பிரபல நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர் மற்றும் லலிதா ஷோபி மாஸ்டர் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது!!!
சென்னை 22 ஜூலை 2022 பிரபல நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர் மற்றும் லலிதா ஷோபி மாஸ்டர் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது!!!
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல முன்னணி பல படங்களில் பணியாற்றிய நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர் மற்று லலிதா ஷோபி மாஸ்டர் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
இந்திய திரையுலகம் முழுக்க பிரபலமானவர் நடன இயக்குநர் ஷோபி. 2004 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம் பி பி எஸ்’ படம் மூலம் நடன இயக்குநராக திரைத் துறையில் அறிமுகமானவர் ஷோபி. திரைத்துறையில் பல முன்னணி நட்சத்திரங்களுடனும், பிரம்மாண்ட படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றி புகழ் பெற்றவர்.
ஷோபி மாஸ்டர், லலிதா ஷோபி மாஸ்டர் இருவரும் இணைந்து ஒரு நடன பள்ளியை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தான் லலிதா ஷோபி மாஸ்டருக்கு கோலகலமாக வளைகாப்பு நடைபெற்றது.
இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு தனியார் மருத்துவமனையில் லலிதா மாஸ்டர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தற்போது தாய் சேய் இருவரும் பூரண நலத்துடன் உள்ளனர். அன்பும் பாரட்டுக்களும் தெரிவித்த ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஷோபி மாஸ்டர் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.
Related posts:
“விக்ரம்” பட வெற்றிக்கு வாழ்த்து கூறி, தனது குடும்பத்துடன் குரு கமலஹாசனிடம் ஆசி பெற்றுள்ளனர் நடன இயக்குநர்கள் ஷோபி மற்றும் லலிதா ஷோபி!
சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலமாக நடன இயக்குனர் லலிதா ஷோபி க்கு கிடைத்த பெருமை.
சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை – நடன இயக்குநர் லலிதா ஷோபி
நடிகர் சௌந்தரராஜா தமன்னா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இயக்குனர் பா ரஞ்சித்துக்கு இரண்டாவது குழந்தை – திரையுலகினர் வாழ்த்து !
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த இரு பிரபல இயக்குநர்கள்.
ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு
இன்றைய இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை கூகுள் குட்டப்பா திரைப்பட விழாவில் பிரபல இயக்குநர் ஆவேச பேச்சு.
தென்னிந்திய திரைத்துறையின் பிரபல நடிகர் சரண்ராஜ் இரண்டாவது மகன், தேவ் சரண்ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார்.
குழந்தை மற்றும் அவரது செல்லப்பிராணி பற்றிய ஒரு மாயாஜால கதை தான் ஓ மை டாக்.

