அப்போலோ மகளிர் மருத்துவனை சார்பில் “வெல் வுமன் வாக்கத்தான்” (“Well Women Walkathon”) நடைபெற்றது.
சென்னை 08 மார்ச் 2022
அப்போலோ மகளிர் மருத்துவனை சார்பில் “வெல் வுமன் வாக்கத்தான்” (“Well Women Walkathon”) நடைபெற்றது.
சென்னை, 6 மார்ச் 2022: அப்போலோ மகளிர் மருத்துவமனை சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “வெல் வுமன் வாக்கத்தான்” (“Well Woman Walkathon”) நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை திரைப்பட இயக்குநர் திரு. ஜோஸ் பிரடெரிக் (Mr. Jose Fredrick, Film Director), ஸ்டைலிஸ் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் திருமதி ஜாய் கிரிஸில்டா (Mrs. Joy Crizildaa, Stylist & Costume Designer), ஐசிஎஸ் பிஎஃப்எஸ்ஐ- இன் குளோபல் ஹெச்ஆர் டைரக்டர் திரு. சுதீப். கே (Mr. Sudeep K, Global HR Director, ICS BFSI) ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
‘வாக்கத்தான் ’(walkathon) நிகழ்ச்சி ஷஃபி முகமது சாலையில் உள்ள அப்போலோ மகளிர் மருத்துவமனையில் நிறைவுப் பெற்றது.
இதில் பிரபல பேச்சாளரும், சிட்டி வங்கியின் இயக்குநருமான பாரதி பாஸ்கர் (Ms. Bharathi Baskar, Director City Bank and eminent speaker), லைப் கோச் (திரைப்பட இயக்குநர் ரவிகுமாரின் மகள்) மாலிகா ரவிகுமார் (Ms.Maalica Ravikumar, Life Coach (D/0 Mr. KS Ravikumar Film Director)) ஆகியோர் பங்கேற்று, வாக்கத்தானில் இடம் பெற்ற பெண்களின் உடல் நலம் மற்றும் உடற்பயிற்சி குறித்து ஊக்கப்படுத்தி பேசினர்.
அப்போலோ மகளிர் மருத்துவமனையின் மூத்த கருவியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் சுமனா மனோகர் (Dr Sumana Manohar, Senior Consultant Obstetrician & Gynaecologist, Apollo Women’s Hospitals), பெண்களின் ஆரோக்கியம் குறித்த உத்வேகம் அளிக்கக் கூடிய செய்திகளையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டார்.
சுமார் 100 பெண் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் (Madras School of Social Work)-ல் பயிலும் மாணவர்கள் பங்கேற்ற இந்த 3 கிமீ ‘வெல் வுமன் வாக்’ (Well woman walk) அப்போலோ மகளிர் மருத்துவனையால் ஒருங்கிணைக்கப்பட்டது.
பெண்களின் அன்றாட வாழ்க்கையில் உடல் நலம் மற்றும் உடற்பயிற்சியின் பங்கை ஊக்குவிப்பதற்காகவும், நடைபயணத்தின் நன்மைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காகவும் இந்த அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த வாக்கத்தான் லயோலா கல்லூரி எதிர்புறம் உள்ள இக்னைட் 101 லிருந்து காலை 6 மணிக்கு கொடி அசைத்து தொடங்கப்பட்டு, ஷபி முகமது சாலை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மகளிர் மருத்துவமனை முன்பாக நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை பாராட்டி அப்போலோ மகளிர் மருத்துவமனையின் மூத்த கருவியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் சுமனா மனோகர் (Dr Sumana Manohar, Senior Consultant Obstetrician & Gynaecologist, Apollo Women’s Hospitals) பேசுகையில், “உங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அல்லது பராமரிக்க நடைபயிற்சி மிகச் சிறந்த வழியாகும்.
ஒவ்வொரு நாளும் வெறும் 30 நிமிடங்கள் நடப்பது இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் எலும்புகளை வலுப்படுத்தவும், அதிகப்படியான உடல் கொழுப்பை குறைக்கவும், தசைகளுக்கு கூடுதல் சக்தியையும் ஆற்றலை அளிக்கவும் உதவும்.
இதய நோய், 2-வது வகை நீரிழிவு, ஆஸ்டியோபோரோசிஸ், உடல் பருமன் தொடர்பான புற்று நோய்கள் உள்ளிட்ட பல்வேறு அபாயத்தையும் இதன் மூலம் குறைக்கலாம்.
நடைபயிற்சி மிகவும் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும், மிகவும் குறைவான உபகரணங்களே இதற்கு போதுமானது.
ஒருநாளில் எப்போது வேண்டுமானாலும், உங்களுக்கு எங்கு வசதியோ அங்கு மேற்கொள்ளலாம்.
உடற்பயிற்சி செய்ய விரும்புபவர்களுக்கு நடைபயிற்சி ஒரு சிறந்த தொடக்க புள்ளி.
மேலும் தீவிரமான பயிற்சிகளுடன் சேர்ந்து இதிலும் ஈடுபடலாம்.
குறிப்பாக நடுத்தர வயது மற்றும் முதியவர்களுக்கு இது பொருந்தும்.
அதி தீவிர உடற்பயிற்சிகள் எலும்பு மற்றும் மூட்டு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
நடைபயிற்சி மூட்டுகளின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
நடைபயிற்சியின் மற்ற நன்மைகள் இதன் மூலம் நண்பர்கள் உருவாகின்றனர்.
ஒரு சமூக வலைபின்னலை மேம்படுத்தலாம் உள்ளிட்டவையும் அடங்கும்” என்றார்.
பங்கேற்றவர்களை பாராட்டி சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.











