ரெண்டகம்’ படத்தின்  டீசரை வெளியிட்ட நடிகர் கார்த்தி !!

சென்னை 07 ஜனவரி 2022
ரெண்டகம்’ படத்தின்  டீசரை வெளியிட்ட நடிகர் கார்த்தி !!

நடிகர் அரவிந்த்சாமி மற்றும் மலையாள நடிகர்  குஞ்சாக்கோ போபன் நடிப்பில் ரெண்டகம் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் உருவாகிறது. இத்திரைப்படத்தை ஆர்யாவின் ஷோ பீப்புள் நிறுவனமும் ஆகஸ்ட் சினிமாஸ்  நிறுவனமும் இணைந்து தாயாரித்து வருகிறது.

டி.பி.பெலின் இயக்கும் இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் அரவிந்தசாமி. ‘தனி ஒருவன்’ படத்திற்கு பின் இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டடித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் ரெண்டகம் படத்தில் அரவிந்தசாமி ஹீரோவாக நடித்து வருகிறார். மலையாள நடிகர்  குஞ்சாக்கோ போபன் தமிழில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது . இவர் ஷாலினி உடன் இனைந்து நடித்த அனியத்திப்ராவு என்ற திரைப்படம் தான் காதலுக்கு மரியாதை என்று தமிழில் தயாரிக்கப்பட்டது.

ரெண்டகம் திரைப்படத்தில் அரவிந்த்சாமி , குஞ்சாக்கோ போபன் இவர்களுடன் ஜாக்கி ஷ்ராப், ஈஷா ரெப்பா, ஆடுகளம் நரேன், தீப்தி சதி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

எழுத்து சஞ்சீவ் மற்றும் சசிகுமாரன் சிவகுரு, இசை A H காஷிஃப், ஒளிப்பதிவு கௌதம் சங்கர், படத்தொகுப்பு  அப்பு N பட்டாத்தரி, கலை இயக்கம் சுபாஷ் கருன்

இந்தப்படத்தின் டீசரை நடிகர் கார்த்தி தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டார் .

தொழில்நுட்பக்குழு :
இயக்கம் : T .P.பெலின்
தயாரிப்பு : ஆர்யா , ஷாஜி நடேசன்
எழுத்து : S சஞ்சீவ்
இணை எழுத்து /இணை இயக்கம் – சசி குமரன்
இசை – A H காஷிஃப்
ஒளிப்பதிவு – கெளதம் ஷங்கர்
படத்தொகுப்பு – அப்பு N பட்டாத்திரி
கலை இயக்கம்  – சுபாஷ் கருண்
உடைகள் – ஸ்டெப்பி சேவியர்
படங்கள் – ரோஷ்குமார்
சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா
நடனம் – சஜ்னா நஜாம்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

https://youtu.be/xJGWEckUZUQ

CLOSE
CLOSE
error: Content is protected !!