும் சண்டைக்காட்சி   நமக்கு  உடல் சிலிர்க்கும் அனுபவத்தை தருகிறது. இது முழுப்படத்திலும் இருக்குமென எதிர்பார்க்கலாம்.

ரம்யா கிருஷ்ணா விஜய்யின் அம்மாவாகவும், ரோனித் ராய் பயிற்சியாளராகவும் நடித்துள்ளனர். மற்ற நடிகர்களை இந்த காட்சித்துணுக்கு காட்டவில்லை மொத்தத்தில் அசரவைக்கும் இந்த டீசர் திரைப்பட ரசிகர்களுக்கு மிக அற்புதமான புத்தாண்டு பரிசாக அமைந்துள்ளது.

விஜய் ஒரு குத்துசண்டை வீரனாக  பிரமாதமாக காட்சியளிக்கிறார், மேலும் அந்த கதாபாத்திரம் அவருக்காக கச்சிதமாக பொருந்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர் எழுப்பும் ஒலிகள்,  ஆக்‌ஷன் காட்சிகளுக்கு  மிக உண்மையான உணர்வைத் தருகின்றன.

வரலாற்று  மைக் டைசன் ஒரு சிறந்த பாத்திரத்தில் நடித்திருப்பதால், லைகர் Liger இந்தியாவின் மிகப்பெரிய அதிரடி ஆக்சன் படங்களில் ஒன்றாக இருக்கப் போகிறது. பெரிய திரையில், உண்மையான ஆக்சனை காண ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அட்டகாசமான ஒளிப்பதிவும், அருமையான பின்னணி இசையும் ஒன்றாக கலந்து ஒரு அற்புதமான காட்சி அனுபவத்தை தருகிறது.

Puri connects மற்றும்  பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்கின்றனர். பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா ஆகியோர்  இணைந்து மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகும் இந்த இந்திய பன்மொழி திரைப்படமான  (Liger) லைகர், ஆகஸ்ட் 25, 2022  அன்று உலகம் முழுதும்  வெளியாகவுள்ளது.

நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு.

தொழில் நுட்ப குழு
இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா
தயாரிப்பு நிறுவனங்கள் : Puri connects and Dharma Productions
ஒளிப்பதிவாளர்- விஷ்ணு சர்மா
கலை இயக்கம்- ஜானி சையிக் பாட்ஷா
படதொகுப்பாளர்- ஜுனைத் சித்திக்
சண்டை காட்சிகள் இயக்குனர்- Kecha