பொன்னியின் செல்வன்-1 30 செப்டம்பர் 2022 அன்று வெளியாகிறது என அதிகாரபூர்வமான அறிவிப்பு.
சென்னை 03 மார்ச் 2022
பொன்னியின் செல்வன்-1 30 செப்டம்பர் 2022 அன்று வெளியாகிறது என அதிகாரபூர்வமான அறிவிப்பு.
கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர்
மணிரத்னம் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார்.
லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இநத திரைப்படம் இரண்டு பாகங்களாக மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”
2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதை “பொன்னியின் செல்வன்”. இது திரைப்பட ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே.
இந்தத் திரைப்படத்தை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சோழப் சாம்ராஜ்யத்தில் பொற்காலம் துவங்கும் இந்தக் கால கட்டத்தைத் திரைக்குக் கொண்டு வர ஆயிரக்கணக்கான கலைஞர்கள் உழைத்து வருகின்றனர்.
பொன்னின் செல்வன் திரைப்படத்தைப் பற்றி மேலும் அடுத்தடுத்து செய்திகள் வெளிவரும்.











