காதலிக்கும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் ஏக் லவ் யா!
சென்னை 19 ஜூன் 2022 காதலிக்கும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் ஏக் லவ் யா!எனவே, எந்த காலகட்டமாக இருந்தாலும் நல்ல காதல் படங்களை கொண்டாடுவதில் ரசிகர்கள் தவறியதில்லை. அதிலும் காதலோடு தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப திரில்லரோடு வெளியான காதல் படங்களுக்கு வெற்றி உறுதி.
அப்படி ஒரு படம் தான் ஏக் லவ் யா. ரக்ஷிதா பிலிம் பேக்டரி சார்பில் ரக் ஷிதா பிரேம் தயாரித்துள்ள இப்படத்தை பிரேம்.எஸ் இயக்கியுள்ளார்.
இதில் ஹீரோவாக புதுமுக நடிகர் ராணா நடித்துள்ளார். ஹீரோயினாக ரச்சிதா ராம் நடித்துள்ளார். இவர்களுடன் சரன்ராஜ் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ரேஷ்மா நானய்யா, சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கதைப்படி, ஹீரோவின் முன்னாள் காதலி சில மர்ம நபர்களால் கற்பழிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்று விடுகிறார். இதற்கிடையே இந்த கற்பழிப்புக்கு ஹீரோ தான் காரணம் என்று கூறி அவர் மீது பழி போடுகிறார்கள். நிரபராதியன ஹீரோ தன் மீது விழுந்த பழியை துடைப்பததோடு, உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தர மிகப்பெரிய வக்கீலை எதிர்த்து போராடுகிறார். இத்தகைய போராட்டத்தில் ஹீரோ எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை ஆக்ஷன் திரில்லர் ஜானரில் சொல்வத்தொடு, இளைஞர்கள் காதலில் எப்படி நேர்மையாக இருக்கா வேண்டும் என்பதையும், உண்மையான காதல் பற்றியும் அழுத்தமாக சொல்லி காதலர்கள் மற்றும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது இப்படத்தின் கன்னட பதிப்பு ஏற்கனவே வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், ஏக் லவ் யா தமிழ் மற்றும் மலையாள பதிப்பு வரும் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஏக் லவ் யா படத்தின் தமிழ் மற்றும் மலையாள பதிப்பை இவானியா புரொடக்ஷன்ஸ் மற்றும் பிலிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் அபிலாஷ் நந்தகுமார் மற்றும் பிரசாத் கிருஷ்ணா தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறார்கள்.
அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ள இப்படத்திற்கு மகேன் சிம்ஹா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீநிவாஸ் பி.பாபு படத்தொகுப்பு செய்துள்ளார்.
Related posts:
இயக்குனர் பாஇரஞ்சித் தயாரிப்பில் கவனத்தை ஈர்க்கும் நடிகர் யோகிபாபு வின் பொம்மை நாயகி பிப்ரவரி 3ஆம் தேதி வெளியீடு.!!
தரமான வெற்றிப் திரைப்படங்களை தரும் நடிகர் “வெற்றி”!
தீபாவளி ரேஸில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த “மரிஜீவானா” திரைப்படம் !
நடிகை காவேரி கல்யாணி இயக்கத்தில், K2K புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சேத்தன் சீனு நடிக்கும் படத்தின் காதலர் தின சிறப்பு போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது.
அலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திருவாளர் பஞ்சாங்கம்!
இந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையுடன் வெளியாகும் கெட்டவன் பட இயக்குனரின் படைப்பு 10 லட்சம் ரூபாயில் உருவாக்கப்பட்ட டே நைட் திரைப்படம்
மூன்று நண்பர்களை காதலிக்கும் நாயகியாக மேக்னா நடிக்கும் ‘நான் வேற மாதிரி’..!
தமிழ் திரைப்பட உலகில் தரமான நல்ல படங்களை தருவதே எனது குறிக்கோள் இளம் ரசிகர்களை ஈர்க்கும் புதுமுகம் நடிகர் சிவ நிஷாந்த் !
நினைவில் நீங்கா, நகைச்சுவை நாயகர் “விவேக்” அவர்களுக்கான அஞ்சலியுடன், நடிகர் உதயநிதி நடிக்கும், “ஆர்ட்டிகள் 15” படத்தின் தமிழ் பதிப்பின் படப்பிடிப்பு !!!
எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சாந்தனு, மஹிமா நடிப்பில் ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குண்டுமல்லி’ வீடியோ பாடலை சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிட்டது.

