ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் சம்பவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!!

சென்னை 24 ஜூலை 2022 ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் சம்பவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!!

இதன் துவக்க விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் திருமலை, மகேந்திரகுமார் நாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஸ்ரீகாந்த், நட்டி கதை நாயகர்களாக நடிக்க, கதை நாயகிகளாக பூர்ணா, ஸ்வேதா அவஸ்தி நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தரா டிராவல்ஸ் படத்தின் நாயகி ராதா நடிக்கிறார். மேலும் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ஜெயபிரகாஷ், கே.ராஜன், மகேந்திரகுமார் நாகர், சிங்கம்புலி, நாஞ்சில் சம்பத், விஜய் டிவி முல்லை மற்றும் பல நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.

உயிருக்கு போராடும் தனது மகளை காப்பாற்ற துடிக்கும் ஒரு தந்தையும், இந்த சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதனும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது நடைபெறும் சம்பவமே கதையின் மையக்கரு.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் பா.ரஞ்சித்குமார், இவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் இணைஇயக்குனராக பணிபுரிந்தவர். ஒளிப்பதிவை இனியன் ஜே ஹாரிஸ் கவனிக்க இசை அம்ரீஷ், படத்தொகுப்பு சந்திரகுமார், பாடல்கள் கவிஞர் முருகானந்தம் எழுத, கலையை ஏ.பழனிவேல் கையாளுகிறார். ஸ்டண்ட் ராஜசேகர், தயாரிப்பு மேற்பார்வை சங்கர், நிர்வாக தயாரிப்பு ஜோஸ், வரைகலை தினேஷ் அசோக், மக்கள் தொடர்பு ஆர்.குமரேசன்.

மைனா, சாட்டை, மொசக்குட்டி, சௌகார்பேட்டை, பொட்டு, கா ஆகிய படங்களை தொடர்ந்து பிரம்மாண்டமான பொருள் செலவில் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.