தமிழ் ஒரிஜினல் சீரிஸ் சுழல் – தி வோர்டெக்ஸ்-ன் விறுவிறுப்பான ட்ரெய்லரை வெளியிட்டது அமேஸான் பிரைம் வீடியோ!
சென்னை 08 ஜூன் 2022 தமிழ் ஒரிஜினல் சீரிஸ் சுழல் – தி வோர்டெக்ஸ்-ன் விறுவிறுப்பான ட்ரெய்லரை வெளியிட்டது அமேஸான் பிரைம் வீடியோ!
புஸ்கர் மற்றும் காயத்ரி எழுதி உருவாக்கியிருக்கும் சுழல் – தி வோர்டெக்ஸ் சீரிஸ்-ல் இராதாகிருஷ்ணன் பார்த்திபனுடன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரீரியா ரெட்டி ஆகியோர் இடம்பெறுகின்றனர். ஜுன் 17-ம் தேதி முதல் இந்தியாவிலும் மற்றும் 240 நாடுகளிலும் இந்த சீரிஸ் வெளிவரும்.
வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ்-ஆல் தயாரிக்கப்பட்டு பிரம்மா மற்றும் அனுசரண்.எம் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவரும் சுழல் – தி வோர்டெக்ஸ் பல்வேறு மொழிகளில் முதல்முறையாக ஒளிபரப்பப்படும் பிரைம் வீடியோவின் முதல் தமிழ் ஒரிஜினல் சீரிஸ் என்ற பெருமையைப் பெறுகிறது; ஹிந்தி, கன்னடா, மலையாளம், தெலுகு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் மற்றும் ஃப்ரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், ஜாப்பனிஸ், போலிஸ், போர்ச்சுகீஸ், கேஸ்ட்லியன் ஸ்பானிஷ், லத்தீன் ஸ்பானிஷ், அராபிக் மற்றும் டர்க்கீஸ் போன்ற அந்நிய மொழிகளிலும் இது ஒளிபரப்பாகிறது. இதற்கும் கூடுதலாக பல அந்நிய மொழிகளில் சப்-டைட்டில்ஸ் உடன் இந்த சீரிஸ்-ஐ பார்த்து ரசிக்கலாம்.
ரூ. 1499 என்ற ஆண்டு உறுப்பினர் சந்தாவுடன் சமீபத்திய, பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டான்ட்-அப் காமெடி, அமேஸான் ஒரிஜினல்ஸ் ஆகியவற்றின் வரம்பற்ற ஸ்கிரீனிங் மற்றும் அமேஸான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரங்கள் இல்லாத இசையை ரசிக்கும் வசதி இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு தொகுப்பின் மீது இலவச, அதிவேக டெலிவரி முதன்மையான சலுகைகளுக்கு ஆரம்ப அணுகுவசதி, பிரைம் ரீடிங் வழியாக வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் ரீடிங் மூலம் மொபைல் கேமிங் உள்ளடக்கம் என அனைத்தையும் அமேஸான் பிரைம் வீடியோ வழங்குகிறது. பிரைம் வீடியோ மொபைல் எடிசனுக்கு சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம் சுழல் – தி வோர்டெக்ஸ் சீரிஸ்-ஐயும் வாடிக்கையாளர் கண்டு ரசிக்கலாம்; பிரைம் வீடியோ மொபைல் எடிசன் என்பது, ஏர்டெல்-ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு தற்போது கிடைக்கக்கூடிய ஒற்றை பயனாளி, மொபைலில் மட்டும் கண்டு இரசிக்கக்கூடிய திட்டமாகும்.
சென்னை, 2022, ஜுன் 7 : தமிழில் அதன் முதல் நீண்ட வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒரிஜினல் சீரிஸ் : சுழல் – தி வோர்டெக்ஸ் தொடரின் ஒரு சிறு பார்வையை வெளிப்படுத்தும் ட்ரெய்லரை பிரைம் வீடியோ இன்று வெளியிட்டது. பிரபல படைப்பாளிகளான புஸ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் இணைந்து எழுதி உருவாக்கியிருக்கும் இதனை இயக்குனர்கள் பிரம்மா மற்றும் அனுசரண்.எம் ஆகியோர் இயக்கி இருக்கின்றனர். 8-எபிசோடுகளைக் கொண்ட இந்த புலன் விசாரணை கதையானது, ஒரு பள்ளிச்சிறுமி காணாமல் போவதைத் தொடர்ந்து தொழிலகங்கள் நிறைந்த ஒரு சிறு நகரத்தில் பல சீர்குலைவை விளைவிக்கிற நிகழ்வுகள் வழியாக பல திருப்பங்களும் எதிர்பாரா சம்பவங்களும் நிறைந்த பாதையில் ரசிகர்களை அழைத்துச் செல்கிறது. திறன்மிக்க நடிகர்களான கதிர், ஐஸ்வர்யா இராஜேஷ், ஸ்ரீரியா ரெட்டி பிரபல இயக்குநருமான நடிகருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் நடித்திருக்கும் சுழல் – தி வோர்டெக்ஸ் என்ற பெயரிலான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் ஹிந்தி, கன்னடா, மலையாளம், தெலுகு மற்றும் ஆங்கிலம் ஆகிய இந்திய மொழிகளிலும் மற்றும் ஃப்ரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், ஜாப்பனிஸ், போலிஸ், போர்ச்சுகீஸ், கேஸ்ட்லியன் ஸ்பானிஷ், லத்தீன் ஸ்பானிஷ், அராபிக் மற்றும் டர்க்கீஸ் ஆகிய அந்நிய மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது. சைனீஸ், செக், டேனிஷ், டச், ஃபிலிப்பினோ, ஃபின்னிஸ், கிரீக், ஹீப்ரு, அங்கேரியன், இந்தோனேசியன், கொரியன், மலாய், நார்வீஜியன் Bokm, ரோமானியன், ரஷ்யன், ஸ்வீடிஸ், தாய், உக்ரேனியன் மற்றும் வியட்நாமிஸ் ஆகியவை உட்பட இன்னும் பல அந்நிய மொழிகளில் சப்-டைட்டில்களுடன் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகிறது. இந்தியாவில் மற்றும் உலகெங்கிலும் 240 நாடுகளில் வசிக்கும் பிரைம் உறுப்பினர்கள், 2022 ஜுன் 17-ம் தேதி முதல் சுழல் – தி வோர்டெக்ஸ் சீரிஸ்-ஐ கண்டு ரசிக்கலாம்.
சுழல்-தி வோர்டெக்ஸ் என்ற இத்தொடர், தமிழ்நாட்டில் ஒரு சிறிய நகரைச் சேர்ந்த ஒரு இளம் பெண் காணாமல் போகும் நிகழ்விலிருந்து ஆரம்பமாகிறது. காணாமல் போன பெண்ணை கண்டறியும் புலன் விசாரணை என்றளவில் தொடங்கும் இக்கதை, விரைவில் பல்வேறு திருப்பங்களுடன் இதயத்துடிப்பை விரைவாக்கும் த்ரில்லராக வேகமெடுக்கிறது. அந்த சிறு நகரையும் மற்றும் அதன் அமைதியான சமூக கட்டமைப்பையும் பெரும் புயலில் சிக்கிய படகு போல சிதைக்க பல நிகழ்வுகள் காத்திருக்கின்றன. வருடாந்திர கலாச்சார திருவிழாவின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கதை, பொய்கள், மோசடிகள், மறைமுக நோக்கங்கள் கொண்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் உணர்ச்சிகளின் ரங்கராட்டினம் என அதிரடி திருப்பங்களையும், பரபரப்பான நிகழ்வுகளையும் கொண்டு பார்வையாளர்களை அவர்களது இருக்கையின் விளிம்புக்கே கொண்டு வந்து நிறுத்திவிடும் என்பது நிச்சயம். அதிவேகமாக பயணிக்கும் திரைக்கதை மற்றும் அற்புதமான நடிப்பு என ஆர்வமூட்டும் அம்சங்கள் நிறைந்த இந்த தொடர் மர்மங்களின் புதைகுழிக்குள் சிக்கவைப்பதோடு இன்னும் இது தொடராதா என்ற ஏக்கத்தையும் அவர்கள் மனத்தில் உருவாக்கும் என்று உறுதியாக நம்பலாம்.
இந்த சீரிஸ்-ன் முதல் நான்கு எபிசோடுகளை இயக்கியிருக்கும் திரு பிரம்மா இது பற்றி கூறியதாவது, ‘‘கடும் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பில் உருவான இத்தொடர் பார்வையாளர்களை விரைவில் சென்றடையும் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. சிறப்பான நடிப்பு, நிகழ்வுகளோடும், கதாபாத்திரங்களோடும் ஒன்ற வைக்கும் கதைக்களம் மற்றும் ஒவ்வொரு எபிசோடிலும் என்ன நிகழப்போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் திரைக்கதை அமைப்பு என இதில் அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. பல்வேறு நிலைகளில் பார்வையாளர்கள் உணர்வுகளை நிச்சயமாக தட்டியெழுப்பக்கூடிய ஒரு வித்தியாசமான கதை சொல்லல் முயற்சியாக சுழல் – தி வோர்டெக்ஸ் இருக்கும். இதன் மையத்தில் ஒரு மர்மம் அமைந்திருக்க பல்வேறு சூழல்நிலைகள், நம்பிக்கைகள் மற்றும் இரகசியங்கள் மற்றும் எது நிஜம் மற்றும் எது நிஜமில்லை என்பதற்கிடையே பார்வையாளர்களை திக்குமுக்காடச் செய்யும் கதாபாத்திரங்களை உள்ளடக்கிய, வேகமாக சுழலும் ஒரு ராட்டினம் போல இத்தொடர் அதிரடி திருப்பங்களுடன் பயணிக்கிறது. இக்கதையின் படைப்பாளிகள் புஷ்கர் மற்றும் காயத்ரியுடன் இணைந்து செயல்படுவது மற்றும் ஒரு அற்புதமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்க வேண்டுமென்ற அவர்களது நோக்கத்தை பகிர்ந்து கொள்வதும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முந்தைய படைப்புகளில் அவர்கள் மிகப்பெரிய வெற்றியை கண்டிருக்கின்றனர். சுழல் – தி வோர்டெக்ஸ் என்ற இத்தொடரிலும் அந்த வெற்றியை இன்னும் வலுவாக நிலைநாட்டுவோம் என்று நாங்கள் நம்புகிறோம். பிரைம் வீடியோவில் இந்த சீரிஸ்-ன் உலகளாவிய பிரீமியர் நிகழ்வையும் மற்றும் உலகெங்கிலும் 240 நாடுகளிலிருந்து பார்வையாளர்களின் எண்ணங்களையும், பகிர்வுகளையும் அறிய நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்.’’
இந்த சீரிஸ்-ன் 5 முதல் 8 வரையிலான எபிசோடுகளை இயக்கியிருக்கும் திரு. அனுசரண்.எம் பேசுகையில், ‘‘சுழல் – தி வோர்டெக்ஸ் கதை என்னிடம் சொல்லப்பட்டபோது இத்திரைக்கதையின் வேகம் மற்றும் சிக்கலான நுணுக்கங்கள் என்னை பெரும் வியப்பில் ஆழ்த்தி கதையோடு ஒன்றிப்போகச் செய்துவிட்டது. நிகழ்வுகளில் பின்தொடர்வு உருவாக்கப்பட்டிருக்கும் விதம் பார்வையாளர்களின் கண்களை திரையைவிட்டு சில நொடிகள் கூட விலகிச் செல்லாதவாறு ஒவ்வொரு தருணத்திலும் அடுத்து நிகழப்போகிறது என்று அவர்களது மூளையை கசக்கிவிட்டு சிந்தனைகளை ஜெட் வேகத்தில் பறக்க செய்யும். இந்த சிறப்பான திரில்லர் கதையை இயக்குவதற்கு புஷ்கர் மற்றும் காயத்ரி என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த கதையை திரில்லர் வகையினத்தில் ஒரு தனித்துவமான தொடராக உயிரோட்டம் தந்திருக்கும் ஒட்டுமொத்த குழுவின் ஒருங்கிணைந்த சிறப்பான முயற்சிகளுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். பிரைம் வீடியோவில் பல்வேறு இந்திய மற்றும் அந்நிய மொழிகளில் சுழல் – தி வோர்டெக்ஸ் சீரிஸ் ஒளிபரப்பாவது எங்களுக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது. ஒரே நேரத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான பார்வையாளர்களுக்கு இந்த அற்புதமான கதையை எடுத்துச்செல்லவும் மற்றும் அவர்களின் ரசனைக்கு விருந்து படைக்கவும் எங்களை இது ஏதுவாக்குகிறது.’’ என்று கூறினார்.
இந்த சீரிஸ்-ல் சப்-இன்ஸ்பெக்டர் ‘சக்கரை’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் கதிர் இது பற்றி கூறியதாவது, ‘‘சுழல் – தி வோர்டெக்ஸ் என்பதன் அங்கமாக இடம்பெற்றிருப்பது வியக்க வைக்கும் உணர்வைத் தருகிறது. பார்வையாளர்களாகிய உங்கள் அனைவரையுமே இந்த சீரிஸ் முழுவதும், இருக்கை முனைக்கே இது கொண்டுவந்து நிறுத்தும் மற்றும் த்ரில்லிங்கான அனுபவத்தைத் தரும் என்பது நிச்சயம். விடை காணாத மர்மம் ஒன்று மையக்கருவாக இருக்கும்போது, பல்வேறு அதிரடி திருப்பங்களின்மூலம் பார்வையாளர்களை திக்குமுக்காடச் செய்யும் சிறப்பான திரைக்கதை இதன் தனித்துவ அம்சமாகும். ஒரு குழுவாக, இந்த யதார்த்தமான, சிறப்பான கதையை உயிரோட்டம் உள்ளதாக கொண்டுவர நாங்கள் அனைவருமே அர்ப்பணிப்புடன் ஏராளமான முயற்சிகளை எடுத்திருக்கிறோம். பிரைம் வீடியோவில் 240 நாடுகளில் சுழல் தி – வோர்டெக்ஸ் சீரிஸ்-ன் உலகளாவிய பிரீமியர் நிகழ்வுக்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன்.’’
டிஜிட்டல் முறையிலான ஒரிஜினல் சீரிஸ்-ல் முதன்முறையாக கால் பதித்திருக்கும் ஐஸ்வர்யா இராஜேஷ், ‘‘ஒரு நடிகையாக, நீங்கள் பெரு விருப்பத்தோடு நடிக்கும் கதாபாத்திரங்களும், கதைகளும் இருக்கின்றன. அத்தகையதொரு சிறப்பான அனுபவத்தை எனக்கு தந்திருக்கும் சுழல் – தி வோர்டெக்ஸ் சீரிஸ்-ன் ஒரு அங்கமாக இடம்பெற்றிருப்பது எனக்குக் கிடைத்திருக்கும் அரிய கௌரவம். திறன்மிக்க இத்தகைய குழுவோடும், அற்புதமான நடிகர்களோடும் இணைந்து பணியாற்றியது உண்மையிலேயே செழுமையான ஒரு அனுபவமாகும். ஒரு சிறு நகரத்தில் நடக்கும் நிகழ்வை இந்த சீரிஸ் பிரதிபலிக்கிறபோது உலகெங்கிலுமுள்ள பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் நிறைந்ததாக கதை பின்னப்பட்டிருக்கிறது. இதில் நடித்திருக்கும் அனுபவம் உற்சாகமும், துடிப்பும் நிறைந்த ஒரு பயணமாக இருந்திருக்கிறது. யதார்த்தத்தை நம்பகமான முறையில் வித்தியாசமாக தனித்துவமான கதை சொல்லல் வடிவில் இதனை எங்களால் வழங்க முடிந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சுழல் – தி வோர்டெக்ஸ் என் மனதுக்கு எப்போதும் சிறப்பானதாக இருக்கும்; இதுவொரு அற்புதமான நிகழ்ச்சி என்பது மட்டுமல்ல; ஒரு டிஜிட்டல் சீரிஸ்-ல் முதன்முறையாக நான் இடம்பெற்றிருப்பது என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக ஆக்கியிருக்கிறது.’’ என்று கூறினார்.
இன்ஸ்பெக்டர் ரெஜினா கதாபாத்திரத்தில் வரும் ஸ்ரீரியா ரெட்டி இது பற்றி கூறியதாவது : ‘‘உணர்ச்சிகள், திரில், டிராமா மற்றும் மர்மம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த சங்கமமாக உருவாக்கப்பட்டிருக்கும் சுழல் – தி வோர்டெக்ஸ், தொடக்கத்திலிருந்தே பார்வையாளர்களை வியப்பிலும், திகைப்பிலும் ஆழ்த்தும் என்பது நிச்சயம். ஒரு திரில்லர் கதைப்பிரிவில் வழக்கமான கதை சொல்லல் என்பதை விட்டு விலகி ஒரு தனித்துவமான, புத்துணர்வு அளிக்கும் மாறுபட்ட கதையாக இருக்கிறது. இத்தகையதொரு சீரிஸ்-ன் ஒரு அங்கமாக என்னை இடம்பெறச் செய்வதற்கு என்மீது வைத்திருக்கிற நம்பிக்கைக்காக இதன் படைப்பாளிகள் மற்றும் இயக்குநர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றி. இதன் படப்பிடிப்பின்போது எங்களுக்குக் கிடைத்த வியப்பும் மகிழ்ச்சியும் இதை பார்க்கும் பார்வையாளர்களுக்கும் கண்டிப்பாக கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இத்தொடரின் கடைசி தருணம் வரை பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் எது நிகழப்போகிறது, எது நிஜம் என்ற தீவிர யோசனையிலேயே வைத்திருக்கும் என்று மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆகவே, இதுவரை பார்த்திராத ஒரு சிறப்பான திரில்லர் கதையையும், நேர்த்தியான பார்வை அனுபவத்தையும் பெற தயாராகுங்கள்.’’
இந்த சீரிஸ்-ல் ஒரு மைய கதாபாத்திரமாக நடிக்கும் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் பேசுகையில், ‘‘இந்த கதையோடு நீண்ட நாட்கள் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம் அதையே சுவாசித்திருக்கிறோம்; இந்த அற்புதமான அனுபவத்தில் பார்வையாளர்களும் பங்கு வகிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது சிறப்பான உணர்வைத் தருகிறது. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம். அனுசரணோடு சேர்ந்து புஷ்கரும், காயத்ரியும் இந்த சீரிஸ் நிறைவடைந்த பிறகும் நீண்டகாலம் பார்வையாளர்கள் மனங்களில் ஆழமாக பதிந்திருக்கக்கூடிய ஒரு வலுவான கதையை நேர்த்தியாக வழங்கும் மிகப்பெரிய பணியை செய்து வருகின்றனர். திரைப்படத் தொழில்துறையில் 40 ஆண்டுகாலம் இயங்கிய பிறகு இதுபோன்ற சீரிஸ் மூலம் எனது டிஜிட்டல் அறிமுகத்தை செய்திருப்பது, அதுவும் சிறப்பான நடிகர்கள் மற்றும் படைப்பாளிகளோடு சேர்ந்து செய்திருப்பது உண்மையிலேயே புத்துணர்ச்சி தரும் அனுபவமாகும். அமேஸான் பிரைம் வீடியோவில் பல்வேறு மொழிகளில் இந்த சீரிஸ்-ன் உலகளாவிய பிரிமீயர் நிகழ்வுக்காக ஆர்வத்தோடு நான் காத்திருக்கிறேன். இந்த கதையின் மையக்கரு கொண்டிருக்கும் பொதுவான அம்சத்தின் காரணமாக பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பிராந்தியங்களிலுள்ள வேறுபட்ட பார்வையாளர்களிடமும் பெரும் வரவேற்பை இது பெறும் என்று நான் நம்புகிறேன்.’’
Xxx
சுழல்-தி வோர்டெக்ஸ். பிரைம் வீடியோ தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான டிவி மற்றும் திரைப்படங்களுடன் இணையும். இவற்றுள் மும்பை டைரிஸ் தி ஃபேமிலி மேன், காமிக்ஸ்தான் செம காமெடி பா, ப்ரீத், இன்டு தி ஷேடோஸ், பேண்டிஸ் பேண்டிட்ஸ், பாதல் லோக், தாண்டவ், மிர்சாபூர் சீசன் 1&2, தி ஃபர்காட்டன் ஆர்மிமிர்சாபூர், ஆசாமிகீலியே, சன்ஸ் ஆஃப் தி சாயில்: ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், இன்சைடு எட்ஜ் மற்றும் மேட் இன் ஹெவன் போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் சீரிஸ் மற்றும் கூலி நம்பர் 1, குலோபோ சித்தாபோ, துர்காமதி, சாலாங், சகுந்தலா தேவி, பூமகள் வந்தாள், ஃபிரெஞ்ச் பிரியாணி, லா, சுஃபியும்சுஜாதையும், பென்குயின், நிசப்தம், மாறா, வி, CU Soon, சூரரைப்போற்று, பீமசேனநல மகாராஜா, த்ரிஷ்யம் 2, ஹலால் லவ் ஸ்டோரி, மிடில் கிளாஸ் மெலடிஸ், புத்தம் புது காலை, அன்பாஸ்டு ஆகிய திரைப்படங்களும் மற்றும் விருது வென்ற, உலகளவில் பிரபலமான அமேசான் ஒரிஜினல் சீரிஸ் நிகழ்ச்சிகளான டாம் கிளான்சி – ன் ஜேக் க்ரயான், தி பாய்ஸ், ஹண்ட்டர்ஸ், ஃபிளீபேக் மற்றும் தி மார்வெலஸ் மிஸர்ஸ். மெய்செல் ஆகியவற்றோடு சுழல்- தி வோர்டெக்ஸ் என்ற ஒரிஜினல் சீரிஸிம் இணைகிறது. இவையனைத்தும் அமேஸான் பிரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி கிடைக்கிறது. இச்சேவையில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுகு, கன்னடா, மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய இந்திய மொழிகளில் வெளிவந்திருக்கும் திரைப்படங்களும், டிவி நிகழ்ச்சிகளும் உள்ளடங்கும்.
பிரைம் உறுப்பினர்களால் பிரைம் வீடியோ செயலி மீது எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டீவி, ஃபயர் டிவி ஸ்டிக், பயர் டேப்லெட்ஸ், ஆப்பிள் டிவி ஆகியவற்றில் இந்த சீரிஸை காணமுடியும். பிரைம் வீடியோ செயலியில் தங்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் இந்த எபியோடுகளை பிரைம் உறுப்பினர்கள் பதிவிறக்கம் செய்துகொண்டு கூடுதல் கட்டணம் எதுவுமின்றி, எங்கிருந்தும் ஆஃப்லைனில் இதனை கண்டு ரசிக்கலாம். வருடத்திற்கு வெறும் ரூ.1499 அல்லது மாதத்திற்கு ரூ.179 என்ற கட்டணத்தில் பிரைம் மெம்பர்ஷிப்பில் எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி இந்தியாவில் பிரைம் வீடியோ கிடைக்கிறது. புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime என்ற வலைதளத்தில் அதிக தகவல்களை கண்டறியலாம் மற்றும் இலவசமாக 30 நாள் சோதனைஓட்டத்திற்கு சப்ஸ்க்ரைப் செய்யலாம்.











