நடிகை  சன்னி லியோன் நடிக்கும், ஹாரர் காமெடி திரைப்படம், (OMG) ஓ மை கோஸ்ட் ” !

சென்னை 03 செப்டம்பர் 2021 நடிகை  சன்னி லியோன் நடிக்கும், ஹாரர் காமெடி திரைப்படம், (OMG) ஓ மை கோஸ்ட் ” !

நடிகை சன்னி லியோன் தமிழ் திரையுலகில், வரலாற்று பின்னணியில்,  உருவாகும் ஹாரர் காமெடி படம் மூலம், தன் திரைப்பயனத்தை துவங்குகிறார்.

இந்த திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே பெரும் பரபரப்பை கிளப்பி வரும் இப்படத்திற்கு  “OH MY GHOST (OMG) ஓ மை கோஸ்ட் ” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

VAU Media Entertainment, சார்பில் D. வீரா  சக்தி படத்தலைப்பு  குறித்து கூறியதாவது…

“பொதுவாக, OMG (OH MY GOD) என்பது இன்று அனைவரிடமும் வழக்கத்தில் புழங்ககூடிய ஒரு முக்கியமான வார்த்தை பிரயோகம்  ஆகும்.

மேலும்   உரையாடலின் போது ஆச்சரியமான எந்த  ஒன்றையும் தெரிவிக்கும் போது OMG (OH MY GOD) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

எங்கள் திரைப்படமும் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் தரும் பல விசயங்களை கொண்டிருப்பதால்,  OMG – OH MY GHOST, தலைப்பு  பொருத்தமான ஒன்றாக இருக்கும் என்று நாங்கள் நம்பினோம்.

ரசிகர்கள் ஒரு மாறுபட்ட பேயை இப்படத்தில் பார்ப்பார்கள்.

இப்படம்  இதுவரையிலும் நாம் திரையில் கண்டிராத  ஒரு வித்தியாமான ஹாரர் அனுபவத்தை தரும் என்றார்.

சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, பிரபல நடிகை தர்ஷா குப்தா, நடிகர் சதீஷ் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்க துரை மற்றும் சில முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

‘சிந்தனை செய்’ படத்தை இயக்கி, புகழ் பெற்ற இயக்குநர் R.யுவன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

VAU MEDIA ENTERTAINMENT & WHITE HORSE STUDIOS  சார்பில், D. வீரா  சக்தி  & K. சசிகுமார் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

“OH MY GHOST (OMG) ஓ மை கோஸ்ட் ”  படத்தின் படப்பிடிப்பு மிக கோலகலமாக நடந்து வருகிறது.

விரைவில் நடிகை சன்னி லியோன் படப்பிடிப்பில் இணையவுள்ளார்.