ரோஹிணி திரையரங்க வளாகத்திலுள்ள ‘மாயோன்’ பட கட்அவுட்டிற்கு பாலாபிசேகம்!
ரோஹிணி திரையரங்க வளாகத்திலுள்ள ‘மாயோன்’ திரைப்பட கட்அவுட்டிற்கு பாலாபிசேகம்!திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மாயோன்’ திரைப்படத்தைப் பற்றி திரையுலக ஆர்வலர்கள், ரசிகர்கள் என பலரும் நேர் மறையான விமர்சனங்களைத் தெரிவித்ததால், பொது விடுமுறை தினமான ஞாயிறன்று சென்னையிலுள்ள ரோஹிணி திரையரங்கத்திற்கு இப்படத்தைக் காண அதிகளவிலான ரசிகர்கள் சென்றனர்.
இது தொடர்பாக இப்படத்தைக் காண வந்த ரசிகர்கள் சிலர் பேசுகையில்,“இன்று விடுமுறை தினம் என்பதால் சென்னையிலுள்ள ரோஹிணி திரையரங்கத்தில் திரையிடப்பட்டிருக்கும் ‘மாயோன்’ படத்தைக் கண்டு ரசிக்க எங்கள் குடும்பத்துடன் வருகைத்தந்தோம்.
‘மாயோன்’ படத்தினைப் பார்த்த ரசிர்களின் விமர்சனத்தால் ஈர்க்கப்பட்டு, அறிவியல், ஆன்மீகம், ஆலயம் என சுவராசியமான விசயங்களை மையமாகக் கொண்டு, பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தைக் காண வருகைத்தந்த எங்களை, அந்த கிருஷ்ண பகவானே வரவேற்பு கொடுத்தது போலிருந்தது. என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பொதுவாக ‘அம்மன்’ படங்களுக்குத்தான் படக் குழுவினர் பிரம்மாண்டமான அளவில் அம்மனின் சிலைகளை வைத்து, ரசிகர்களை குறிப்பாக பெண் ரசிகைகளை கவர்வார்கள். ஆனால் கிருஷ்ண பகவானைப் பற்றிய படத்திற்கு சிறார்கள் கிருஷ்ண வேடமணிந்து வரவேற்பு அளித்ததுடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த கிருஷ்ணனின் கட்அவுட்டிற்கு பாலாபிசேகம் செய்யப்பட்டது பார்வையாளர்களை மட்டுமல்ல திரையுலகினரையும் ஆச்சரியப்படுத்தியது.
Related posts:
தமிழகத்தில் மாயோன் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு.. தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு.!!
மக்களை மகிழ்விக்கும் ‘மாயோன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!
14 வருடங்களுக்குப் பிறகு உலக நாயகன் கமல்ஹாசனின் கேள்விக்குக் கிடைத்த பதில் மாயோன் படக்குழுவினர் வெளியிட்ட அறிவிப்பு!!
நாளை வெளியாகும் சிபி சத்யராஜ் நடிப்பில் மாயோன் திரைப்படத்தை பார்வையற்றவர்களுக்காக சிறப்பு காட்சி!
மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் சிலம்பரசன் வெளியிட்ட ‘மாயோன்’ பட பாடல்.
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்: ‘மாயோன்’ படக்குழுவினர் வித்தியாசமான விழிப்புணர்வு முயற்சி.
மாயோன்’ பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்து வரும் பாராட்டு.
இசைஞானியின் ‘மாயோன்’ பட பாடலில் சொற்குற்றமா..?
மாயோன்” திரைப்படத்தின் டப்பிங்கை முடித்தார் நடிகர் சிபிராஜ் !
தமிழர் திருநாளில் ‘மாயோன்’ படக்குழுவினர் வழங்கும் இசைப் பரிசு – சிங்கார மதனமோகனா.

