அழகியும் நானும் (2002-2022) – இயக்குனர் தங்கர் பச்சன்.
அழகியும் நானும் (2002-2022) – இயக்குனர் தங்கர் பச்சன்.1986 ஆம் ஆண்டில் சண்முகம்-தனலட்சுமி ஆகிய இருவரின் கதை கல்வெட்டு எனும் பெயரில் சிறுகதையாக உருவானது.
சண்முகமும் தனலட்சுமியும் என்னை செய்தது போலவே அழகியைக்கண்டவர்களையும் உறங்க விடாமல் செய்தார்கள்.
ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்க முனைந்ததற்காக நானும் நண்பரும் தயாரிப்பாளருமான உதயகுமார் அவர்களும் விவரிக்க முடியாத மன வேதனைகளை சந்தித்தோம். நான் கடந்து வந்த வழிகளையும் அவமானங்களையும் மறக்க நினைத்தாலும் இயலவில்லை.
என்னை சோர்ந்து விழாமல் தாங்கிப்பிடித்து வெற்றிப் படமாக்கி என்னாளும் நினைவில் வாழும் படைப்பாக மாற்றியவர்கள் மக்கள் மட்டுமே.
அழகியை பாராட்டுபவர்கள் இம்மண்ணை பாராட்டுங்கள்! இம்மொழியை பாராட்டுங்கள்! இம்மக்களைப் பாராட்டுங்கள். இம்மூன்றிலிருந்தும் எப்பொழுது ஒருவன் விலகிச்செல்கிறானோ அதன் பின் அவனிடமிருந்து பிறக்கும் அத்தனையும் உயிரற்ற படைப்புகளாகவே இருக்கும்.
முற்றிலும் வணிகமயமாகிப்போன பெரு முதலாளித்துவ வலைக்குள் சிக்கிக்கொண்டு என் மண்ணோடும் மொழியோடும் மக்களோடும் கிடந்து உயிர்ப்புள்ள படைப்புகளைத் தருவதற்காக போராடிக்கொண்டிருக்கிறேன்.
அழகியின் வெற்றி என் படைப்பாற்றலுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. மக்களின் சுவையறியும் நுட்பத்திற்கு கிடைத்த வெற்றி.
அன்போடு தங்கர் பச்சான்அழகியும் நானும் (2002-2022) 1986 ஆம் ஆண்டில் சண்முகம்-தனலட்சுமி ஆகிய இருவரின் கதை கல்வெட்டு எனும் பெயரில் சிறுகதையாக உருவானது.
சண்முகமும் தனலட்சுமியும் என்னை செய்தது போலவே அழகியைக்கண்டவர்களையும் உறங்க விடாமல் செய்தார்கள்.
ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்க முனைந்ததற்காக நானும் நண்பரும் தயாரிப்பாளருமான உதயகுமார் அவர்களும் விவரிக்க முடியாத மனவேதனைகளை சந்தித்தோம்.
என்னை சோர்ந்து விழாமல் தாங்கிப்பிடித்து வெற்றிப்படமாக்கி என்னாளும் நினைவில் வாழும் படைப்பாக மாற்றியவர்கள் மக்கள் மட்டுமே. இம்மண்ணிலிருந்து இம்மொழியிலிருந்து இம்மக்களிடமிருந்துதான் அழகி உருவானாள்.
அழகியை பாராட்டுபவர்கள் இம்மண்ணை பாராட்டுங்கள்! இம்மொழியை பாராட்டுங்கள்! இம்மக்களைப் பாராட்டுங்கள். இம்மூன்றிலிருந்தும் எப்பொழுது ஒருவன் விலகிச்செல்கிறானோ அதன் பின் அவனிடமிருந்து பிறக்கும் அத்தனையும் உயிரற்ற படைப்புகளாகவே இருக்கும்.
முற்றிலும் வணிகமயமாகிப்போன பெரு முதலாளித்துவ வலைக்குள் சிக்கிக்கொண்டு என் மண்ணோடும் மொழியோடும் மக்களோடும் கிடந்து உயிர்ப்புள்ள படைப்புகளைத் தருவதற்காக போராடிக்கொண்டிருக்கிறேன். வெறும் வணிக வெற்றியை மட்டுமே குறி வைத்து ஓடிக்கொண்டிருக்கும் இத்திரையுலகத்தில் என்னைப்போன்ற சிலர் அவர்களுடன் சமரசம் செய்து கொள்ள விரும்பாமல் பயணிக்கின்றோம்.
அழகியின் வெற்றி என் படைப்பாற்றலுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. மக்களின் சுவையறியும் நுட்பத்திற்கு கிடைத்த வெற்றி. என்னை பாராட்டு மழையில் மகிழ்வித்து வரும் முகமறிந்த முகமறியா உள்ளங்களுக்கு என்னாலும் நன்றி நவில கடமைப்பட்டுள்ளேன். தங்கள் அனைவரின் விருப்பத்திற்கேற்ப ஒரு தரமான சிறந்த படைப்புடன் சந்திக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். வெற்றி பெரும் எனும் உறுதியான நம்பிக்கையுடன்!
Related posts:
கொரோனா வைரஸில் இருந்து எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்! இயக்குனர் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான்.!
நாகஷேகர் மூவிஸ் – ஜோனி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’
திரையரங்கிலிருந்து வீட்டுக்குள் ஒளிப்பதிவாளர் இயக்குனர் தங்கர் பச்சான்
தடைகளைக் கடந்து ‘நீ சுடத்தான் வந்தியா ‘ படம் 2022 ஜனவரியில் உலகமெங்கும் திரைக்கு வருகிறது !
நானும் எனது குடும்பத்தாரும் முதல் தவனை கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டோம் இயக்குனர் அமீர்.
திரைப்படம் எடுக்க தெரியாத இயக்குனர் ராம்- இயக்குனர் வெற்றி மாறன்-என்னை திட்டுங்க.. – இயக்குனர் மிஷ்கின்
கடவுளும் நானும் ராஜீவ் மேனன் மதன் கார்க்கி இணைந்து உருவாக்கிய புதிய தமிழிசைப் பாடல்.
பிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும் ‘
நானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்.!
என்னை எந்த விமர்சனங்களும் பாதிக்காது – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்*

