வெளியீடான -சார்பட்டா பரம்பரை, பார்வையாளர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

Chennai 02 August 2021

PRIME DAY 2021 2021 வெளியீடான -சார்பட்டா பரம்பரை, பார்வையாளர்களின் அமோக வரவேற்பை பெற்றது

இந்தியாவில் Amazon Prime Video-வை காணும் மொத்த நகரங்களில் 80% பார்வையாளர்களையும் உலகளவில் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள பார்வையாளர்களையும் ஈர்த்துள்ளது.

PRIME day கொண்ட இந்த மாதம் இந்தியாவின் Amazon Prime Video பார்வையாளர்கள் அதிகபட்ச அளவில் ஸ்ட்ரீம் செய்து சேவைகளை அனுபவித்த மாதமாகும்

மும்பை, இந்தியா, xx – Prime Day சார்ந்த வெளியீட்டின் ஒரு பகுதியாக தமிழ் மொழியில் வெளிவந்த விளையாட்டு சார்ந்த திரைப்படமான சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படம் Amazon Prime Video மூலம் ஜூலை 22 அன்று திரையிடப்பட்டது.

பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்துள்ள இத்திரைப்படம் உலகம் முழுவதும் பார்வையாளர்களிடமிருந்தும் மற்றும் விமர்சகர்களிடமிருந்தும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான ஸ்ட்ரீமர்கள் இச்சேவையில் உள்ளடக்கத்த்தை அனுபவித்து வரும் நிலையில், PrimeDay கொண்ட இந்த மாதம், இந்தியாவில் 3200+ நகரங்கள் மற்றும் உலகம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பெறும் அளவிலான பார்வையாளர்கள் சார்பட்டா பரம்பரை உட்பட பல தென்னிந்தியத் திரைப்படங்களைக் காண Amazon Prime Video-வின் சேவையை அதிக அளவு ஸ்ட்ரீம் செய்த மாதமாக உருவெடுத்துள்ளது .

70களின் பின்னணியில் அமைக்கப்பட்ட இத் திரைப்படம், வட சென்னையின் பலர் அறியாத பக்கமான, மெட்ராஸின் பல்வேறு குத்துச்சண்டை பரம்பரையை 150 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள பார்வையாளர்களைக்கு அறிமுகப்படுத்தியது.

ஆர்யாவுடன், பசுபதி, ஜான் விஜய், சந்தோஷ் பிரதாப், ஜான் கோக்கன், சஞ்சனா நடராஜன் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ட்ரீமிங் சேவையில் சார்பட்டா பரம்பரையின் வெற்றியைப் பற்றி நடிகர் ஆர்யா கூறுகையில்,

சார்பட்டா பரம்பரை ஒரு அற்புதமான பிராஜக்ட் ஆகும்! இரத்தம், வியர்வை மற்றும் கண்ணீர் -என என்னால் முடிந்த அனைத்தையும் இதில் வெளிக்காட்டியுள்ளேன்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடமிருந்து நான் பெறும் அன்பும் பாராட்டும் இம்முயற்சியில் பலனை வெளிப்படுத்துகிறது.

Prime Day வெளியீட்டின் ஒரு பகுதியாக சார்பட்டா பரம்பரை Amazon Prime Videoஇல் வெளியிட்டது, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப எந்த நேரத்திலும், காண உதவிகரமாக அமைந்தது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

வெளியான பத்து நாட்களுக்குள் 150-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள பார்வையாளர்கள் திரைப்படத்தைக் கண்டு ரசித்துள்ளார்கள் என்பது உவகை அளிக்கிறது!

எனது ரசிகர்களுக்கும், இந்தத் திரைப்படத்தை உருவாக்கப் பங்களித்த குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

உலகெங்கிலும் உள்ள சினிமா பிரியர்களுக்கு திரைப்படத்தை எடுத்துச் சென்ற Amazonக்கு எனது சிறப்பு நன்றிகளும் பாராட்டுகளும். உங்கள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் பலன் அளித்ததைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! ” என்றார்.

இந்த Prime Day நாளில், Prime மெம்பர்கள் மெகா பொழுதுபோக்கு விருந்தைப் பெற்றனர்: பல மொழிகளைச் சார்ந்த திரைப்படங்கள் இந்நாளில் உலகளவில் அரங்கேறியது.

இந்தப் பட்டியலில் தூஃபான் (ஹிந்தி), மலிக் (மலையாளம்), இக்கத் (கன்னடம்) மற்றும் சார்பட்டா பரம்பரை (தமிழ்/தெலுங்கு) போன்ற படங்கள் அடங்கும்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் PrimeDay உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்து மகிழ்ந்துள்ளனர்:

  • Prime Day சார்ந்த வெளியீடுகளின் பிரத்யேக பொழுதுபோக்கு வரிசையால் வாடிக்கையாளர்கள் மிகவும் பரவசமடைந்தனர். நாடு முழுவதும் 4400க்கும் மேற்பட்ட நகரங்களில் Prime வீடியோ கண்டு ரசிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், 190க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்தும் வாடிக்கையாளர்களால் இத்திரைப்படங்கள் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது குறிப்படத்தக்கது.
  • சார்பட்டா பரம்பரை (தமிழ்), நாரப்பா (தெலுங்கு) மற்றும் மலிக் (மலையாளம்) ஆகிய திரைப்பாடல் இந்தியாவில் 3200க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் உலகளாவிய ரீதியில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் கண்டு ரசிக்கப்பட்டது, இது இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் வளர்ந்து வரும் பார்வையாளர் எண்ணிக்கை மற்றும் உள்ளூர் மொழித் திரைப்படங்கள் பிரபலமாகி வருவதை எடுத்துக்காட்டுகிறது.
  • இந்தியாவில் 3600-க்கும் நகரங்கள் மற்றும் உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து பார்வையாளர்களைக் கொண்ட ஹாஸ்டல் டேஸ் (S2)வெளியிடப்பட்ட ஒரு வாரத்திற்குள் இளம் வயது வந்தோர் மிகவும் விரும்பிக் காணும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது
  • வெளியிட்ட 7 நாட்களுக்குள், மற்ற எந்த இந்தி திரைபடத்தையும் விட ஆரம்ப வாரத்தில் Prime Video-இல் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களால் காணப்பட்ட திரைப்படமாக தூஃபான் நிலை நாட்டியுள்ளது. இத் திரைப்படம் இந்தியாவில் 3900க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள 160க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அற்புதமான திரைப்படங்களை நீங்கள் இன்னும் ஸ்ட்ரீம் செய்யவில்லை என்றால், இந்த வார இறுதியில் காண வேண்டிய திரைப்படங்களின் பட்டியலை உருவாக்க வேண்டிய நேரம் இது!

error: Content is protected !!