வேதிகாவின் அதிரடி ஆக்ஷன் மற்றும் சாகசங்களுடன் உருவாகும் தமிழ் பான் இந்தியா படம் ‘கஜானா’!
சென்னை 03 ஜூலை 2022 வேதிகாவின் அதிரடி ஆக்ஷன் மற்றும் சாகசங்களுடன் உருவாகும் தமிழ் பான் இந்தியா படம் ‘கஜானா’!‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘நேஷ்னல் டிரஸ்சர்’ போன்ற சாகச ஹாலிவுட் படங்களுக்கு இணையான, மாயமந்திர காட்சிகளும், யானை, புலி, பாம்பு போன்ற மிருகங்களின் சாகசக் காட்சிகளோடு மிக பிரம்மாண்டமான சாகச திரைப்படமாக உருவாகிறது.
இதில் வேதிகா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை நடனத்திற்காக பாராட்டு பெற்ற வேதிகா, இப்படத்தில் அதிரடி ஆக்ஷன் அவதாரம் எடுத்திருப்பதோடு பல சாகச காட்சிகளிலும் நடித்திருக்கிறார். அந்த காட்சிகள் படத்திற்கு கூதல் பலம் சேர்த்திருப்பதோடு, ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்.
வேதிகா ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருப்பதோடு, ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அழகில் கிரங்கடிக்கவும் செய்வார்.
மேலும், இனிகோ பிரபாகர், சாந்தினி, யோகி பாபு, பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Squar Studios) நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்குகிறார்.
VFX தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய முழு விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
இப்படத்தின் முந்தைய தலைப்பால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், தற்போது ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுவது மற்றும் பான் இந்தியா சாக திரைப்படமாக உருவாகி வருவது பற்றிய தகவல்கள் வெளியானதால் இப்படத்தை பற்றி கோலிவுட் பிரபலங்களும் பேச தொடங்கியிருக்கிறார்கள்.
Related posts:
திகில், காமெடி நிறைந்த சாகச திரைப்படமாக உருவாகும் ‘கஜானா’
இதுவரை நடிக்காத வேடத்தில் ‘யோகி பாபு’! – காமெடி சரவெடியாக உருவாகி வரும் ‘வீரப்பனின் கஜானா’
விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகும் ஃபான் இந்தியா படம் ‘ஜின்னா!
நடிகர் நானி மற்றும் சுதீர் பாபுவின் அதிரடி திரில்லர் படமான ‘V’ இப்பொழுது தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஒளிபரப்பப்படுகிறது.
நடிகர் மோகன் பாபுவின் ‘சன் ஆஃப் இந்தியா’ படம் வெற்றி பெற இசைஞானி இளையராஜா வாழ்த்து.
வீரப்பனின் கஜானா – (காட்டின் காவலன்)
நடிகர் நிகில், இயக்குநர் கேரி BH மற்றும் ED Entertainment இணையும், பான் இந்திய பிரமாண்ட திரைப்படம் “ஸ்பை” !
நடிகை ஷிவானி ராஜசேகர் ‘ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு’ பட்டத்தை பெற்று, ‘மிஸ் இந்தியா’ கிரீடத்திற்காக 31 போட்டியாளர்களுடன் போட்டியிடவுள்ளார் !
ஆர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளன.!
பாட்ஷா கிச்சா சுதீப் நடிப்பில், பான் வேர்ல்ட் 3-D ஃபேண்டஸி திரைப்படம் “விக்ராந்த் ரோணா” 2022 ஜூலை 28 உலமெங்கும் வெளியாகிறது !

