மக்கள் செல்வன் நடிக்கும் ‘மாமனிதன்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

சென்னை 18 ஜூன் 2022 மக்கள் செல்வன் நடிக்கும் ‘மாமனிதன்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

யுவன்சங்கர் ராஜாவின் YSR FILMS தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி இணைந்து நடித்துள்ள இசையமைக்க போகிறார்கள் என்ற வாய்ப்பு எனக்கு வந்தபோது, சீனுராமசாமி தான் இந்த படத்தை இயக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். இந்த படம் ஒரு பெரிய அனுபவமாக பார்ப்பவர்க்கு இருக்கும்.

*இயக்குனர் சீனுராமசாமி கூறியதாவது…*

இந்த திரைப்படம் மூலமாக உலகமே விஜய் சேதுபதியை திரும்பிபார்க்க வேண்டும் என்று நான் விருப்பபடுகிறேன். முதலில் இந்த படத்தில் கார்த்திக் ராஜா- யுவன் சங்கர் ராஜா – இளையராஜா இசையமைப்பதாக இருந்தது. பின்னர் கார்த்திக் ராஜா ஒரு சில காரணத்தால் விலகிவிட்டார். இந்த கதை பலரால் நிராகரிக்கப்பட்டது. அப்போது தான் விஜய் சேதுபதி என்னை அழைத்தார். பின்னர் இந்த படம் ஆரம்பமானது இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்க முடிவெடுத்த போது, நான் அவர்களுக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த படம் இளையராஜா அவர்கள் வாழ்ந்த இடத்தில் படமாக்க விரும்பினேன். அவர் வாழ்ந்த தேனி பண்ணைபுரத்தில் இந்த படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டது. நடிகர்களுக்குள் இருக்கும் இயல்புணர்ச்சியை வெளிகொண்டுவருவதே என்னுடைய பணியாக இருந்தது. நான் பல நடிகைகளுக்கு கதை சொன்னேன். பலருக்கு இரண்டாம் பாதியில் விருப்பம் இல்லை. அப்போது காயத்ரி இந்த திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி நடித்துகொடுத்தார். இந்த படத்திற்கு கண்டிப்பாக காயத்ரிக்கு தேசியவிருது கிடைக்கும். இந்த படத்தை ஜீவா மற்றும் இளையராஜாவிற்கு அர்பணித்து இருக்கிறேன். நம்மை சுற்றியுள்ள மாமனிதர்களை அடையாளப் படுத்தும் படம் தான் இது. இந்த படத்தை நீங்கள் அனைவரும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த படத்தை பார்க்கும் மக்கள் உங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும். நன்றி.

error: Content is protected !!