ப்ரைம் வீடியோ அக்ஷய் குமார்- நடிப்பில் உருவான சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்தின் சிறப்பு ஸ்ட்ரீமிங் ஒளிபபரப்பை அறிவித்தது!
ப்ரைம் வீடியோ அக்ஷய் குமார்- நடிப்பில் உருவான சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்தின் சிறப்பு ஸ்ட்ரீமிங் ஒளிபபரப்பை அறிவித்தது!
அக்ஷய் குமார், மனுஷி சில்லர், சஞ்சய் தத், சோனு சூட் ஆகியோர் நடித்துள்ள ‘சாம்ராட் பிருத்விராஜ்’திரைப் படத்தை டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதி இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது .
ப்ரைம் உறுப்பினர்கள் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் உ240 நாடுகள் மற்றும் எல்லைப்பகுதியிலும் ஜூலை 01,2022 முதல் தனிப்பட்டு அமேசான் ப்ரைம் வீடியோவில் காணமுடியும்
வரம்புகள் இல்லாத வகையில் புத்தம் புதிய, மற்றும் தனித்துவமான திரைப்படங்கள், டிவி ஒளிபரப்புக்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்கள், விளம்பரங்கள் இல்லாத அமேசான் பிரைம் மியூசிக் இசை, இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு வரிசை தேர்வுகளை விரைவாகவும் இலவசமாகவும் வழங்கல், மதிப்பு மிக்க சலுகைகளை எளிதாக அணுகும் வசதி, பிரைம் ரீட்டிங்கில் எல்லையற்ற வாசிப்பு, பிரைம் கேமிங்கின் மொபைல் கேமிங் உள்ளடக்கங்கள், இவை அனைத்தையும் வருடாந்திர சந்தாவாக ரூ. 1499 மட்டுமேயான கட்டணத்தில் பணத்துக்கான ஒரு பிரமிக்கத்தக்க மதிப்பை அமேசான் ப்ரைம் வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பிரைம் வீடியோ மொபைல் பதிப்புக்கு சந்தா செலுத்துவதன் மூலம் சாம்ராட் பிருத்விராஜ்’ திரைப்படத்தை காணமுடியும் மேலும் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பானது, மொபைலில் மட்டுமே காணக்கூடிய ஒரு தனிநபர் பயன்பாட்டு திட்டமாகும், அது தற்போது ஏர் டெல் ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.
மும்பை, இந்தியா, 28 ஜூன், 2022 – அமேசான் ப்ரைம் வீடியோ வரலாற்று அதிரடி-சண்டைக் காட்சிகள் நிறைந்த சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்தின் பிரத்யேக முதல் காட்சி ஸ்ட்ரீமிங் செய்யப்படுவதை இன்று அறிவித்தது. இந்தியா மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள், ஜூலை 1, 2022 முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டவற்றோடு சேர்த்து ஹிந்தியிலும் இந்தத் திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்து கண்டு களிக்கலாம். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் டாக்டர். சந்திரபிரகாஷ் திவேதி இயக்கிய இந்தப் படத்தில் அக்ஷய் குமார்(Akshay Kumar), மனுஷி சில்லர், (Manushi Chillar) சஞ்சய் தத்(Sanjay Dutt), சோனு சூட்(Sonu Sood), மானவ் விஜ்(Manav Vij), அசுதோஷ் ராணா(Ashutosh Rana), மற்றும் சாக்ஷி தன்வார்(Sakshi Tanwar).ஆகியோர் அடங்கிய ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். பன்டி அவுர் பாப்லி 2 மற்றும் ஜெயேஷ்பாய் ஜோர்தாரைத் தொடர்ந்து, யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் (YRF) உடனான உரிம ஒப்பந்தம் மூலமாக ப்ரைம் வீடியோவில் முதல் காட்சியாக வெளியிடப்படும் மூன்றாவது திரைப்படமாக சாம்ராட் பிருத்விராஜ்.அமைந்துள்ளது
“எனது முப்பது ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில் இவ்வளவு பிரமாண்டமான சரித்திரப் பாத்திரத்தில் நான் நடித்ததேயில்லை,” என்று அக்ஷய் குமார் கூறினார் “சாம்ராட் பிருத்விராஜ் சௌஹானின் வாழ்க்கையை திரையில் கொண்டு வர முடிந்ததை எண்ணி நான் பெருமையாக உணர்கிறேன். இப்போது ஜூலை 1 முதல் இந்த வரலாற்றுக் காவியத்தை அமேசான் பிரைம் வீடியோ மூலம் ஒவ்வொரு இல்லத்திற்கும் கொண்டு செல்வதில் நான் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறேன் மற்றும் இந்த ஊடகத்தின் மூலம் ஒரு தலை சிறந்த இந்தியப் போர்வீரரும் வலிமைமிக்க பேரரசருமான சாம்ராட் பிருத்விராஜ் சவுகானின் எழுச்சியூட்டும் கதை உலகம் முழுவதும் சென்றடையப்போகிறது என்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.”
புகழ்பெற்ற மும்மூர்த்திகளான ஷங்கர்-எஹ்சான்-லோய் ஆகியோரின் இசையில், இந்திய வரலாற்றில் மிகப் பெரிய மன்னர்கள் மற்றும் அச்சமறியாத மாவீரர்கள் வரிசையில் ஒருவரான சஹாமானா வம்சத்தைச் சேர்ந்த பிருத்விராஜ் சௌஹானின் எழுச்சியூட்டும் மற்றும் பொழுதுபோக்கு காவியத்தை இந்த சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படம் முன்வைக்கிறது . கவிஞர் சந்த் வர்தாய் எழுதிய ‘பிருத்விராஜ் ராசோ’ என்ற காவியக் கவிதையை அடிப்படையாகக் கொண்ட இந்த வரலாற்று அதிரடி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் கதை நாயகன் பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.











